Published:Updated:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

Published:Updated:
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

Auto Expo 2018:

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo 2018) வெகு பிரமாண்டமாகத் தொடங்கியுள்ளது. நிகழ்வுகள் குறித்த உடனடி செய்திகள் இங்கே.


டாடாவின் வருங்கால மாடல்கள்
 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates


 

ஜெயம் ஆட்டோமோட்டிவ் லிமிடெட் நிறுவனத்துடன் இனைந்து உருவாக்கப்பட்ட டாடா டிகார் மற்றும் டியாகோ மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். இந்த கார்கள் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களுக்கும் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள JTP மாடல் கார்களுக்கும் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் JTP மாடல் கார்களில் பெரிய ஏர் வென்ட் கொண்ட க்ரில், பம்பரில் பனி விளக்குகளுக்குத் தனி இடம், காரின் போனட்டிலும், ஃபென்டரிலும் ஏர் வென்ட், Smoked ப்ரொஜக்டர் ஹெட்லேம்ப், சைடு ஸ்கர்ட், காரின் பின் பகுதியில் Diffuser போன்ற மாற்றங்கள் உள்ளது. 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல், குறைந்துள்ள க்ரவுண்ட் க்ளியரண்ஸ் என்று காரின் பெர்ஃபார்மென்ஸை கூட்டுவதற்கு காரில் சிலவற்றை மாற்றியமைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். 

இந்த கார்களின் பெரும் மாற்றம் இன்ஜினிலும், சஸ்பென்ஷனிலும்தான் நிகழ்ந்துள்ளது. இந்த காரில் இருப்பது நெக்ஸானில் உள்ள 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின்தான் என்றாலும் இவை 110bhp பவரும் 15kgm டார்க்கும் தரும்விதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காரின் ஆக்ஸிலரேஷன் அதிகரிப்பதற்காக கியர் பாக்ஸும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளது. மேலும் இந்த கார்களின் சஸ்பென்ஷன் பர்ஃபார்மென்ஸ் கார்களுக்கு ஏற்றவாறு டியூன் செய்யப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் முழு கறுப்பு நிற இன்டீரியர்கள், அலுமினியம் பெடல், ஹார்மன் வழங்கும் 8 ஸ்பீக்கர்கள், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்று சில மாற்றங்களும் உள்ளன. காரின் பெர்ஃபார்மன்ஸ் குறித்த தகவல்களையும், JTP மாடல் எப்போது விற்பனைக்கு வரும் என்பதையும் இன்னும் இந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

டாடா மோட்டார்ஸின் புதிய கான்சப்ட் ஹேட்ச்பேக் கார்
 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

டாடா மோட்டார்ஸ் புதிய கான்சப்ட் ஹேட்ச்பேக் காரை காட்சிப்படுத்தியுள்ளது. 45X கான்சப்ட் என்ற இந்த ஹேட்ச்பேக் கார் மூலம் ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மன்டில் அடியெடுத்து வைப்பதாக இருக்கிறது டாடா. இந்தியாவின் தெருக்களில் போகும்போது பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு இந்த கார் ஸ்போர்ட்டியாக உள்ளது. காரின் டிசைன் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் காரை போன்று உள்ளது. டாடாவின் அடுத்த தலைமுறை கார்கள் எப்படி வரப்போகிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது 45X. ஸ்லிம்மான ஹெட்லைட், புதுமையான ஸ்டைலில் பம்பர், பம்பரையும், ஹெட்லைட்டையும் இணைக்கும் humanity line என்று ஒவ்வொன்றையும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். 

காரின் பக்கவாட்டில் உள்ள ஏரோ டைனமிக் மேடுகள், டோரின் கீழ்ப் பகுதியில் உள்ள பள்ளமான இடம், 18 இன்ச் அலாய் வீல், சிறப்பாக வடிவமைக்கப்ட்ட வீல் ஆர்ச்சுகள், கறுப்பு நிற ரூஃப் மற்றும் ஸ்பாய்லர், ஷார்ப்பான பின் பக்க டிசைன், உயரமாகக் காட்சியளிக்கும் எக்ஸாஸ்ட் பைப், tri-arrow pattern பனி விளக்குகள் என்று காரை செதுக்கியுள்ளது டாடா மோட்டார்ஸ். டாடாவின் AMP ப்ளாட்ஃபார்மில் உற்பத்தியாகப்போகும் முதல் மாடல் கார் இது. இந்தக் காரை 2019-ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாக சொல்கிறது டாடா மோட்டார்ஸ். காரில் உட்புறம் மற்றும் காரில் எந்த இன்ஜின் வரவுள்ளது என்பதை இதுவரையில் வெளியிடவில்லை டாடா மோட்டார்ஸ். 

