Published:Updated:

AV Spaces: `என் உயிரினும் மேலான...' கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் சிறப்பு ஸ்பேசஸ்!

மு.கருணாநிதி பிறந்தநாள் ஸ்பேசஸ்
மு.கருணாநிதி பிறந்தநாள் ஸ்பேசஸ்

இன்று இரவு ஏழு மணிக்கு வாருங்கள் உரையாடுவோம். அரசியல் பிரபலங்களுடன் நாமும் நம் முன்னாள் முதல்வர் குறித்து கலந்துரையாடலாம்.

இன்று தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாள். ட்விட்டரில் புதிதாக spaces என்கிற வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் நம்மால் உரையாட முடியும். எழுதிக்கொண்டு மட்டுமே இருந்த ஒரு தளத்தில் தற்போது உரையாடல் தொடங்கியிருக்கிறது. டீக்கடை பெஞ்சு போலத்தான்.

கணினி பயன்பாட்டுக்கு வந்தபோது, கருணாநிதி தானாகவே முன்வந்து கணினி கற்றுக்கொண்டார். ஃபேஸ்புக் என்னும் சமூகவலைதளத்துக்கு வந்த முதல் அரசியல் தலைவரும் கருணாநிதிதான். காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்ட நவீன உணர்வுதான் அவரை உயிரோட்டத்துடன் இயங்கவைத்தது.

ட்விட்டரில் அவர் எப்போதோ இட்ட ட்வீட்டுகள் இன்னும் ரீட்வீட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால், நிச்சயம் காலையில் ஸ்பேசஸில் தன் உடன்பிறப்புகளுடன், 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே...' என உரையாடி இருப்பார்.

இன்று இரவு ஏழு மணிக்கு வாருங்கள் உரையாடுவோம். அரசியல் பிரபலங்களுடன் நாமும் நம் முன்னாள் முதல்வர் குறித்து கலந்துரையாடலாம்.

கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஆனந்த விகடன் ட்விட்டர் பக்கத்துக்குச் செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு