Election bannerElection banner
Published:Updated:

சிக்கலான வாழ்வில் சிந்தனை தெளிய... `மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! - 5G'

'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!'
'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!'

புதிய பிரச்னைகளுக்குப் புதிய தீர்வுகள் என்ற வகையில், தொழில்நுட்ப உதவியுடன் ‘இனியும் இனிது’ என்ற நவீன வடிவமெடுத்திருக்கிறது ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’

நவீன வாழ்க்கைமுறை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இன்றைவிட நாளை இன்னும் மேம்பட்டிருக்க வேண்டும் என்ற ஆசையில், வாழ்வை மேம்படுத்த நவீன மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதனால் உடலளவிலும், மனதளவிலும் நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம். நவீன வாழ்க்கைமுறை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடிகள் நம்முடைய நிம்மதியைக் காணாமல் செய்திருக்கின்றன; மனம் எப்போதும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருப்பதால் நிரந்தர மன அழுத்ததில் நாம் வீழ்ந்துவிட்டோம். மறுபுறம், முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடல்நலனும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகிறோம்.

Stress
Stress

இவையெல்லாம் போதாதென்று, கொரோனா பெருந்தொற்று நம் வாழ்வை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இருக்கும் நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி என்று திணறிக் கொண்டிருந்த நம்மை, கொரோனா ஸ்தம்பித்து நிற்க வைத்தது. உடல், மனம், தொழில் என அனைத்தையும் இந்தக் கொரோனா காலகட்டம் உலுக்கி எடுத்துவிட்டது. இந்த நிலையிலிருந்து மீள முடியுமா? இந்தச் சிக்கல்களுக்கு என்னதான் தீர்வு? வழிகாட்டுகிறார் சுவாமி சுகபோதானந்தா!

பக்திமார்க்கம் போதிக்கும் சமயக் கருத்துக்களாக அல்லாமல், சுய சிந்தனையில் தெளிவு ஏற்படுத்தும் வாழ்வியல் கருத்துக்களைத் தாங்கி ஆனந்த விகடனில் வெளியான வெற்றித் தொடர், சுவாமி சுகபோதானந்தா எழுதிய 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!'. வெளியான காலகட்டத்தில் லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், அவர்கள் வாழ்வில் மாற்றத்தையும் இந்த வாழ்வியல் தொடர் ஏற்படுத்தியது. குடும்ப உறவுகளை வளர்ப்பது தொடங்கி ஒரு மனிதரின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான கருத்துக்கள் வரை தொட்டுச் சென்ற இந்தத் தொடர், மிக எளிய வழிகாட்டியாகத் திகழ்ந்தது.

நவீன வாழ்க்கை, அதற்கே உரிய புதிய பிரச்னைகளை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறது. இந்தப் புதிய வாழ்வின் தேவைகள், பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு, ஆனந்த விகடனில் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! 5G’ என்ற புதிய தொடரின் மூலம் மீண்டும் வருகிறார் சுவாமி சுகபோதானந்தா. மொபைல், இணையம், ஓடிடி, துரித உணவுகள் என அதிவேகமாகப் பயணிக்கும் மில்லேனியல் இளைஞர்களின் சிந்தனைத் தடத்தைப் புரிந்துகொண்டு, புதிய பிரச்னைகளுக்குப் புதிய தீர்வுகள் என்ற வகையில், தொழில்நுட்ப உதவியுடன் ‘இனியும் இனிது’ என்ற நவீன வடிவமெடுத்திருக்கிறது ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’.

இனியும் இனிது
இனியும் இனிது
காலம் மாறிவிட்டது; தொழில்நுட்பங்கள் மேம்பட்டுவிட்டன. எழுத்தாளர்களும் நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக வாசகர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில், இணையம் வாயிலாக ஏப்ரல் 3-ம் தேதி, சனிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சுவாமி சுகபோதானந்தா உங்களோடு உரையாடவிருக்கிறார். உங்களை வாட்டும் பிரச்னைகளுக்கு எளிய தீர்வளிக்கவிருக்கிறார்; உங்களை வதைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவிருக்கிறார். உங்கள் கேள்விகளை relax@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்; அல்லது நிகழ்வு நடைபெறும்போது, சாட் பாக்சிலும் (chatbox) கேள்விகளை அனுப்பலாம்.

அனுமதி இலவசம்; முன்பதிவு கட்டாயம். நிகழ்வில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சிக்கலான வாழ்வில், சிந்தனை தெளிவோம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு