"கூட்டிக் கழிச்சுப் பாரு, கணக்கு சரியா இருக்கும்''
ரஜினி நடித்த 'அண்ணாமலை' படத்தில் வரும் பிரபலமான டயலாக் இது. பூமியில் வந்து பிறப்பதற்கு முன்பே 'தாயின் வயிற்றில் பத்து மாதம்' என கணக்கு நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வந்து விடுகிறது. பிறகு ஆண்டொன்று நகரும் போது வயதின் கணக்கில் ஒன்று கூடுகிறது. தொடர்ந்து, பள்ளிக்கூடம் போனதும், 'மனக்கணக்கு', சம்பாதிக்கத் தொடங்கியதும் பணக் கணக்கு' என, வேறு வழியே இல்லை... ஏராளமான கணக்குகளைக் கடந்தே ஆக வேண்டும்.
'ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்' என்பன போன்ற பழமொழிகளின் மூலமும் கணக்கின் அவசியத்தை உணரலாம்.
இப்படி விடாது நமமைத் துரத்துவதாலேயோ என்னவோ, சிலருக்கு மாணவப் பருவத்திலேயே கணக்குடன் பிணக்கு உண்டாக, தெறித்து ஓடுகிறார்கள்.
ஆனால், "கணக்கை ஒரு பாடமாகவே நினைக்க வேண்டியதில்லை, விளையாட்டாக, வேடிக்கையாக்கூடக் கத்துக்கலாம்" என்கிறார், கணிதத்தை மாணவர்களுக்குச் சுலபமாகச் சொல்லித் தந்து வரும் 'பிரைன்கார்வ்' நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஸ்வரி.

"கணக்கு ஒரு சிலர் நினைக்கிற மாதிரி பயமுறுத்துகிற விஷயமே இல்லை. யு.கே.ஜி வயசுல இருக்கிற குழந்தைக்குமே புரிகிற அளவுக்கு பயிற்சிகள் இருக்கு. அஞ்சாவது வகுப்புக்கு மேல படிக்கிற பையன்லாம் ஒரு கணக்கைக் கண்ணால பார்த்ததும், ஒரு செகண்ட்ல மைன்ட்லயே கால்குலேட் போட்டுடலாம்" என்கிற இவர் ஆனந்த விகடனுடன் கைகோர்க்க, 'கணக்கு இனி கசக்காது' ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் உங்களது குழந்தைகளுக்காகவே நடக்க இருக்கின்றன.
4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் 24/10/20 மற்றும் 31/10/20 ஆகிய நாட்களில் நடைபெறுகின்றன. நேரம் மாலை 4 முதல் 6 மணி வரை. பயிற்சிக் கட்டணம் ரூ.400 மட்டுமே.