டாடாவின் நெக்ஸான் ஏரோ

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸான் காரை வாங்குபவர்களுக்கு விருப்பத்திற்கேற்ப கஸ்டமைசேஷன் ஆப்ஷனை அளிக்கவுள்ளது. இதற்கு அடிக்கல் நாட்டும் வகையில் ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டு புதிய ஸ்டைலிங் கிட் (styling kit) வெளியிட்டுள்ளது. காரின் விலையுயர்ந்த வேரியண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் இந்தத் தனி கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களுக்கு Aero மற்றும் Aktiv என்று பெயர்வைத்துள்ளது. Aero மாடல் காரில் முன்பு இருந்ததை விடக் காரை பலசாலியாகக் காட்டுவதற்கு புதிய பாடி கிட் வருகிறது. பக்கவாட்டு பகுதி, முன் மற்றும் பின்பக்க பம்பர்கள் போன்ற பகுதிகளில் சிகப்பு நிறங்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. liquid silver என்ற புதிய கலரில் வரும் காரில் piano black நிறத்தில் மேற்கூரையை பெயின்ட் செய்து அசத்தியுள்ளது. காரின் உள்ளே சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல், டாஸ்போர்ட் போன்ற பகுதிகளில் gloss black plastics பயன்படுத்தப்பட்டுள்ளது. Aktiv பாடி கிட்டும் அதற்கு ஏற்ப தனித்த கஸ்டமைசேஷன் ஆப்ஷனில் வருகிறது. 

இந்த புதிய மாற்றங்களோடு இணைந்து வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஆக்சஸரீஸ் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றார்போல் தேர்வுசெய்து இணைத்துக்கொள்ளலாம் என்கிறது டாடா மோட்டார்ஸ். டாடாவின் அனைத்து ஷோரூம்களிலும் கார் மாடிஃபிகேஷன் செய்யும் செயலியும் அதற்கான வசதியும் பொருத்தியுள்ளதாக கூறியிருக்கிறார்கள். 

டி.வி.எஸ்ஸின் புதிய கான்சப்ட் பைக்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

டிவிஎஸ் எதிர்காலத்தில் உருவாக்கப்போகும் பைக்குகளை ஆட்டோ எக்ஸ்போவில் கான்சப்ட்டாக வைப்பது வழக்கம். அந்த வரிசையில் வந்ததுதான் அப்பாச்சி 200, அப்பாச்சி RR310 போன்ற பைக்குகள். தற்போது டிவிஎஸ் பவர் க்ரூஸர் செக்மன்டில் நுழையவிருப்பதை Zeppelin கான்சப்ட் பைக் மூலம் காண்பித்துள்ளது. இந்த பைக் வெறும் பவர் க்ரூஸர் என்பது மட்டுமல்லாமல் இதைப் பாதி ஹைப்ரிட் பைக் எனவும் குறிப்பிடலாம். இந்த பைக்கில் 20bhp பவரும், 1.8kgm டார்க்கும் தரக்கூடிய 220 சிசி இன்ஜினும், 1,200W regenerative மோட்டாரும் உள்ளது. இந்த மோட்டாருக்கு 48V Li-ion பேட்டரி மூலம் பவர் கிடைக்கும். பாதி ஹைப்ரிட் என்பதால் இந்த பைக்கின் மைமேஜும் பவரும் நிச்சயம் அதிகமாகவே இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இந்த பைக் செல்லும் என்று டிவிஎஸ் கூறியுள்ளது. LED ஹைட்லைட், RR3100-ல் இருந்து பெறப்பட்ட 41 மிமீ USD ஃபோர்க், அகலமான ஃப்ளாட் ஹேண்டில் பார், டிஜிட்டல் மற்றும் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 1,490mm வீல் பேஸ், 300mm முன்பக்க டிஸ்க் பிரேக், 240mm பின் பக்க டிஸ்க் பிரேக், dual-channel ABS, 110/70 ப்ரெஃபைல் கொண்ட17 இன்ச் முன் பக்க டயர், 140/70 ப்ரெஃபைல் கொண்ட15 இன்ச் பின் பக்க டயர் என்று பல அம்சங்கள் இதில் உள்ளது. இந்த பைக்கின் எடை 168 கிலோ. வழக்கமாக வரும் Chain டிரைவுக்கு பதிலாக இந்த பைக்கில் belt டிரைவ் வருகிறது. டிவிஎஸ்ஸின் Zeppelin கான்சப்ட் தயாரிப்புக்கு உட்படும் மாடலாக மட்டுமே தெரிகிறது ஆனால் இந்த கான்சப்டில் அதிக உலோகங்ள் பயன்படுத்தியிருப்பதால் தற்போது இருப்பதை போலவே வருவது சந்தேகம்தான். எடையையும், விலையையும் குறைப்பதற்கு வேறு ஏதேனும் மெட்டீரியலை வைத்துத் தயாரிப்பார்கள். பஜாஜ் அவெஞ்சர், சுஸுகி இன்ட்ரூடர், பஜாஜ் டொமினார் D400 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக உள்ளது Zeppelin கான்சப்ட் பைக். இந்த பைக்கை எப்போது உற்பத்திசெய்யப்போகிறது என்பதையும் எப்போது விற்பனைக்கு வரும் என்பதையும் டிவிஎஸ் குறிப்பிடவில்லை. 

