Published:Updated:

குருப்பெயர்ச்சி துலாம் ராசிபலன்கள்!

துலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
துலாம்

13.11.21 முதல் 13.4.22 வரை

இசை - இலக்கியத்தில் ஆர்வமுள்ள நீங்கள், அறிஞர்களின் அருகில் இருக்க ஆசைப்படுவீர்கள். குரு பகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை 5-ம் வீட்டில் நுழைந்து அள்ளிக்கொடுப்பதுடன், வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தையும் அமைத்துத் தருவார். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக் குக் கண்ணுக்கழகான குழந்தை பிறக்கும்.

குருப்பெயர்ச்சி
துலாம் ராசிபலன்கள்!

டுத்த படுக்கையாய் இருந்த தாய் எழுந்து நடப்பார். குடும்பத்தில் உங்களுக்கு மரியாதை கூடும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் தீரும். பாகப் பிரிவினை சுமூகமாக முடியும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் முகமும் மனமும் மலரும். குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையுடனான கருத்துவேறுபாடுகள் நீங்கும். அவர் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். 11-வது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். அரசியவாதிகள், இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் தன - சப்தமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அனுபவம் மிக்க பேச்சால் எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். பதவிகள் தேடி வரும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சொத்து விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகுவின் சதய நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் நெஞ்சு எரிச்சல், வாயுக் கோளாறு, தலைச் சுற்றல் வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். முன்னேற்றம் தடைப்படாது.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்கு கூடும்; பணப்புழக்கம் அதிகரிக்கும்; சொத்து சேரும். அதேநேரம் இனம் தெரியாத கவலைகளும் வந்துசெல்லும். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய முதலீடுகள் போடுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். கணினி, உணவு, என்டர்பிரைசஸ், கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடனான பனிப்போர் நீங்கும். கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைஞர்களே! நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி பிரச்னைகளால் சிதறிக்கிடந்த உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: அசுவினி நட்சத்திர நாளில் திருச்செந்தூர் முருகப்பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். இதய நோயால் பாதிக்கப் பட்டவர் களுக்கு உதவுங்கள்; நிம்மதி பெருகும்.