Published:Updated:

கைகளும் இயல்புகளும்!

கைரேகை சாஸ்திரம்
பிரீமியம் ஸ்டோரி
கைரேகை சாஸ்திரம்

பஞ்சாங்குலி சாஸ்திரம்!

கைகளும் இயல்புகளும்!

பஞ்சாங்குலி சாஸ்திரம்!

Published:Updated:
கைரேகை சாஸ்திரம்
பிரீமியம் ஸ்டோரி
கைரேகை சாஸ்திரம்

கைகளின் அமைப்பு மற்றும் வடிவங்களுக்கு ஏற்ப ஒருவரின் இயல்புகளை அறியமுடியும் என்கின்றன கைரேகை சாஸ்திர நூல்கள். அவ்வகையில் கையின் அமைப்பை 5 வகைகளாகப் பிரித்து, அந்த கைக்கு உரிய அன்பர்களின் இயல்புகள் இப்படித்தான் என்று விவரிக்கின்றன!

கைகளும் இயல்புகளும்!
skeegசாதாரண கை: பெரும்பாலனவர்களின் கை இந்த வகையில் அடங்கும். இந்த வகையினர் பொறுமைசாலிகள். பெரும்பாலும் நடுத்தர குடும்பச் சூழலில் வாழ்வார்கள். வாழ்வில் கஷ்ட நஷ்டங்களை அறிந்தவராக இருப்பார்கள். திட்டமிடலும், எது சாத்தியமோ அதையே செயல்படுத்துபவராகவும் விளங்குவார்கள். நம்பிக்கைக்கு உகந்தவர்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வளைந்துகொடுத்து வாழ்வார்கள்.

நீளமான கை: திறமைசாலிகள். புத்தி சாதுர்யமும், துணிச்சலும், உள்ளவர்கள். வாழ்வில் உயர்வதற்காக கடுமையாக உழைப்பவர்கள். நேர்மையாளர்களாகவும், வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும் விளங்குவர். பிரச்னைகளைச் சமாளிப்பதில் இவர்கள் வல்லவர்கள். தலைவர்களாக இருக்கத் தகுந்தவர்கள். அதேநேரம், சற்று கர்வமும் பிடிவாதமும் இவர்களிடம் உண்டு.

மிக நீளமான கை: இவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். அதிமேதைகளாக விளங்குவர். ஆனால், இவர்களைப் புரிந்து கொள்வது கடினம். சுதந்திரப் பிரியர்கள். கஷ்ட நஷ்டங்களை லட்சியம் செய்யாதவர்கள். வெளியில் தைரியமுள்ளவர்களாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அச்சம் மிகுந்தவர்கள்.

சிறிய கை: திறமை மிகுந்தவர். முன்னுக்கு வரவேண்டும் எனும் ஆசை உண்டு என்றாலும் சோம்பலும் அதிகம் உண்டு. போலித்தனமாக வாழ்பவர்கள். சிந்திப்பதைச் செயல்படுத்தும் துணிவு இருக்காது. தங்களுடைய தோல்விக்கு மற்றவர்களைக் குறை சொல்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் போலி வேதாந்தம் பேசுபவர்களாக இருப்பார்கள்.

மிகச் சிறிய கை: சுயநலம் மிகுந்திருக்கும். சந்தேகக் குணமும் சண்டை போடும் சுபாவமும் மிகுந்திருக்கும். குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். மேலும்,சந்தர்ப்பவாதிகளாகவும், மற்றவரைக் குறை கூறுபவர்களாகவும் இருப்பார்கள்.

கடன் தீர்க்கும் ருணவிமோசன பூஜை

ளர்பிறையில் வரும் செவ்வாய்க் கிழமையில் அதிகாலையில் எழுந்து நீராடி முடித்து, பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அங்கே, மணைப்பலகை ஒன்றை வைத்து, செந்நிற கோல மாவினால் 16 சங்குகள் வட்ட வடிவில் அமைவது போன்று கோலம் போட வேண்டும். சங்குகளின் மேல் நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்காணும் அங்காரக போற்றித் துதிப்பாடலைச் சொல்லவேண்டும்.

