Published:Updated:

விகடன் ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்: ஸ்க்ரிப்ட் கன்சல்டன்ட்டால் படத்தின் வெற்றியை உறுதிசெய்ய முடியுமா?

ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்

"'கூட்டத்தில் ஒருவன்', 'துரோகி' போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்ததா என்று பார்க்காமல் தயாரிப்பாளரும் ஹீரோவும் அந்த இயக்குநர்களின் அடுத்த கதையை நம்பி படம் எடுத்ததனால்தான் 'ஜெய் பீம்', 'இறுதிச்சுற்று' போன்ற சிறந்த திரைப்படங்கள் உருவாகின."

விகடன் ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்: ஸ்க்ரிப்ட் கன்சல்டன்ட்டால் படத்தின் வெற்றியை உறுதிசெய்ய முடியுமா?

"'கூட்டத்தில் ஒருவன்', 'துரோகி' போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்ததா என்று பார்க்காமல் தயாரிப்பாளரும் ஹீரோவும் அந்த இயக்குநர்களின் அடுத்த கதையை நம்பி படம் எடுத்ததனால்தான் 'ஜெய் பீம்', 'இறுதிச்சுற்று' போன்ற சிறந்த திரைப்படங்கள் உருவாகின."

Published:Updated:
ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை வடிவமைப்பாளர்களில் ஒருவர்தான் பாலகுமாரன் தமிழ்ச்செல்வன். தமிழ் சினிமாவின் புதிய திரைக்கதை ஆசிரியர், திரைக்கதை மருத்துவர். 'கிரியோனி - பிலிம் & ஸ்கிரிப்ட் ஸ்ட்ராட்டஜி கம்பெனி' என்ற நிறுவனத்தை இவரின் நண்பர் மாணிக்கஜமீனுடன் இணைந்து நடத்திவருகிறார்.

ஒரு ஸ்கிரிப்ட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்புக்கு எடுத்துரைப்பது மட்டுமன்றி, அதைச் சரி செய்து ஒரு வெற்றிப் படத்திற்கான திரைக்கதையாக மாற்றித் தருகிறார். `சிவப்பு மஞ்சள் பச்சை', `கொலை' என்ற இரண்டு படங்களுக்கான திரைக்கதையில் பணிபுரிந்திருக்கிறார்.

"ஆடியன்ஸை A, B, C எனச் சொல்கிறார்களே... அவர்களுக்கு ஏத்த மாதிரி ஸ்கிரிப்ட்டில் எதுவும் மாற்றம் செய்கிறீர்களா?"

ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்
ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்

பதிவு செய்ய: https://rb.gy/pkh2o1

"சப்ஜெக்ட்டில் வேண்டுமானால் சிட்டி சப்ஜெக்ட், வில்லேஜ் சப்ஜெக்ட் என்றிருக்கலாம், ஆனால் ஆடியன்சில் A, B, C என்று ஒன்று நிச்சயம் கிடையாது. எவ்வளவோ சிட்டி சப்ஜெக்ட் படங்கள் வில்லேஜில் ஓடியிருக்கின்றன. 'எந்திரன்' சிட்டி சப்ஜெக்ட், சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம். அது பட்டித் தொட்டி எங்கும் ஓடவில்லையா? ரோபாட்டிக் சயின்ஸ் போன்ற நுட்பமான விஷயத்தை எல்லா ஆடியன்ஸ்க்கும் புரியும்படி எளிமையாகவும், உணர்வுப்பூர்வமாகவும், சுவாரஸ்யமாகவும் கூறியிருப்பார்கள். அதே போல் 'பருத்திவீரன்', 'சுப்ரமணியபுரம்' போன்ற வில்லேஜ் சப்ஜெக்ட் திரைப்படங்களைச் சிட்டி மக்களும் கொண்டாடியிருக்கிறார்கள். எளிமையான வாழ்க்கையை ரசிக்கும்படி உணர்வுபூர்வமாகச் சுவாரஸ்யமாகக் கூறும்போது அந்தப் படம் அனைவராலும் ஏற்கப்படும். கிராமம், நகரம் என்பது ஒரு கதையின் பின்னணி மட்டுமே. மக்களுக்குப் புரியாத வகையில் படம் எடுத்துவிட்டு, இது A சென்டர் படம், B சென்டர் படம், என்று கூறி மக்களை முட்டாளாக்க நினைத்தால், அவர்கள் உங்கள் படத்தை தோல்வியடையச்செய்து உங்களை முட்டாளாக்கிவிடுவார்கள்."

"காலம் காலமாக கதை, திரைக்கதை, இயக்கம் போன்ற விஷயங்களை இங்கு இயக்குநர்கள்தானே திறம்பட கவனித்துக் கொண்டார்கள்?"

"ஒரு சில இயக்குநர்கள், ஹீரோ கால்ஷீட்டுக்காகவும், தனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதற்காகவும் ஒரு முழுமையடையாத திரைக்கதையுடன் மேக்கிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஷூட்டிங் செல்கிறார்கள். அதன் விளைவு படம் தோல்வியடைகிறது. பலரது உழைப்பும், நேரமும், பணமும் நஷ்டமடைகின்றன. இயக்குநர்கள் எதற்காகவும் அவசரப்படாமல் நேரத்தைச் செலவுசெய்து கள ஆய்வு மேற்கொண்டு ஒரு நல்ல கதையை எழுத வேண்டும்.

இங்கு பெரும்பாலான இயக்குநர்கள் உதவி இயக்குநர்களுடனான கதை விவாதங்கள், ரெஃபரென்ஸ் படங்கள் மூலமாகத்தான் திரைக்கதையை எழுதுகிறார்கள். அது எல்லா நேரங்களிலும் வெற்றியைக் கொடுத்துவிடுவதில்லை.