ஹோண்டா X-Blade

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புது மாடல் பைக்கை அறிமுகப்படுத்தும் ஹோண்டா இந்த வருடமும் அதன் கடமையை தவறாமல் செய்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் X-Blade எனும் புதிய மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது . இளம் தலைமுறையினரை டார்கெட்டாக வைத்து வெளிவந்திருக்கும் இந்த பைக்கின் வடிவமைப்பு பார்க்கும்போது ஹார்னெட்டை ஞாபகப்படுத்தினாலும் இந்த பைக்கை ஹார்ப்பான டிசைனோடும், கரடுமுரடான தோற்றத்தோடும் வடிவமைத்துள்ளார்கள். இந்த பைக்கின் ஹெட்லைட்டுக்கு ஹோண்டா 'Robo-face' என்று பெயர் வைத்துள்ளது. LED ஹெட்லைட், ஷார்ப்பான LED டெயில்லைட், உயரமான பில்லியன் சீட், புதுமையாகவும்-வித்தியாசமாகவும் உள்ள பில்லியன் கிராப் ரயில்ஸ், twin-outlet muffler, ஹார்னெட்டில் இருப்பதுபோன்று ஆனால் கூடுதல் செயல்பாடுகள் கொண்ட ஃபுல் டிஜிட்டல் கன்சோல் போன்று புதிய அம்சங்கள் உள்ளது. ஹார்னெட்டில் உள்ள அதே 162.7 சிசி இன்ஜின்தான் இதிலும் உள்ளது ஆனால் இந்த இன்ஜின் 13.9bhp பவர் மற்றும் 1.4kgm டார்க் தரும்விதமாக டியூன் செய்யப்பட்டுள்ளது. இது ஹார்னெட்டின் பவர் மற்றும் டார்க்கை விட குறைவானது. இதில் 80/110 R17 முன்பக்க டயரும் 130/70 R17 ப்ரெஃபைல் பின் பக்க டயரும் வருகிறது. இதுவும் ஹார்னெட்டை விடச் சிறிய டயர்களே. X-blade பைக்கில் முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின் பக்கம் டிரம் பிரேக்கும் வருகிறது. ஹோண்டாவின் combi braking system இதில் உள்ளது. 5 நிறங்களில் வரும் இந்த பைக்கின் விலை 80,000 முதல் 85,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிளின் புதிய 2018 ஹார்னெட் 160

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

ஹோண்டா மோட்டார்சைக்கில் புதிய 2018 ஹார்னெட் 160 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வந்துள்ள ஹார்னெடின் இன்ஜின் மற்றும் பெர்ஃபார்மன்ஸில் எந்த மாற்றமும் இல்லை. வெளிப்புற மாற்றங்களோடு மட்டுமே வந்துள்ளது ஹார்னெட். இந்த 2018 மாடலில் LED ஹெட்லைட்டுகள், சிங்கில் சேனல் ABS, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என்று பல மாற்றங்கள் சில மாற்றங்கள் வந்துள்ளது. பைக்கின் ஸ்டிக்கரையும் மாற்றியமைத்துள்ளது ஹோண்டா. ABS வருவதால் இந்த புதிய மாடலின் விலை 8000 ரூபாய் வரை அதிகமாக இருக்கலாம். மேலும் ABS ஆப்ஷனாக மட்டுமே வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரீவ்ஸ் காட்டனின் புதிய பிஎஸ் 6 இன்ஜின்
 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates


 

க்ரீவ்ஸ் காட்டன் இரண்டு புதிய பிஎஸ் 6 இன்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 30-க்கு மேற்பட்ட மூன்று சக்கரம், நான்கு சக்கரம் மற்றும் விவசாயத்துக்குப் பயன்படும் வாகனங்களுக்கு இந்நிறுவனம் இன்ஜின் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் பிஎஸ் 6 தரக்கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்ட சூழ்நிலையில் இந்த நிறுவனம் பெட்ரோல் மற்றும் எரிவாயு மூலம் இயங்ககூடிய புதிய இன்ஜின்களை அறிமுகப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கதாக உள்ளது. இந்த இரண்டு இன்ஜின்களும் linear twin-piston எனும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் முந்தைய இன்ஜின்களை விட 30 சதவிகிதம் அதிக எரிபொருள் திறனை தருவதுமட்டுமில்லாமல், இன்ஜினில் இருந்து வரும் நச்சுப் புகையையும் அதிக அளவு கட்டுப்படுத்திவிடுகிறதாம்.

