Published:Updated:

வணிகர்களைப் பெருமைப்படுத்தும் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்!

விருது
விருது

விருது வழங்கப்படவிருக்கும் ஒன்பது பிரிவுகள்

திறமையாளர்களை அங்கீகரித்து பெருமைப்படுத்துவதில் விகடன் எப்போதுமே முன்னணியில் நிற்கிறது. பிசினஸ் உலகில் வெற்றிக்கொடி நாட்டும் ஜாம்பவான்களுக்கு ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு’ விருதுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக நாணயம் விகடன் வெற்றிகரமாக வழங்கிவருவதை அறிவீர்கள்.

இந்தப் பயணத்தில் அடுத்த மைல்கல், நாணயம் விகடன் மற்றும் மார்க்கெட் ஆஃப் இந்தியா இணைந்து வழங்கும் `டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்.’ வர்த்தகத்துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் டிரேடர்களுக்கு, கீழ்க்கண்ட ஒன்பது பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

ஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கேமரா, கட்டுமானத்துறைப் பொருள்கள், பேக்கேஜ்டு ஃபுட்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் நிறுவனங்கள், ஃபர்னிச்சர், வாட்சஸ், காஸ்மெட்டிக்ஸ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ஜவுளி, விளையாட்டுப் பொருள்களுக்கான கடைகள், செல்போன் விற்பனை நிறுவனங்கள், மருந்துப் பொருள்களை விற்கும் கடைகள் என அனைத்துத் துறை சார்ந்த வர்த்தகர்களும் இந்த விருதுகளைப் பெற நாமினேஷனை அனுப்பலாம். உங்களுக்கு நன்கு தெரிந்த, விருதுக்குத் தகுதியான நிறுவனங்களின் பெயர்களையும் பரிந்துரைக்கலாம். வணிக அமைப்புகளும், நன்கு செயல்படும் வர்த்தக நிறுவனங்களைப் பரிந்துரை செய்யலாம். சென்னை நீங்கலாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள அனைத்து மாவட்ட டிரேடர்களும் இந்த விருதுகளைப் பெறுவதற்கான பரிந்துரையில் இடம்பெறலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகள் இந்த விருதுத் தேர்வுக்காக கோவை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், திருநெல்வேலி என பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பத்து நகரங்களை சுற்றியுள்ள மாவட்டங்கள் அந்த மண்டலங்களில் சேர்க்கப்படும். விருது வழங்கும் நிகழ்ச்சி, மண்டலவாரியாக இந்தப் பத்து நகரங்களில் நடத்தப்படும். இதைப் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விருது வழங்கப்படவிருக்கும் ஒன்பது பிரிவுகள்

வணிகர்களைப் பெருமைப்படுத்தும் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்!

விருதுக்கான நாமினேஷன், பரிந்துரைகளை அனுப்ப, இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்: http://bit.ly/NVTCAwards

அடுத்த கட்டுரைக்கு