Published:Updated:

"ஒரு கதை சொல்லட்டா சார்?"- விகடன் நடத்தும் `ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்'; கலந்துகொள்வது எப்படி?

ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்

கதை திரைக்கதையாவது எப்படி? கதை டூ திரைக்கதைப் பயணத்தில் கவனிக்க வேண்டிய நுணுக்கங்கள் என்ன? தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட்டுக்கான அவசியம் என்ன?

"ஒரு கதை சொல்லட்டா சார்?"- விகடன் நடத்தும் `ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்'; கலந்துகொள்வது எப்படி?

கதை திரைக்கதையாவது எப்படி? கதை டூ திரைக்கதைப் பயணத்தில் கவனிக்க வேண்டிய நுணுக்கங்கள் என்ன? தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட்டுக்கான அவசியம் என்ன?

Published:Updated:
ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்
"ஒரு கதை சொல்லட்டா சார்?"
`விக்ரம் வேதா'வில் விஜய் சேதுபதி கேட்பது போல் உள்ளுக்குள் ஏகப்பட்ட‌ கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்க சாலைகளில் பசி, தூக்கம் மறந்து அலையும் நிறையப் பேரைப் பார்த்திருப்போம்.

கதைசொல்லிகளின் எல்லாக் கதைகளும் சினிமாவில் ஜெயித்து விடுவதில்லை. கதை திரைக்குப் போகும் போது வேறு முகமாக உருமாற வேண்டி இருக்கிறது.

ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்
ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்

முன்பு எப்படியோ, இப்போதெல்லாம் திரைக்கதையை வசப்படுத்துபவர்களால் மட்டுமே வெற்றியையும் தொடர்ந்து வசப்படுத்த முடிகிறது. காரணம் சினிமா பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதைப் போலவே சினிமா ரசிகர்களும் மாறி இருக்கிறார்கள்.

கதை திரைக்கதையாவது எப்படி? கதை டூ திரைக்கதைப் பயணத்தில் கவனிக்க வேண்டிய நுணுக்கங்கள் என்ன? தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட்டுக்கான அவசியம் என்ன? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடிய ஒரு நிகழ்வை நடத்துகிறது `ஆனந்த விகடன்'.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சினிமாவில் சாதிக்க வேண்டுமென்கிற பேரார்வத்துடன் இருக்கிற இளைஞர்கள், உதவி இயக்குநர்களின் கனவுக்குத் தீனி போடும் 'ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்' என்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு திரைக்கதைப் பயிற்சியை அளிக்க இருக்கிறார், தமிழ் சினிமாவின் இளம் திரைக்கதை வடிவமைப்பாளர் பாலகுமாரன். 'கிரியோனி' என்னும் ஃபிலிம் அண்ட் ஸ்கிரிப்ட் ஸ்ட்ரேட்டஜி நிறுவனத்தை நடத்தி வருபவர்.

திரைக்கதை வடிவமைப்பாளர் பாலகுமாரன்
திரைக்கதை வடிவமைப்பாளர் பாலகுமாரன்

முன்னணி இயக்குநர்கள் பலருடன் கதை விவாதங்களில் அமர்ந்த அனுபவம் கொண்ட இவர், ஸ்கிரிப்டை மதிப்பீடு செய்ய சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

விகடனுக்கும் தமிழ் சினிமாவுக்குமான உறவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. கோலிவுட்டில் வெளியாகும் ஒவ்வொரு படத்துக்கும் 'ஆனந்த விகடன்' வழங்கும் மதிப்பெண் மிகவும் முக்கியமானது.

அந்த வகையில் ஆனந்த விகடன் வழங்கும் இந்தப் பயிற்சிப் பட்டறையும் சினிமாவை நேசிப்பவர்கள் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு நகர ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போடுகிற முயற்சிதான்.

இந்தப் பயிற்சியில் பங்கெடுத்துப் பயன்பெற விரும்புபவர்கள், இங்கே க்ளிக் செய்யவும்.

பயிற்சி நாள்: 8/10/22 | நேரம்: காலை 10 - மாலை 5 மணி வரை | இடம்: விகடன் அலுவலகம், 757, அண்ணா சாலை, சென்னை - 2.