Published:Updated:

60-க்கு மேலும் வாழ்வை அழகாக்கும் ஆலோசனைகள்... ஆனந்த விகடனின் `ஹலோ சீனியர்ஸ்' ஆன்லைன் நிகழ்ச்சி!

ஹலோ சீனியர்ஸ்
ஹலோ சீனியர்ஸ்

மூத்த குடிமக்களின் சவால்களில் ஒன்று பாதுகாப்பு. வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை அனைவருக்கும் உண்டு. யாரையும் நம்பியிருக்காமல் தங்களின் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ளும் ரகசியத்தை அவர்களுக்குக் கற்றுத்தருவதும் மிகவும் பயனுள்ளது.

யசூர் வேதத்தில் காணப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று 'முதுமை வேண்டும்' என்பது. காரணம் முதுமையும் முதுமைக்கால அனுபவங்களும் வாழ்வை முழுமையாக்குவதோடு வாழும் தலைமுறைக்கு வழிகாட்டும் அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன. ஆனால் சமகாலத்தில் முதுமை பெரும் சுமையென எண்ணும் மனோபாவம் சிலரிடம் மிகுந்துள்ளது. உடல் சார்ந்த பிரச்னைகள், மனம் சார்ந்த சோர்வுகளுமே அதற்குக் காரணம். குறிப்பாக கொரோனா காலச் சூழல் அவர்களை இன்னும் கடுமையான கெடுபிடிகளுக்குள் வைத்திருக்கிறது.

முதுமை
முதுமை
நம் குடும்பங்களின் ஆணிவேராகவும் பெருமையாகவும் திகழும் நம் மூத்தோரைக் கொண்டாட நமக்கு வாய்த்திருக்கும் தினமே அக்டோபர் 1. உலக முதியோர் தினமாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் அவர்களுக்கான ஒரு பரிசாக அமைய இருக்கிறது ஆனந்த விகடன் நடத்தும் 'ஹலோ சீனியர்ஸ்' ஆன்லைன் நிகழ்வு.

கொரோனா அச்சம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது. இவற்றிலிருந்து வெளியேறி நோய் குறித்தும் உடல் இயந்திரத்தின் இயக்கம் குறித்தும் ஒரு சிறிய வழிகாட்டலைச் செய்வதன் மூலமே அவர்களின் அச்சத்தை நீக்கி மகிழ்வோடு வாழ உதவலாம். மூத்த குடிமக்களின் சவால்களில் ஒன்று பாதுகாப்பு. வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால், யாரையும் நம்பிருக்காமல் தங்களின் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ள முடியும் என்கிற ரகசியத்தை அவர்களுக்குக் கற்றுத்தருவதும் மிகவும் பயனுள்ளது. இவற்றைச் செய்வதன் மூலம் முதுமையை அவர்கள் பெருமையோடு வாழ உதவ முடியும்.

ஹலோ சீனியர்ஸ்
ஹலோ சீனியர்ஸ்

இந்த மூன்றுக்கும் உதவும் வண்ணமே 'ஹலோ சீனியர்ஸ்' நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களோடு வாஞ்ஞையோடு பேச பட்டிமன்றம் ராஜா காத்திருக்கிறார். அவர்களின் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களைத் தர காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் அன்போடு கலந்துகொள்கிறார். முதுமை சார்ந்த உடலியல் சிக்கல்களைப் புரிந்துகொள்வது குறித்து விழிப்புணர்வு வழங்க டாக்டர் பி. ஹரிசங்கர் கலந்துகொண்டு விளக்க இருக்கிறார். இந்த நிகழ்வில் கலந்துகொள்வது ஓர் இனிய அனுபவமாக இருக்கும். நீங்கள் முத்த குடிமகனாக இருந்தால் தவறாமல் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள். இளையோராய் இருந்தால் பெற்றோர் மற்றும் வயதான முதியவர்கள் கலந்துகொள்ள ஊக்குவியுங்கள். அந்த நாளின் இனிய மாலையை பயனுள்ள மாலையாக மாற்றுவோம்.

நாள்: அக்டோபர் - 1

நேரம்: மாலை 4.00 - 6.00 மணி

நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு