Published:Updated:

குருப்பெயர்ச்சி மீனம் ராசிபலன்கள்!

மீனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனம்

13.11.21 முதல் 13.4.22 வரை

எது நடந்தாலும் சலனப்படாதவர் நீங்கள். குரு பகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை விரய வீட்டிற்குள் நுழைவதால், சிக்கனம் அவசியம். குடும்பத்தில் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொள்ளாதீர்கள். நினைத்த காரியங்கள் இழுபறியாகி முடியும். எல்லா பணிகளிலும் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

குருப்பெயர்ச்சி 
மீனம் ராசிபலன்கள்!

குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். வசதி உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்வீர்கள். தீயோர் நட்பை இனம் கண்டு துண்டிப்பீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் தன - பாக்கியாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பணவரவு திருப்தி தரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். புறநகர்ப் பகுதியில் மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தந்தைவழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் நீங்கும்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு வரும். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறு வீர்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம்.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குரு தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தடைப்பட்டுக் கிடக்கும் கட்டடப் பணிகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பண விஷயத்தில் ஏமாந்துவிட வேண்டாம்.

வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் கறாராக இருங்கள். சரக்குகள் கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தைத் தெரிந்து செயல்படுங்கள். பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருள்களால் லாபம் அடைவீர்கள். அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.

உத்தியோகத்தில் விமர்சனங்களும், வீண் பழியும் வந்து செல்லும். திறமை இருந்தும்அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும், கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். விரும்பத் தகாத இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும். கலைஞர்களே... வீண் வதந்திகள் ஓயும். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைக் கடினமாக உழைக்க வைத்தா லும் நிறைவில் அனுபவத்தால் வெற்றியைப் பெற வைப்பதாக அமையும்

பரிகாரம்: தஞ்சை மாவட்டம் - வலங்கைமான் வட்டத்தில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்; வெற்றி கிட்டும்.