ஒரு வெற்றிப் படத்திற்கான சிறந்த திரைக்கதையை உருவாக்க அந்த கதையைப் பற்றிய 'Research and Development' அல்லது 'Basic Research'-ஆவது செய்திருக்க வேண்டும். அந்தக் கதை சார்ந்த, துறை சார்ந்த, மனிதர்களிடம் அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தபின் எழுதும் போது நம்பகத்தன்மை அதிகரிக்கும். தேவையற்ற காட்சி ஒன்றுகூட படத்தில் இருக்காது. கூடவே கதைவிவாதங்களில் ஈடுபடும் போதும், ஒரு நல்ல திரைக்கதையை உருவாக்க முடியும்."

ஜெய் பீம்
ஜெய் பீம்

"தமிழ் சினிமா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?"

"ஹீரோவும், தயாரிப்பாளரும் இயக்குநரின் போன படம் வெற்றிப் படமா என்பதை மட்டும் பார்க்காமல் அவரது அடுத்த படத்திற்கான கதை நன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

'கூட்டத்தில் ஒருவன்', 'துரோகி' போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்ததா என்று பார்க்காமல் தயாரிப்பாளரும் ஹீரோவும் அந்த இயக்குநர்களின் அடுத்த கதையை நம்பி படம் எடுத்ததனால்தான் 'ஜெய் பீம்', 'இறுதிச்சுற்று' போன்ற சிறந்த திரைப்படங்கள் உருவாகின. கதையை நம்பிப் படம் எடுத்தால் அது உங்களுக்கு நிச்சயம் வெற்றி தரும்.

இயக்குநரை அவசரப்படுத்தாமல் கதையை உருவாக்கக் காலமும் நேரமும் அளிக்கும் போது அவர்களால் சிறந்த தரமான திரைக்கதையை உருவாக்க முடியும்."

"உலகத் திரைப்படங்களை நம் ஆடியன்ஸ் இப்போது இணையத்தின் மூலம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஓ.டி.டி-யின் வரவால் சினிமா குறித்த பார்வையே மாறிவிட்டது எனலாமா?"

"உணர்வுபூர்வமாக சுவாரஸ்யமான அனுபவங்களைத் தரக்கூடிய திரைப்படங்கள், எந்த மொழியாக இருந்தாலும், எல்லா காலகட்டத்திலும் மக்கள் அதை வெற்றியடையச்செய்து கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுமாரான திரைப்படங்களை அவர்கள் ஒன் டைம் வாட்சபிள் (One time watchable) என்கிறார்கள். சில சமயங்களில் முதல் பாதி நல்லா இருக்கு, இரண்டாம் பாதி சுமாராக இருக்கிறது என்கிறார்கள். படத்தின் மேக்கிங் நல்லாயிருக்கிறது என்கிறார்கள். ஆடியன்ஸ் முடிந்தவரை படத்தைப்பற்றி நல்லவிதமாகவே கூற விரும்புகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் திரைப்படங்களைக் குறைசொல்லவோ புறக்கணிக்கவோ விரும்புவதில்லை. ஒரு திரைப்படம் குறைந்தபட்சம் அவர்களைத் திருப்திப்படுத்தினாலே பாராட்டுகிறார்கள். அவர்கள் பொறுமையை உச்சக்கட்டமாகச் சோதிக்கும்போதுதான், அந்தப் படத்தைத் தோல்வியடையச் செய்கிறார்கள்."

திரைக்கதை வடிவமைப்பாளர் பாலகுமாரன்
திரைக்கதை வடிவமைப்பாளர் பாலகுமாரன்

"ஒரு திரைப்படத்தின் வெற்றியை உங்களால் நிச்சயம் உறுதிசெய்ய முடியுமா? ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு உங்களால் எந்த அளவுக்குப் பங்களிப்பு செய்ய முடியும்?"

"ஸ்கிரிப்ட் கன்சல்டிங்கில் (Script Consulting) எங்களால் திரைப்படத்தின் வெற்றியை நிச்சயம் உறுதிசெய்ய முடியும். ஆனால் ஒரு வெற்றிப் படத்தை உருவாக்குவது ஒருவரின் உழைப்பினால் மட்டும் முடியாது அனைவரும் சிறப்பாக உழைத்திருக்க வேண்டும். கதையை 100% சரியாக முடித்துவிட்டு ஷூட்டிங் செல்லும்போது எல்லோரும் சிறப்பாக உழைத்து எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில், அது ஒரு மெகாஹிட் படமாகின்றது. ஷூட்டிங்கில் சில விஷயங்கள் சரியாக அமையவில்லை என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஏற்படும் பிரச்னைகளினால் மேக்கிங்கில் சொதப்பினாலும், கதை 100% சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு மினிமம் கியாரன்ட்டி படத்தையாவது உறுதி செய்ய முடியும். நிச்சயம் தோல்வியைத் தவிர்க்கமுடியும். இன்றைய சினிமாவின் சூழலில் தோல்வியைத் தவிர்த்தாலே அது ஒரு வெற்றிப் படமாகத்தான் கருதப்படுகின்றது."

விகடன் நடத்தும் `ஸ்க்ரீன்ப்ளே ஒர்க் ஷாப்' ஒன்லைன் தொடங்கி, கதை எப்படி ஹிட் திரைக்கதையாக... லேயர் லேயராக உருமாறுகிறது என்பதை தியரிகளாக யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கவிருக்கிறார் தமிழ் சினிமாவின் இளம் திரைக்கதைப் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பாலகுமாரன்.
அக்டோபர் 8-ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இடம்: ஆனந்த விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 2.

பதிவு செய்ய: https://rb.gy/pkh2o1