இந்நேரம் அரையாண்டு பரீட்சைக்கு தயாராக வேண்டிய மாணவர்கள் எல்லாம், அரை நாள் கூட படிப்புக்காக நேரம் ஒதுக்காமல் இருக்கிறார்கள். கொரோனா செய்த கொடுமை அது. என்னதான் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் வைத்து சமன் செய்தாலும், மாணவர்களுக்கு சுவாரஸ்யமாக சில கற்றல் வாய்ப்புகளை நாம் ஏற்படுத்தி கொடுப்பது அவசியமில்லையா? மற்ற பாடங்கள் கூட படித்து புரிந்துக் கொள்ளலாம். கணக்கு அப்படியா? ஆசிரியர் சொல்லிக்கொடுத்து கற்றால்தானே கணிதமும் இனிக்கும்.

மிக சுவாரஸ்யமாக, விளையாட்டாக உங்கள் பிள்ளைகள் கணக்கு கற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பை உருவாகியிருக்கிறது உங்கள் ஆனந்த விகடன். வேதிக் மேத்ஸ் முறையை பயன்படுத்தி எளிமையாக கணிதம் கற்க உதவுகிறார் பிரைன்கார்வ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஷ்வரி.
பிரைன்கார்வ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த விகடன் நடத்தும் இந்த வகுப்பில், மேஜிக் ஃபிங்கர்ஸ் (Magic fingers) என விரல்களை கொண்டு நொடிகளில் கூட்டல் கழித்தல் கணக்குகளை போடும் பயிற்சி, அபாகஸ் (Abacus) அறிமுகம், நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும், மனப்பாடம் செய்யாமல் ஒரு பாடத்தை முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ளவும் சில Memory Techniques, குறுகிய வட்டத்தை தாண்டி யோசிக்க உதவும் Thinking Techniques, ஆளுமை திறன் வளர்ச்சி (Personality Development) பயிற்சி என பல பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்நிகழ்ச்சி குறித்து விளக்கும் டாக்டர்.பரமேஸ்வரி, "புத்திசாலித்தனம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் கடவுள் கொடுத்த வரம் இல்லை, அது இளம் வயதில் முறையான பயிற்சி மூலம் நாம் வளர்த்துக்கொள்ளக்கூடிய திறமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இரு கை விரல்களையும் பயன்படுத்தி ஜாலியாக குழந்தைகள் கணக்கு பயிலும்போது, அவர்கள் மூளையின் இடது, வலது இரண்டு பக்கமும் வேலை செய்யும், இது அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்" என்கிறார்.