Published:Updated:

குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள்!

தனுசு
பிரீமியம் ஸ்டோரி
News
தனுசு

13.11.21 முதல் 13.4.22 வரை

தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர் நீங்கள். குருபகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை மூன்றாவது வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார். உங்கள் ராசிநாதனான குரு நான்காம் வீடான சுக வீட்டுக்கும் அதிபதி. அவர் மூன்றாம் வீட்டில் மறைவதால் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. தவறானவர்களுடன் பழக வேண்டாம். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. புதியவர்களை வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும்.

குருப்பெயர்ச்சி
தனுசு ராசி பலன்கள்!

ங்களின் 7-வது வீட்டை குரு பார்ப்பதால், திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தா லும், அன்பும் அந்நியோன்யமும் குறையாது. குரு 9-வது வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பைசலாகும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி பாசம் கூடும். மகனின் உயர்கல்வி எதிர்பார்த்த கல்வி நிறுவனத்திலேயே அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 11-வது வீட்டைப் பார்ப்பதால் காரியத்தடைகள் விலகும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். வீடு, மனை வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகன வசதிகள் பெருகும்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகுவின் சதய நட்சத்திரத்தில் குரு செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு, தன்னுடைய பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால், வீட்டை இடித்துப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில், வருங்கால சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு முதலீடு செய்யுங்கள். சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர் களிடம் கனிவாகப் பேசி பாக்கிகளை வசூலியுங்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் உண்டு. ஸ்டேஷனரி, ஹோட்டல், விடுதிகள், கமிஷன் வகை களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதங்கள் வரும். என்றாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களிடம் உஷாராகப் பழகுங்கள். சிலர் எதிர்பாராத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். கணினித் துறையினருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். கலைஞர்களே, கிடைக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சிறு ஏமாற்றங்களைக் கொடுத்தாலும் உங்களைப் பதப்படுத்தி வெற்றிபெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் காஞ்சி ஏகாம்பரேஸ் வரரையும், அவர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். மனநலம் குன்றியோருக்கு உதவுங்கள்; தடைகள் விலகும்.