Published:Updated:

பதவி யோகம் அருளும் குருபகவான்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஜோதிடத் துளிகள்

பதவி யோகம் அருளும் குருபகவான்!

ஜோதிடத் துளிகள்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் குபேர சம்பத்தைப் பெற்று, உலகோர் போற்றும் உயர்ந்த அந்தஸ்துடன், நேர்மையுடனும் புகழுடனும் வாழ்வார். குருபலம் சிறப்பாக அமைந்திட, வியாழன் தோறும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு நன்மைகள் அடையலாம்.

பதவி யோகம் அருளும் குருபகவான்!

ஜாதகத்தில் குரு எந்த ராசியில் உள்ளாரோ, அதற்கேற்ப பதவி யோகத்தை - பணி நிலையை அளித்து அருள்பாலிப்பார் என்கின்றன ஜோதிட நூல்கள்.

மேஷம்: இதில் குரு இருந்தால், தலைமைப் பதவியை ஏற்கும் பணி நிலையைத் தருவார்.

ரிஷபம்: மகிழ்ச்சியும் செல்வமும் தரும் பணி கிடைக்கும்.

மிதுனம்: அரசாங்க ஆலோசகராகப் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும்.

கடகம்: தனியார் துறையில் ஆலோசனை கூறும் இடத்தில் சாதிப்பார்கள்

சிம்மம்: பொதுத்துறைப் பணியில் உயர்ந்த பதவிகளைக் கொடுத்து, செல்வாக்கோடு வலம் வரச் செய்வார்.

கன்னி: கணினித் துறை, ஒளித் தொடர்பு, கப்பல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட வைப்பார்.

துலாம்: கலைத்துறையில் ஈடுபாடு உண்டாகும்; அத்துடன் வெளி நாட்டில் பணிபுரிய வைத்து, செல்வாக்கை உண்டு பண்ணுவார்.

விருச்சிகம்: வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பதவியைக் கொடுப்பார்.

தனுசு: மக்கள் தொடர்பு மற்றும் ஆசிரியர் பணி அமையும்.

மகரம்: வேலை கிடைப்பது எளிதாக இருக்காது.

கும்பம்: நல்ல வேலை கிடைக்கும். ஆனாலும், சம்பாதித்தவற்றை தீய பழக்கங்களில் இழக்கும் நிலை உண்டாகும்.

மீனம்: அரசாங்கத்தில் இயக்குநர், துறைத் தலைவர், அமைச்சர் போன்ற பதவிகளைக் கிடைக்கச் செய்வார்.

நல்லதொரு பணியை, பதவியைப் பெற வியாழன் மற்றும் பெளர்ணமி தினங்களில், குருபகவானுக்கு தீபம் ஏற்றிவைத்து துதிப்பாடல்கள் பாடி வணங்குவது சிறப்பு. அதேபோல், சிவாலயங்களுக்குச் சென்று ஆதிகுருவாம் ஆலமர்ச்செல்வன் ஶ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை சமர்ப்பித்து, வழிபட்டு வரலாம். குருமார்களை வணங்கி வழிபடுவதன் மூலம் நவகிரக குருவின் பூரணத் திருவருளைப் பெற்று மகிழலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வளர்பிறை அனுகூலம்!

பொதுவாக, அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திதிகளில் சில திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம், புதுத்தொழில் ஆரம்பம் ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது என்பது சாஸ்திரக் கோட்பாடு. ஆனால், அமாவாசைக்குப் பிறகு வரும் திதிகளில் பஞ்சமி அல்லது சஷ்டிக்கு பிறகே வளர்பிறையின் பலன் வரும் என்பது ஜோதிட சாஸ்திர நடைமுறை விதி. அதாவது, அமாவாசை கழித்து வானில் சந்திரன் நன்றாகத் தெரியும் நாளான பஞ்சமி முதலே வளர்பிறையின் அனுகூலங்கள் உண்டாகும் என்பது தத்துவம்.

அதுபோலவே, தேய்பிறையில் பௌர்ணமியில் இருந்து பஞ்சமி வரை வளர்பிறையாகவே எடுத்துக்கொள்வது ஜோதிட விதி. வானில் சந்திரனின் பிம்பம் நன்கு தெரிவதால் இந்தப் பலன் சொல்லப்படுகிறது. பஞ்சாங்கங்களில் முகூர்த்த நாட்கள் என்று குறிப்பிடப்படும் அட்டவணைகளில் இதனை ஒரு குறியீட்டில் விளக்கியிருப்பார்கள்.