பின்னர், சாம்பிராணி மற்றும் குங்கிலிய தூபம் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பித்து, புஷ்பாஞ்சலியுடன் கற்பூர ஆரத்திக் காட்டி வழிபட வேண்டும்.

ஓம் அவந்தி தேசாதிபனே போற்றி
ஓம் பாரத்வாஜ வம்சவா போற்றி
ஓம் முருகனின் உருவே போற்றி
ஓம் மேஷராசிப் பிரியனே போற்றி
ஓம் விருச்சிகத்தில் இருப்பாய் போற்றி
ஓம் தென் முகத்தவனே போற்றி
ஓம் தேவியின் பிரியனே போற்றி
ஓம் பூமியின் புதல்வனே போற்றி
ஓம் சகோதர காரகனே போற்றி
ஓம் குஜனே போற்றி
ஓம் ரணகாரனே போற்றி
ஓம் ருணரோக நிவாரணனே போற்றி
ஓம் கடன் தீர்ப்பாய் போற்றி
ஓம் மகீ சுதனே போற்றி
ஓம் நவநாயக உருவே போற்றி
இந்த வழிபாட்டை முறையாகச் செய்து வந்தால், வாங்கிய கடன்களை விரைவில் அடைக்க வழிபிறக்கும்.

கைகளும் இயல்புகளும்!
NoSystem images

கையெழுத்து இப்படித்தான்...

கையெழுத்து பற்றிய ஆராய்ச்சியை ஆங்கிலத்தில் கிராஃபாலஜி என்பார்கள். ‘மூளையின் செயல்பாடுகளே உடலின் அவயவங்களை இயக்குகின்றன. ஆக, உடல் உறுப்புகளின் செயல்களைக் கணிப்பதன் மூலம் நம் சிந்தனைகள் எப்படியானவை, அவற்றின் விளைவால் எதிர்காலம் எப்படி அமையும் என யூகிக்க முடியும்’ என்கிறது இந்த கிராஃபாலஜி.

ஒருவரது சிந்தனையையும் அதன் விளைவான செயல்பாடுகளையும் கையொப்பம் பிரதிபலிக்கும். தக்க முறையில் கையெழுத்து இடப் பழகுவதன் மூலம், நமது மூளையும் நலம்படச் சிந்திக்கப் பழகும்; அதன் விளைவு நமக்கு நலமாக அமையும் என்கிறது கிராஃபாலஜி.

நமது கையெழுத்து கோழிக் கிறுக்கலாக இல்லாமல், தெளிவாக இருப்பது அவசியம். கிறுக்கலான கையெழுத்துக்கு உரியவரது வாழ்க்கை குழப்பமாகவே இருக்கும்.

கையொப்பம் ஆரம்பமாகும் இடத்திலிருந்து 45 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி சென்று முடியவேண்டும். ஒரே நேர்க்கோட்டில் இருப்பதாக அமையும் கையெழுத்தைக் கொண்டவர்களுக்கு வாழ்வில் இன்ப- துன்பங்கள் சமமாகஅமையும். கையொப்பம் முடியும்போது கீழ்நோக்கிச் சறுக்கலாக அமைவதாக இருக்கக்கூடாது.

கையொப்பம் போட்டுவிட்டு இறுதியாக முற்றுப்புள்ளி வைப்பது கூடாது. அதேபோன்று, கையொப்பத்தின் கீழ் அடிக்கோடு இடுவதையும் தவிர்த்தல் வேண்டும்.

பெயரின் கடைசி எழுத்தை கீழ்நோக்கி நீட்டி கையொப்பத்தை நிறைவு செய்வதும் கூடாது. கீழ்நோக்கி முடியும் எழுத்தாக இருந்தா லும், அதன் அடிமுனையை சற்றே மேல்நோக்கி நீட்டி முடிப்பது நலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism