Published:Updated:

மனைவியால் அதிர்ஷ்டம் யாருக்கு?

மனைவியால் அதிர்ஷ்டம்...
பிரீமியம் ஸ்டோரி
மனைவியால் அதிர்ஷ்டம்...

சுக்ர பலமும் - 7-ம் இடமும்!

மனைவியால் அதிர்ஷ்டம் யாருக்கு?

சுக்ர பலமும் - 7-ம் இடமும்!

Published:Updated:
மனைவியால் அதிர்ஷ்டம்...
பிரீமியம் ஸ்டோரி
மனைவியால் அதிர்ஷ்டம்...

`பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்று மிக அழகாக அறிவுறுத்துகிறது திருக்குறள். உண்மைதான்! மனிதனின் ஏற்றமும் தாழ்வும் அவன் செய்யும் காரியங்களாலேயே அமைகின்றன. இப்பிறவியில் மட்டுமல்ல முற்பிறவிக் கர்மங்களும் மனிதனைப் பாதிக் கும் என்பது ஆன்மிகத்தின் அறிவுரை.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

ழம்பெரும் ஜோதிஷ நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

பூர்வஜன்ம வாசனையே இந்தப் பிறவியின் பலாபலன்களுக்குக் காரணம் என்கின்றன. ஆக, முற்பிறப்பில் செய்த பாவ-புண்ணியங்களுக்குத் தகுந்த பலன்களை அனுபவிப்பதற்கு ஏற்பவே, ஒருவனின் பிறப்பு காலத்துடன் இணைகிறது. இல்லறம் இனிக்கவும், வாழ்க்கைத் துணை இனிதே அமையவும் நம் கர்மமே காரணமாகும்.

பல வருடங்களுக்கு முன்னர் என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். தன் மகனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறி பத்து ஜாதகங்களைக் காட்டினார். அவற்றில் மூன்று ஜாதகங்கள் பொருந்தும் என்று எடுத்துக் கூறினேன். அவரோ அவற்றைத் தவிர்த்துவிட்டு, பத்தில் வேறொரு ஜாதகத்தை எடுத்து நீட்டினார்.

`இவர்கள் எங்களைக் காட்டிலும் அந்தஸ் திலும் செல்வாக்கிலும் உயர்ந்தவர்கள். அந்த வீட்டாரோடு சம்பந்தம் பேசி முடித்தால், என் மகனின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என நினைக்கிறேன். தயவு செய்து, அந்தப் பெண்ணின் ஜாதகத்தை மறுபடியும் ஒரு தடவை பார்த்து, நல்ல தகவலா சொல்லுங்க..!’ என்றார் அவர், விடாப்பிடியாக.

`‘நீங்கள் குறிப்பிடும் பெண்ணின் ஜாதகத்தையும் ஆராய்ந்துவிட்டேன். முற்றிலும் பொருந்தவில்லை. ஒருவேளை அந்தப் பெண்ணை உங்கள் மகனுக்குத் திருமணம் செய்துவைத்தால், அவர்களின் குடும்ப வாழ்க்கை நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்காது. அந்தப் பெண்ணின் ஜாதகப்படி அவருக்கு நிறைய மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வாரிசும் கிடைக்காது’’ என்று உண்மையைச் சொன்னேன்.

அவரோ அரை மனதுடன், `சரி யோசிச்சு முடிவெடுக்கிறோம்’ என்று விடைபெற்றுக் கொண்டார். அதன்பிறகு, அவரை மறந்தே போனேன். சுமார் பத்து ஆண்டுகள் கழிந்திருக்கும்... அதே நபர் மீண்டும் வந்தார். முதலில் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவரே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்.

`‘சார், அன்னிக்கு நான் உங்க பேச்சைக் கேட்காதது தப்பா போச்சு. பணக்கார இடமா இருக்கேன்னு ஆசைப்பட்டு, நீங்க வேண்டாம்னு சொன்ன பெண்ணையே என் மகனுக்குத் திருமணம் செஞ்சு வெச்சேன். ஆரம்பத்துல வாழ்க்கை நல்லாத்தான் போச்சு. பிறகுதான் பிரச்னையே ஆரம்பமானது. அந்தப் பெண் மூலமா என் பையனுக்குக் குழந்தை பாக்கியமே கிடைக்கலை. அதுமட்டுமா? என் மகன் சென்னையில் சொந்த வீடு கட்ட வாங்கிய நிலத்திலும் கோர்ட், கேஸ்னு ஆகி கோடிக் கணக்குல நஷ்டம்’’ என்று சொல்லிப் புலம்பினார். அவருக்கு ஆறுதல் மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

மனைவியால் அதிர்ஷ்டம் யாருக்கு?
shylendrahoode

பொதுவாக, ஒருவரது ஜாதகத்தில் களத்திரக் காரகனான சுக்கிரனே, வாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்பதைத் தீர்மானிக்கிறார். அவர் பலமாக இருந்தால்தான் நல்ல மனைவியோ, நல்ல கணவனோ அமைவர்.

திருமணம், நம் வாழ்வின் முக்கியமான கட்டம் என்பதால், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய ஒருவரது ஜாதகம் நன்கு அலசி ஆராயப்படுகிறது. பெண் வீட்டார் `நல்ல பையனாக, கைநிறையச் சம்பாதிக்கக் கூடியவனாக இருந்தால் சிறப்பு’ என்று எதிர்பார்ப் பார்கள். பையன் தரப்பிலோ, ‘அழகானவளாக, அறிவானவளாக, குணவதியாக மணப்பெண் இருக்கவேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள். நம் ஆசைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஜாதக அமைப்பு எப்படி இருக்கிறதோ, அதற்கு ஏற்பவே மணமகன் அல்லது மணமகள் அமைவார்கள்.

ஓர் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியான பாகையில் (டிகிரி) ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்தால், அவனுக்கு நல்ல வழிகாட்டக்கூடிய பெண் மனைவியாக அமைவாள். சுக்கிரன், யோகாதிபதியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல மனைவி அமையும் யோகம் உண்டு.

கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் எழுவது தவிர்க்க முடியாதது. அந்த மாதிரியான நேரங்களில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துதல்.

நெருக்கடி நேரங்களிலும் சரியான முடிவு எடுத்தல்.

குடும்ப உறுப்பினர்களுடன் போட்டி போடாமல் இருத்தல்.

எதற்கெடுத்தாலும் எதிர்விவாதம் செய்யாது இருத்தல்.

பிள்ளைகளை பேணி வளர்த்தல்

- இப்படித்தான் ஒரு நல்ல மனைவியின் இலக்கணங்கள் வரையறுக்கப்படுகின்றன. இது ஆணுக்கும் பொருந்தும்!

ஓர் ஆணின் ஜாதகத்தில், லக்னத்திலிருந்து 7-வது இடம் மனைவி ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த வீட்டுக்குரிய கிரகம் சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு, இந்தக் கிரகம் 2, 4, 5, 9 ஆகிய வீடுகளுக்குரிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ, திருமணத்துக்குப் பின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பெண், இல்வாழ்க்கைத் துணைவியாக அமைவாள். மனைவி வந்த நேரம், அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். மனைவியின் கையால் குத்துவிளக்கேற்றி தொடங்கிய சொந்தத் தொழில் அமோகமாக வளரும்!

ஓர் ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் (சப்தமாதிபதி) சுபத் தன்மை பெற்ற குருவின் பார்வை பெற்றால், அவருக்கு மனைவியாக வாய்க்கக்கூடிய பெண் கற்பு நெறி, தெய்வ பக்தி, உண்மை பேசும் குணம், பெரியோரை அனுசரித்துச் செல்லுதல் ஆகிய நற்குணங்களைக் கொண்டவளாக இருப்பாள். லக்னாதிபதியும் வலுவடைந்து, 7-ஆம் வீட்டுக்குரிய கிரகமும் பாவக் கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இல்லாமல் இருந்தால், அழகு, அன்பு, அறிவு, அந்தஸ்து, நற்குணம் கொண்ட மனைவி அமைவாள்.

அதேநேரம், ஓர் ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் 6, 8 ஆகிய வீடுகள் மற்றும் பாதகாதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பெற்றாலோ, திருமணத்துக்குப் பிறகு பிரச்னைக்குரிய வாழ்க்கையே அமையும். நிம்மதி பறிபோகும்.

1992-ம் ஆண்டு, என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தார் ஒருவர். தனக்கு வந்திருந்த பெண்களின் ஜாதகங்களை என் முன்பு வைத்தார். அவற்றிலிருந்து நல்ல ஜாதகத்தைத் தேர்வு செய்து தருமாறு கூறினார். மனைவியால் யோகம் கிடைக்கும் அமைப்பு அந்த நபரின் ஜாதகத்தில் இருந்தது. அதனால், அந்த ஜாதகங்களில் இருந்து ஒரு ஜாதகத்தைத் தேர்வு செய்து கொடுத்தேன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தது. ‘இதைவிட, நல்ல பண வசதியுள்ள பெண்ணின் ஜாதகத்தைத் தேர்வு செய்து தரலாமே’ என்று வந்தவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான், ‘இன்னிக்கு ஆபீஸுக்கு நடந்து போகும் நீங்கள், அந்தப் பெண் மனைவியாக வந்தால், காரில் போவீர்கள். அவ்வளவு அதிர்ஷ்டமான ஜாதகம் அது’ என்றேன்.

அவரும் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். நான் தேர்வு செய்த ஜாதகரோடு அவருக்குத் திருமணம் நடந்தது. நான் நினைத்தபடியே அவரின் வாழ்க்கையில் உடனடியாக அதிர்ஷ்டம் தேடிவந்தது. சாதாரண நிலையில் இருந்த அவர் இன்று ஒரு டி.வி. சேனலுக்கு உரிமையாளர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்படியான அதிர்ஷ்டம் தரும் மனைவி தங்கள் மகனுக்கு அமைய, ஓர் ஆணின் பெற்றோர் சில நல்ல விஷயங்களைச் செய்வது நல்லது.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்வது; அல்லது, திருமணச் செலவின் குறிப்பிட்ட பகுதியை மனமுவந்து ஏற்றுக்கொள்வது. குறிப்பாக, அந்தப் பெண் ணுக்கு மாங்கல்யம் வாங்கித் தருவது.

உறவுகள் யாருமே இல்லாத பெண்களின் திருமணத்துக்குத் தங்களால் முடிந்த உதவி செய்வது.

கன்னிப்பெண்களுக்கு வெள்ளியால் ஆன பொருள் தானம் செய்வது;

இப்படிப்பட்ட நல உதவிகளோடு, சஷ்டி திதி அன்று திருத்தணி முருகனை வழிபட, அதிர்ஷ்டம் அள்ளித்தரும் பெண் மனைவியாக அமைவாள் என்பது திண்ணம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் சுபகாரியங்களைத் தொடங்கலாமா?

ஜாதகத்தில் மற்ற கிரக சாரங்களின் நிலைகளைக் கணித்து, சாதகமாக இருந்தால் தாராளமாகத் தொடங்கலாம். பொதுவாக, இரண்டாவது சுற்றுச் சனியை ‘பொங்கு சனி’ என்பார்கள். ஜாதகரது அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவரது வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் இந்த பொங்கு சனி கொடுப்பார்.

என்ன... சில நேரங்களில் மட்டும் நம் கண்களை மறைப்பார் சனி பகவான். அதனால் தொடங்கவுள்ள சுபகாரியங்களில், தக்க முன்னேற்பாடுகளுடன், நல்ல ஆய்ந்தறிந்து திருப்தி ஏற்பட்டபிறகு தொடங்கலாம். உதாரணமாக வீடு-மனை வாங்கப் போகிறீர்கள் எனில், பிளாட் அப்ரூவல், வில்லங்க சர்ட்டிஃபிகேட் போன்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை கவனமா கப் பார்த்துக்கொள்ள வேண்டும். கல்யாண காரியம் எனில், ஜாதகத்தை நன்கு ஆய்ந்தறிந்து செயல்படவேண்டும்.