TCA ஸ்போர்ட்ஸ் கார்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

இந்தியாவில் தலைசிறந்த ஆட்டோமொபைல் டிசைன் நிறுவனங்களில் ஒன்றான திலிப் சப்பாரியாவின் டிசி டிசைன் புதிய ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்துள்ளது. TCA என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்போர்ட்ஸ் கார் கான்சப்டை பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா அறிமுகப்படுத்தினார். டைடேனியம் (Titanium), கார்பன் (Carbon) மற்றும் அலுமினியம் (Aluminium) உலோகங்களை வைத்து இந்தக் காரை வடிவமைத்துள்ளதால் இதற்கு TCA என்று பெயர் வைத்துள்ளது டிசி டிசைன். இந்த காரில் 320bhp பவர் தரக்கூடிய 3.8 லிட்டர் V6 இன்ஜின்- 6 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் கூட்டணி உள்ளது. 

299 TCA கார்களை மட்டுமே தயாரிக்கப்போவதாக டிசி டிசைன் கூறியுள்ளது. ஏற்கனவே 60 காருக்கான முன்பதிவுகள் வந்த நிலையில்அக்டோபர் மாதம் முன்பதிவு செய்தவர்களுக்கு கார்கள் டெலிவரி தரப்படும் என்று சொல்லியிருக்கிறது. இந்த காரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 39 லட்சம்.

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியிருக்கும் ஸ்விஃப்ட்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

எல்லோருக்கும் பிடித்த ஸ்விஃப்ட், இப்போது மேலும் பிடிக்கும் வகையில் வந்துவிட்டது. பம்பர் டு பம்பர் ஏகப்பட்ட மாற்றம் கண்டிருக்கிறது ஸ்விஃப்ட். ஜாகுவார் F டைப் காரை போன்ற முன்பகுதி,  ஆடி ஸ்போர்ட்ஸ் கார்களில் இருக்கும் Esque போன்ற கிரில் வரிவம், டர்பைன் பிளேடு ஸ்டைலில்16 இன்ச் வீல்கள், லேசாக இறங்கியிருக்கும் ரூஃப், 2,450 மிமீ வீல் பேஸ், 254 லிட்டர் பூட் ஸ்பேஸ்,2-POD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என பல புது அம்சங்கள் உள்ளது.  83bhp பவர் தரும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 75hp பவர் தரும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின். 5 ஸ்பீடு மேனுவல், மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ் என பல வேரியண்டில் தேவைக்கேற்ப வருகிறது. இதன் விலை (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) Rs 4.99 லட்சம் முதல் 8.29 லட்சம் வரை என்று அறிவித்துள்ளது மாருதி சுஸுகி.

மின்சார க்ரூஸர் பைக்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

யுஎம் மோட்டார்ஸ் தனது முதல் மின்சார க்ரூஸர் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. 'யுஎம் ரெனிகாடே Thor' என்ற இந்த பைக் உலகத்தின் முதல் கியர்பாக்ஸ் கொண்ட மின்சார பைக் என்கிறது இந்த நிறுவனம். முழு சார்ஜில் 270 கி.மீ தூரம் பயணிக்கக்கூடிய பைக் இது. மேலும் அதிகபட்சமாக 180 கி.மீ வேகம் வரை போகக்கூடிய இது 7 kgf டார்க்கும் தரவல்லது. இந்த பைக்கின் பேட்டரி லிக்விட் கூலிங் முறையில் குளிர்விக்கப்படுகிறது. ரெனிகாடே Thor பைக்கில் TFT ஸ்கிரீன், ப்ளூடூத் வசதி, ஜி.பி.எஸ், போன்றவை உள்ளன. இந்த பைக்கை இந்தியாவுக்காக மாற்றியமைத்து, இந்தியாவிலேயே உற்பத்தியை துவங்கி 2020-ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாகவும் இதன் விலை இந்தியாவில் 4.9 லட்சம் என்றும் கூறியுள்ளது யுஎம். தற்போது வெளியாகியிருந்து இந்த பைக்கின் முதல் 50 யூனிட்டை இத்தாலியில் விற்பனைசெய்யப்போவதாகவும், இதன் விலை 9.9 லட்சம் ரூபாய் என்றும் கூறியுள்ளது. 

ரெனிகாடே Thor பைக் மட்டுமில்லாமல் ரெனிகாடே வேகாஸ் என்ற பைக்கையும் காட்சிக்கு வைத்துள்ளது. மேலும் 230சிசி ஆயில் கூல்ட் இன்ஜின் கொண்ட இரண்டு புதிய மாடல் பைக்குகளை இந்தியாவுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. Renegade Duty S மற்றும் Renegade Ace எனும் இந்த பைக்குகளின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.10 லட்சம் ரூபாய். இரண்டு பைக்குகளும் எப்போது விற்பனைக்கு வரும் என்பது உறுதிப்படுத்தவில்லை.

Flow - மின்சார ஸ்கூட்டர்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

22 மோட்டார்ஸ் எனும் இந்திய நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட் ஸ்கூட்டர் செக்மன்டில் 'Flow' எனும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த flow ஸ்கூட்டர் தன்னை தானே பராமரித்துக்கொள்ளும் வாகனம். ப்ளூடூத், வைஃபை போன்ற வசதிகள் உள்ள இந்த ஸ்கூட்டர், சர்வீஸ் நேரம், பேட்டரி எப்போது சார்ஜ் செய்ய வேண்டும், வழக்கமாகப் போகும் ரோடு கன்டிஷன் எப்படி உள்ளது, ஸ்கூட்டரில் எந்தப் பாகம் செயலிழக்கும் எப்போது செயலிழக்கும் என்று பார்த்து தானாகவே ஆர்டர் செய்வது, 1 மணி நேரத்தில் 70 சதவிகிதம் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி என் பல சிறப்பம்சங்கள் கொண்டது. LED லைட்டுகள், Combined Braking System, டியூப்லெஸ் டயர், 230mm வரை water resistant, பாஷ் நிறுவனம் தயாரிக்கும் டிசி மோட்டார் என பல அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. ரிவர்ஸ் கியர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என்று கார்களுக்கே உள்ள சில வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. ரிமோட் ஸ்டாப் போன்ற வசதிகளும், 2,100W பவரும் 9 Kgm டார்க்கும் தரக்கூடிய மோட்டாரும் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 80 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. இந்த ஸ்கூட்டர் 74,740 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும். 

Emflux One - மின்சார பைக்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

மின்சார பைக் தாயரிக்கும் Emflux எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் முதல்முறையாகத் தனது பைக் ஒன்றைக் காட்சிப்படுத்தியுள்ளது. 'Emflux One' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மின்சார பைக் மனிக்கு 200 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை செல்லும் என்று சொல்கிறார்கள். 3 விநாடியில் 100 கி.மீ வேகத்தைத் தொடும் இந்த மின்சார பைக்கில் 60kw பவரும் 8.4kgm டார்க்கும் தரக்கூடிய மோட்டார் உள்ளது. 2019-ம் ஆண்டு இந்த பைக்கை சந்தைப்படுத்தவுள்ளதாகவும், இதன் விலை தற்போது ரூ.6 லட்சம் என்று நிர்ணயித்துள்ளதாகவும் Emflux நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

Cleveland CycleWerks இந்தியாவில் முதல்முறையாகத் தனது பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

அமெரிக்காவைச் சேர்ந்த பைக் நிறுவனமான க்ளீவ்லேண்ட் சைக்கில்வோர்க்ஸ் (Cleveland CycleWerks) இந்தியாவில் முதல்முறையாகத் தனது பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது. இன்னும் 4 மாதத்திற்குள் Misfit, Ace Cafe, Ace Deluxe மற்றும் Ace Scrambler எனும் நான்கு பைக்குகளையும் வெளியிடப்போவதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த நான்கு பைக்குகளுக்கும் 2 முதல் 2.5 லட்சம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் தற்போது 250 சிசி இன்ஜினோடு வரவுள்ளது. இந்நிறுவனத்தின் நான்கு பைக்குகளும் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும்.

சுஸுகி பர்க்மன் 125 (Burgman 125) 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

சுஸுகி மோட்டார்சைக்கில்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் தனது புதிய 'சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட்' ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது. விரைவில் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் உள்ள அதே 124.3 சிசி சிங்கில் சிலிண்டர் கார்புரேட்டர் இன்ஜின்தான். இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் LED லைட்டுகள் வருகிறது. முன்பக்கம் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின் பக்கம் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பர் சஸ்பன்ஷனும் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் வீல், 90/90 சைஸ் டயர் முன்பக்கமும் 10 இன்ச் வீல் மற்றும் 90/100 டயர் பின் பக்கமும் உள்ளது, இந்த ஸ்கூட்டரின் பவரையும், டார்க்கையும் சுஸுகி வெளியிடவில்லை. இந்த ஸ்கூட்டர் ஹோண்டா க்ராஸியா, டிவிஎஸ் NTorq 125, வெஸ்பா 125 ஸ்கூட்டர்களோடு போட்டிபோடவுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் அல்லது வரும் ஆண்டும் துவக்கத்தில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆல் நியூ ஆக்டிவா 5G

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

ஏர்டல் 5G வருமா இல்லையோ ஆக்டிவா 5G வந்துவிட்டது. தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 5-ம் தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டர் அடுத்தமாதம் சந்தைக்கு வருமாம். 

ஆட்டிவா 5G ஸ்கூட்டர் இரண்டு புதிய வண்ணங்களில் வரவுள்ளது. LED லைட்டுகள் மட்டுமில்லாமல் இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சர்வீஸ் செய்யவேண்டிய நேரத்தை காட்டும் இன்டிகேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளது. க்ரோம் ஸ்டைலிங், முன்பக்கம் பைகளை மாட்டிக் கொள்ள ஹுக்குகள், சைலன்சர் கார்டு போன்றவையும் வருகிறது. Dazzle Yellow Metallic மற்றும் Pearl Spartan Red என்று இரண்டு வண்ணங்களில் வரும் ஆக்டிவா 5G இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது இருக்கும் 4-ம் தலைமுறை ஆக்டிவாவில் இருக்கும் அதே 109cc சிங்கில் சிலிண்டர் இன்ஜின்தான்.

மஹிந்திராவின்  convertible கார் ஸ்டிங்கர் (stinger)

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

மஹிந்திரா கையிலும் புதிய கான்சப்ட் உள்ளது என்பதைக் காட்டும்விதமாக ஸ்டிங்கர் காரை காட்சிப்படுத்தியுள்ளது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம். TUV 300 காரின் ப்ளாட்ஃபார்மில் உருவாகவுள்ள ஸ்டிங்கர் கார் 2 டோர், 4 சீட் கொண்ட மேற்கூரையை மடித்துவைக்ககூடிய convertible கார். காரின் வெளித்தோற்றம் TUV 300 போலவே இருந்தாலும் காரின் உட்புறத்தில் பல மாற்றங்கள் உள்ளது. காரின் உள்ளே டேஷ்போர்டுக்கு நடுவில் பெரிய இன்போடயின்மன்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் ஆஃப் ரோட் மோடு உள்ளது. இது காரின் ரைடிங் ஸ்டைலை ஆஃப் ரோடுக்கு ஏற்றார் போல் மாற்றிவிடும். காரின் பின் பகுதியில் ஸ்பேர் வீல் உள்ளது. இந்த காரில் உள்ள 1.5 லிட்டர் இன்ஜின் 140 BHP பவரையும் 32kgm டார்க்கையும் தரக்கூடியது. வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருக்கும்பட்சத்தில் இந்தக் காரை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டுவரும்.

மாருதி சுஸுகி  E-சர்வைவர் கான்சப்ட்
 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates


 

E-சர்வைவர் எனும் ஹம்மர் ஸ்டைல் காரை மாருதி காட்சிப்படுத்தியுள்ளது. எஸ்யூவி-யில் எலெக்ட்ரிக் மாடலைக் கொண்டுவருவது புதிய முயற்சி. டோக்கியோ மோட்டார் ஷோவில் சென்ற ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த E-சர்வைவர் கார் லேடர் ஃப்ரேம் சேஸியில் வடிவமைக்கப்பட்டது. நான்கு வீல்களுக்கும் தனித்தனியாக 4 மின்சார மோட்டார்களை வருகிறது. இது 4 வீல் டிரைவிற்கு சமம். இந்த கார் ஜீப், லாண்ட் ரோவர் போன்று ஒரு சீரியஸான ஆஃப் ரோடு காராக இருக்கும் என்பதை இதன் பெரிய க்ரவுண்ட் க்ளியரண்ஸ், பலமாக தெரியும் வீல் ஆர்ச், கரடுமுரடான டயர்கள், முரட்டுத்தனமான தேற்றம் போன்றவை குறிப்பிட்டு காட்டுகிறது. இந்தக் காரை விட்டாரா பிரெஸ்ஸா, ஜிம்னி போன்ற எஸ்யூவிகளின் டிசைனை துணையாக வைத்து வடிவமைக்கப்பட்டது என்கிறது மாருதி. 

இந்த காரில் இரண்டு பெரிய திரைகள் உள்ளது. இந்தத் திரைகள் காரில் இருக்கும்போது நம் கண்ணுக்கு தெரியாத காரால் மறைக்கப்படும் பொருட்களை Augmented reality எனும் தொழில்நுட்பம் மூலம் காண்பிக்கும். இந்த கார் மூலம், மாருதி சுஸுகி மின்சார வாகன தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், Augmented reality, ஒவ்வொரு காரும் இணைந்து செயல்படும் தொழில்நுட்பம் எனப் பல உயர்ந்த தொழில்நுட்பங்களை கொண்டுவரவுள்ளது. மாருதிக்கு ஏகப்பட்ட பொக்கேக்கள் காத்திருக்கின்றன.

டிவிஎஸ்ஸின் முதல் மின்சார ஸ்கூட்டர்
 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates


 

டிவிஎஸ் மோட்டார்ஸ் புதிய மின்சார ஸ்கூட்டர் கான்சப்டை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 12kw மின்சார மோட்டாரும் 3 லித்தியம் அயான் பேட்டரியும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் 100 கி.மீ வேகத்தை வெறும் 5.1 விநாடியில் தொட்டுவிடுவது மட்டுமில்லாமல் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்தால் 80 கி.மீ தூரம் வரை செல்லலாம் என்றும் சொல்கிறார்கள். 1 மணி நேரத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் ஆகும்படி இதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் டிவிஎஸ் நிறுவனத்தினர். இந்த ஸ்கூட்டர் TFT ஸ்கிரீனுடன் ஸ்பீடோமீட்டர், பேட்டரி சார்ஜ் ஸ்டேட்டஸ், வேகத்தை கணக்கிடும் டாகோ மீட்டர், பயண தூரத்தை பார்க்க ட்ரிப் மீட்டர், ஓடோ மீட்டர், க்ளவுட் தொழில்நுட்பம் மூலம் விவரங்களை சேமிக்கும் வசதி, 3 ரைடிங் மோடுகள், பார்க்கிங் அசிஸ்ட், ஜிபிஎஸ் போன்ற வசதிகளுடன் உள்ளது. Intel நிறுவனத்தின் உதவியுடன் இந்த ஸ்கூட்டரில் பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கவுள்ளதாக கூறுகிறார்கள் டிவிஎஸ் நிறுவனத்தார். எடை குறைவான பெரிமீட்டர் ஃப்ரேம், டயமண்ட் கட் அலாய் வீல், ஏபிஎஸ் என்று பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் வரப்போகிறது என்று சொல்கிறார்கள். பொருத்திருந்து பார்ப்போம். 

ஹீரோ 125சிசி ஸ்கூட்டர் சந்தையில் மாஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்
 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

ஹீரோ 125சிசி ஸ்கூட்டர் சந்தையில் மாஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்களுடன் கால்பதிக்கிறது. இப்போது இருக்கும் மேஸ்ட்ரோ மற்றும் டூயட் ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில் வரவிருக்கும் 125 சிசி ஸ்கூட்டரின் வடிவமைப்பில் பெரிய வித்தியாசங்கள் இல்லை, இன்ஜின் மட்டுமே மாறியுள்ளது. மேலும் எல்.ஈ.டி டெயில் லைட், பூட் லேம்ப், USB சார்ஜர், பாஸ் லைட் போன்றவை கூடுதலாக உள்ளது. இந்த மாடலில் ஆப்ஷனாக டிஸ்க் பிரேக்கும் வரவுள்ளது. இந்த ஸ்கூட்டரில் வரும் 125 சிசி இன்ஜின் 8.7bhp பவரும், 10.2Nm டார்க்கும் தரவல்லது. கூடுதலாக இந்த ஸ்கூட்டகளில் முதல் முறையாக, ஹீரோ பைக்குகளில் மட்டுமே இருக்கும் i3S (idle-start-stop) டெக்னாலஜியும் கிடைக்கும்.

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக களமிறங்கிவிட்டது டொயோட்டா யாரிஸ் 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக யாரிஸ் செடனை வெளியிட்டுள்ளது டொயோட்டா. இந்த மிட் சைஸ் செடான் மே மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாரிஸ் செடான் காரின் டிசைன் கரோலாவை பார்த்து வடிவமைக்கப்பட்டது போலவே உள்ளது. LED ப்ரொஜக்டர் லைட்டுகளுடன் கூடிய DRL லைட், 16 இன்ச் அலாய் வீல் போன்றவை உள்ளன. 

