Published:Updated:

ராசி பலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அக்டோபர் 5 முதல் 18-ம் தேதி வரை

ராசி பலன்

அக்டோபர் 5 முதல் 18-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அக்டோபர் 5 முதல் 18-ம் தேதி வரையிலான பன்னிரு ராசிகளுக்குமான பலன்களைக் கணித்துத் தருகிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.

ராசி பலன்
ராசி பலன்

மேஷம்:

சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். அரசியலில் செல்வாக்கு கூடும். குரு 10-ல் தொடர்வதால் உங்களுக்குள் ஒரு தேடலும், சமூகத்தின் மீது ஊடலும் இருந்துகொண்டிருக்கும். சுக்கிரன் 8-ல் இருப்பதால் கையில் பணம் தேவையான அளவு இருக்கும்.

புதன் 6-ல் அமர்ந்திருப்பதால் உறவினர்களுடன் பகை, நண்பர்களு டன் கருத்துவேறுபாடு என வரக்கூடும். செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பதவிகள் தேடி வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி அலுவலக ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் காலம் இது.

ராசி பலன்

ரிஷபம்:

குரு வலுவாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வாழ்க்கைத் துணை குடும்ப வருமானத்தை உயர்த்த சில ஆலோசனைகள் வழங்குவார். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சுகாதிபதி சூரியன் சாதகமாக இல்லாததால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். சில நேரங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். நெருங்கிய உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று இருப்பார்கள்.

சுக்கிரன் வலுவாக இருப்பதால் வீட்டில் திருமணம் நடக்கும். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். புதன் 5-ல் நிற்பதால், உற்சாகத் துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும்.

செயலில் வேகம் காட்டி வெல்ல வேண்டிய நேரம் இது.

ராசி பலன்

மிதுனம்:

சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்மாமன், அத்தை வகையில் மதிப்பு கூடும். குரு 8-ல் நீடிப்பதால் மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும்.

சுக்கிரன் 6-ல் நிற்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனச் செலவு வரக்கூடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், பிரச்னைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். போட்டியாளர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் தருணம் இது.

ராசி பலன்

கடகம்:

சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால் அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். குரு வலுவாக இருப்பதால் எதிலும் வெற்றி, லாபம் கிட்டும். சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வருமென நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிட்டும்.

புதன் சாதகமன வீடுகளில் பயணிப்பதால், எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பழைய வேலையாள்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் உங்கள்கைஓங்கும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும்.

சாதுர்யத்தால் சாதித்துக் காட்டும் காலம் இது.

ராசி பலன்

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் 2-ல் நிற்பதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்குக் கல்யாணம் ஏற்படாகும். குருபகவான் 6-ல் மறைந்து நீடிப்பதால், சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வெளிவட்டாரத்தில் பகைமை உருவாகும். எனவே எதையும் நிதானமாக செய்யப் பாருங்கள்.

புதன் சாதகமாக பயணிப்பதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப் படுவீர்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவார்கள்

வெற்றிப் பாதையில் பயணிக்கும் நேரம் இது.

ராசி பலன்

கன்னி:

ராசிநாதன் புதன் சாதகமானத் திகழ்வதால், தடைப்பட்ட வேலை களை விரைந்து முடிப்பீர்கள். ராசிக்கு 3 - ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

ராசிக்குள் சூரியன் அமர்ந்திருப்பதால் முன்கோபம், காரிய தாமதம், அலைச்சல் வந்து போகும். செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் ஒருவித தயக்கம், சிலர் மீது நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்து போகும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர், பாராட்டும் புகழும் பெறுவார்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய காலம் இது.

ராசி பலன்

துலாம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தாழ்வுமனப்பான்மை விலகும். தன்னம்பிக்கை துளிர்விடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக அமையும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். புதன் 12-ல் ஆட்சிபெற்று பயணிப்பதால், பணவரவு உண்டு. தொல்லை தந்த கடனைப் பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

சூரியன் ராசிக்கு 12-ல் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்து போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

ரகசியம் காக்க வேண்டிய தருணம் இது.

ராசி பலன்

விருச்சிகம்:

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். குரு பகவான் 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் சில காரியங்களை இரண்டு மூன்று முயற்சிக்குப் பிறகே முடிக்க வேண்டி வரும். சுக்கிரன் வலுவாக நிற்பதால், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.

சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்; வாய்ப்புகள் தேடி வரும்.

வி.ஐ.பிகளின் ஆதரவால் வெற்றி பெறும் காலம் இது.

ராசி பலன்

தனுசு:

னஸ்தானத்தில் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். லோன் கிடைக்கும். சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் தருணம் இது.

ராசி பலன்

மகரம்:

சூரியன் 9-ல் நிற்பதால் தந்தைக்கு வேலைச்சுமை, கை, கால் வலி வந்துபோகும். ஜன்ம குரு தொடர்வதால் புதிது புதிதாகச் சில பிரச்னை களும், சிக்கல்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்படாகும். புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம், உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் அவ்வப்போது நிலவி வந்த குழப்பமெல்லாம் நீங்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள் உங்களின் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் எதிராக இருந்த அதிகாரி மாற்றலாவார். சில ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினருக்குப் பாராட்டு கிடைக்கும்.

நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

ராசி பலன்

கும்பம்:

புதன் சாதகமான நட்சத்திரங்களில் பயணிப்பதால், பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சூரியன் 8-ல் நிற்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேசவேண்டாம். குருபகவான் 12-ல் மறைந்திருப்பதால் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந் தாலும் அலுத்துக்கொள்ளாமல் முடித்துக் காட்டுவீர்கள். கலைத் துறை யினர் இழந்த புகழை மீண்டும் பெற, யதார்த்தமான படைப்புகளைக் கொடுக்கவேண்டும்; பழைய நிறுவனத்தின் வாய்ப்புகள் தேடி வரும்.

மாறுபட்ட பாதையில் சென்று முன்னேற வேண்டிய நேரம் இது.

ராசி பலன்

மீனம்:

குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலமும் பணம் வரும். சுக்கிரன் வலுவாக அமர்ந்திருப்பதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் மன தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள்.

சூரியன் 7-ல் அமர்ந்திருப்பதால் முன்கோபம், உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, மனைவிக்கு உடல் நலக்கோளாறு வந்து போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர் களுடன் ஈகோ பிரச்னை வரும். கலைத்துறையினருக்கு மறைமுக விமர்சனங்களும், வீண் பழிகளும் ஏற்படலாம்; கவனம் தேவை.

வளைந்துகொடுத்து வெல்ல வேண்டிய காலம் இது.