Published:Updated:

ராசிபலன்கள்!

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை

ராசிபலன்கள்!

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை

Published:Updated:
கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரையிலான பன்னிரு ராசி பலன்களைக் கணித்துத் தருகிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்கள்!

மேஷம்:

ங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 10-ம் வீட்டில் பலம் பெற்றிருப்ப தால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு உண்டு. வீடு கட்ட பூமி பூஜை போடுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலருக்குப் புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

ராசிபலன்கள்!

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் சென்று வருவீர்கள். செவ்வாய் 9-ல் தொடர்வதால் சிக்கன மாக இருக்க வேண்டும் என நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத் துறை யினரின் திறமைகள் வெளிப்படும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டிப்பிடிக்கும் நேரம் இது.

ராசிபலன்கள்!

ரிஷபம்:

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதையும் சாதிக் கும் துணிச்சல் வரும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வர வேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சூரியன் 9-ம் வீட்டில் தொடர்வதால் தந்தையாருடன் விவாதம் வரும். சேமிப்புகள் கரையும்.

செவ்வாய் 8-ல் நிற்பதால் தன்னம்பிக்கை குறையும். பேச்சில் கனிவும் கவனமும் தேவை. உடன்பிறந்தவர்கள் உரிமையுடன் ஏதாவது சொன்னால், கவலைப்பட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி கிடைக்கும்.

பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு வெல்ல வேண்டிய நேரம் இது.

ராசிபலன்கள்!

மிதுனம்:

ராசிநாதன் புதன் 7-ல் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் இருந்த அதிருப்தி விலகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 7-ல் செவ்வாய் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து போகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் பிணக்குகள் வந்துபோகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

சூரியன் 8-ல் மறைந்திருப்பதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத் தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினருக்குப் புகழும் பாராட்டும் கிடைக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்கள்!

கடகம்:

சூரியன் 7-ம் வீட்டில் தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் வாக்கு வாதங்கள் வந்து போகும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. புதன் 6-ல் மறைவதால் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் நிலைமை புரியாமல் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் இறுமல், சளித் தொந்தரவு, சிறு சிறு விபத்துகள் வந்து செல்லும்.

செவ்வாய் 6-ல் வலுவாக இருப்பதால், எதிர்த்தவர்களும் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். சகோதர வகையில் ஒற்றுமை வலுக்கும். புது சொத்து வாங்குவீர்கள். தாய்மாமன் வகையில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பங்குதாரரை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்கள்!

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணபலம் உயரும். நாடாளுவோரின் தொடர்பு கிடைக் கும். அரசியலில் செல்வாக்கு கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி யைத் தொடங்குவீர்கள். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும்.

சுக்கிரனும் புதனும் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். 5-ல் செவ்வாய் நிற்பதால் எதிர்மறை எண்ணங்கள், எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பு சேரும். சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கலைத் துறையினரே... உங்களை அலட்சியப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் காலம் இது.

ராசிபலன்கள்!

கன்னி:

சூரியன் 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாட்டுப் பயணங்கள் உண்டு. சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.

செவ்வாய் 4-ல் நிற்பதால் வாழ்க்கைத்துணை வழியில் உதவி உண்டு. சகோதரருக்குத் திருமணம் முடியும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

ராசிபலன்கள்!

துலாம்:

சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் சாதகமாக இருப்பார். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் செல்வாக்கு அதிகரிக்கும். புது வேலை அமையும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள்.

சுக்கிரன் வலுவாக இருப்பதால் கடனை அடைப்பீர்கள். வீடு கட்டுமானம் சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் வெற்றி உண்டு.தைரிய ஸ்தானமான 3-ம் வீட்டிலேயே செவ்வாய் தொடர்வதால் சவாலான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித் திறமை அனைத்திலும் பளிச்சிடும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்கள்!

விருச்சிகம்:

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணம் வரும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சாதுர்ய மாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். விலகிச் சென்ற நண்பர் களும் உறவினர்களும் வலிய வந்து பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சூரியன் 3-ல் நிற்பதால் புது வேலை கிடைக்கும். அரசாங்க வேலைகள் உடனே முடியும். செவ்வாய் பகவான் 2-ல் நிற்பதால் இடம், பொருள், ஏவலறிந்து பேசிச் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சிலநேரங்களில் ஆதங்கமும் மனக்குறையும் ஏற்படும். கலைத்துறையினர் புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பார்கள்.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய நேரம் இது.

ராசிபலன்கள்!

தனுசு:

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். சுபச் செலவுகள் வரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேசவைப்பார். அதனால் விமர்சனத்துக்கு ஆளாவீர்கள்.

செவ்வாய் ராசிக்குள் வலுவாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். சகோதரர்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

அனைவராலும் மதிக்கப்படும் காலம் இது.

ராசிபலன்கள்!

மகரம்:

சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், வேலைச்சுமை, காரிய தாமதம் வந்து செல்லும். அரசுக் காரியங்கள் இழுபறியாகி முடியும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிதாக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் உங்களின் தியாக உள்ளத்தைப் புரிந்து கொள்வார்கள்.

12-ல் செவ்வாய் தொடர்வதால் தவிர்க்க முடியாத பயணங்கள் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதரர்களுடன் பகைமை வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். பங்குதாரர்கள், வேலையாட்களால் கவலைகள் வந்து நீங்கும். புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போய் முடியும். உத்தியோகத்தில் சில நேரங்களில் உயரதிகாரி வெறுப் பாகப் பேசினாலும் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவர். கலைத்துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

வளைந்துகொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

ராசிபலன்கள்!

கும்பம்:

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய முயல்வீர்கள். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. 12 - ல் சூரியன் மறைந்திருப்பதால் வீண் விரயம், வேலைச்சுமை, திடீர்ப் பயணங்கள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சம்பளம் உயரும். என்றாலும் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் அதிகம் மூக்கை நுழைக்காதீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.

ராசிபலன்கள்!

மீனம்:

சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் 10-ல் செவ்வாய் நிற்பதால், வளைந்து கொடுத்து நிமிர்வீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வர். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism