Published:Updated:

அதிகாரப் பதவி அருள்வார் ஆண்டார்குப்பம் முருகன்!

ஆண்டார்குப்பம் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டார்குப்பம் முருகன்

பதவியோகம் அருளும் பரிகாரக் கோயில்!

அதிகாரப் பதவி அருள்வார் ஆண்டார்குப்பம் முருகன்!

பதவியோகம் அருளும் பரிகாரக் கோயில்!

Published:Updated:
ஆண்டார்குப்பம் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டார்குப்பம் முருகன்

சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, ஆண்டார்குப்பம். இங்கே கோயில் கொண்டிருக்கும் முருகனை தரிசித்து வழிபட்டால் பதவி யோகம் வாய்க்கும்.

ஆண்டார்குப்பம் முருகன்
ஆண்டார்குப்பம் முருகன்

ருவரது வாழ்க்கை சகல செல்வங்களுடனும் மகிழ்ச்சியாக அமைய, அவரின் ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் எனப்படும் 10-ம் இடத்துக்கு உரிய கிரகமும் அந்த இடமும் நல்ல நிலையில் இருக்கவேண்டும். 10-ம் இடத்துக்கும் அந்த ஸ்தானத்துக்கு உரிய கிரகத்துக்கும் அசுபர்களின் சேர்க்கை, பார்வை ஏற்பட்டிருந்தால் உத்தியோகம், தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படாது.

குறிப்பாக ஜீவன ஸ்தானத்துக்கு உரிய கிரகம், 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கக்கூடாது. இவ்வகைகளில் ஜீவனஸ்தானம் பலம் குன்றி திகழ்ந்தால், குறிப்பிட்ட பரிகாரத்தின் மூலமும், அருள்நிறைந்த தெய்வ திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலமும் நிவர்த்தி பெறலாம்.

அவ்வகையில் ஆண்டார்குப்பம் முருகன் பதவியோகம் அருளும் தெய்வம் ஆவார். பிரணவத்துக்குப் பொருள் தெரியாமல் பிரம்மன் திணறியதும், அதனால் கோபம் கொண்டு முருகப்பெருமான் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைத்த திருக்கதையும் நாமறிந்ததே.அப்படி, பிரம்மனிடம் கேள்வி கேட்ட அதிகாரத் தொரணையுடன் இடுப்பில் கரங்களை வைத்து கம்பீரமாக நிற்கும் திருக்கோலத்தில் முருகப்பெருமான் அருளும் கோயில் இது. ஆகவே, இங்கு வந்து அவரைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு அதிகாரம் மிகுந்த பதவிகள் வாய்க்கும்; ஏற்கெனவே பதவியில் உள்ளோருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

சம்வர்த்தனர் என்ற பக்தருக்காகவே முருகன் இங்கே கோயில் கொண்டார் என்றும், அந்தப் பக்தருக்காக பாலநதி எனும் தீர்த்தத்தை இங்கு ஏற்படுத்தினார் என்றும் தலபுராணம் விவரிக்கிறது. இந்தத் தலத்து முருகனுக்கு வேறொரு சிறப்பும் உண்டு. என்ன தெரியுமா?

அலங்கார கோலத்தில் மூலவர் முருகப்பெருமானைத் தரிசிக்கும் போது, காலை வேளையில் பாலனாகவும், நண்பகலில் வாலிபனாகவும் மாலையில் வயோதிகனாகவும் காட்சி தருவது சிறப்பம்சமாகும். இப்படி, அற்புத மகிமைகளோடு அழகன் முருகன் அருள்பாலிக்கும் இந்தக் கோயிலுக்கு, தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளில் சென்று, நெய் தீபம் ஏற்றிவைத்து முருகனை வழிபட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பரணி நட்சத்திர நாளன்று கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக - ஆராதனைகளை தரிசித்து, அங்கேயே தங்கி மறுநாள் கிருத்திகை வழிபாடுகளையும் தரிசித்தால், சிக்கலான வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்; சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism