Published:Updated:

குருப்பெயர்ச்சி கும்பம் ராசிபலன்கள்!

கும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
கும்பம்

13.11.21 முதல் 13.4.22 வரை

எதிர்பார்ப்பு இல்லாமல் உதவும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை ஜன்ம குருவாக அமர்கிறார். `ஜன்ம குருவாச்சே' என்று அஞ்சாதீர்கள். பாதிப்புகள் பெருமளவு நீங்கும். சோர்ந்து கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். ஆரோக்கியம் கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பிறரிடம் கொடுத்து ஏமாந்த பணம் கைக்கு வரும். ஜன்ம குரு என்பதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் சற்று அதிகரிக்கும். வாக்குறுதி அளிப்பதோ, பணம், நகை இரவல் தருவதோ வேண்டாம்.

குருப்பெயர்ச்சி
கும்பம் ராசிபலன்கள்!

குரு 5-ம் வீட்டைப் பார்க்கிறார். ஏழரைச் சனி பாதிப்பால் கர்ப்பச் சிதைவு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்த பெண்களுக்குக் குருவின் இந்த நிலை நன்மையைத் தரும். குழந்தைப் பேறு வாய்க்கும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், ஓரளவு பண வரவு உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது. திடீரென்று புதிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் திருதியாதிபதி - ஜீவனாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்கிறார். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஒருவித படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வுமனப்பான்மை வந்துசெல்லும். காய்ச்சல், சளித் தொந்தரவு, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள்.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் தன-லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதியில் செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். மகளுக்கு நல்ல வேலை அமையும்; திருமணம் கூடி வரும்.

வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்யுங்கள். மற்றவர்களின் அறிவுரையைக் கேட்டு புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். லாபம் அதிகரிக்கும். கெமிக்கல், ஹோட்டல், துணி வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்களுடனான மனஸ்தாபங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். கௌரவ பதவிகள் வரும். சக ஊழியர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். மேலதிகாரிகள் மதிப்பார்கள். தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி உயரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நினைத்ததை முடிப்பீர்கள். கலைஞர்களே! அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சவால்களைச் சந்திக்கத் தேவையான சாமர்த்தியத்துடன் பணவரவையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சை அருகில் திருக்கருகாவூரில் அருளும் முல்லைவனேஸ்வரரையும் தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்; அந்தஸ்து உயரும்.