தற்போது இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினோடு மட்டுமே வரவுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியும் விலையுயர்ந்த வேரியண்டில் 7 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் கூட்டணியும் வைத்துவரவுள்ளது. 108bhp பவர் தரக்கூடியது இந்த இன்ஜின். இந்தியாவில் விற்பனையாகப்போகும் இந்த காரில் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகரித்து, ரைடிங் உயரத்தையும் அதிகரித்து,15 இன்ச் வீல் உடன் தரவுள்ளதாக டொயோட்டா கூறியுள்ளது. யாரிஸ் காரில் 185 செக்‌ஷன் ரியர் டயர் வரவுள்ளது. இந்த காரில் 7 ஏர் பேக், பார்க்கிங் சென்சார், electronic stability control, டயர் ப்ரஷர் மானிட்டர், powered driver's seat என பல சொகுசு அம்சங்களுடன் இந்த கார் வெளிவரும் என்று டொயோட்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் H5X SUV கான்சப்ட் கார்:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

டாடா மோட்டார்ஸ் முற்றிலும் புதுமையான H5X SUV கான்சப்ட் காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்தக் காரை பார்க்கும்போது டாடா மோட்டார்ஸ் தனது டிசைன் பாணியை முழுவதுமாக மாற்றியுள்ளது தெரிகிறது. இந்த காரின் மொழுக் டிசைன், கம்பீரமாக உள்ளது மட்டுமல்லாமல் காரின் சில இடங்களை பார்க்கும்தே லேம்போர்கினி காரை ஞாயபகப்படுத்தும் அளவுக்கு இதன் டிசைன் உள்ளது. 

பெரிய 22 இன்ச் வீல், காரின் பக்கவாட்டு பகுதியில் தடிமனான வீல் ஆர்ச், அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் என்று  H5X எஸ்.யூ.வி படு டஃப்பாக காட்சியளிக்கிறது. காரின் முன்பக்கம் ஸ்லிம்மாகவும் ஸ்போர்ட்டியாகவும் உள்ளது. இந்த காரில் மெல்லிசான ஹெட்லைட்டும், முன்பக்க க்ரில்லையும், பம்பரையும் பிரிக்கும் humanity line எனும் பகுதியும் காருக்கு அம்சமாக உள்ளது. பனி விளக்குகள் tri-arrow pattern எனும் புதுமையான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டு பகுதியில் பாடி க்ளாடிங்குகள் எஸ்யூவிகள் அனைத்திலும் உள்ள டிரேட்மார்க் டிசைன். காரின் C-pillar பகுதி ரூஃப் பகுதியோடு குறுகி இணைந்து மீண்டும் விரிந்து ரூஃப் ஸ்பாய்லரோடு இணைவது பார்க்க மிகவும் ஸ்டைலாக உள்ளது. பின் பக்க வீல் ஆர்ச் பம்பருடன் இணையும் பகுதி ஸ்போர்ட்ஸ் கார்களுக்கே உரித்தான டிசைன் அம்சம். பம்பருக்கு மேல் உள்ள மெல்லிய டெயில் லைட்டுகளும் அதில் டாடாவின் லோகோ என இந்த காரில் உள்ள அனைத்து அம்சங்களும் சொகுசு கார் போல காட்சியளிக்கிறது. சூப்பர் கூலாக இருக்கும் டாடா H5X எஸ்யூவி கான்சப்ட் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது. டாடாவின் இந்த கார் டெஸ்டிங்கில் உள்ளதாக சில ஸ்பை படங்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Xpulse 200... ஹீரோவின் 200சிசி ஆஃப் ரோடு பைக்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 #AutoExpo2018 #LiveUpdates

மிலான் மோட்டார் ஷோவில் வைக்கப்பட்ட Xpulse 200 கான்சப்ட் பைக்கை தற்போது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தியுள்ளது ஹீரோ மோட்டார்ஸ். இந்தியாவில் முதல் ஆஃப் ரோட் பைக்காக வந்த இம்பள்ஸ் பைக்கின் வெற்றியை தொடந்து மற்றுமொரு ஆஃப் ரோடு பைக்கை தயார்படுத்தியுள்ளது ஹீரோ மோட்டார்ஸ். 

வின்ட் ஷீல்டு, ஆஃப் ரோடு டயர்கள், 220 மிமீ கிரவுண்ட் க்ளியரண்ஸ், சற்றே உயரமான சீட், ஸ்கிட் பேட் என்று அஃப் ரோடு பைக்குகளுக்கே உரிய டிசைன். வின்ட் ஸ்கிரீனோடு இனைந்ததுபோல உள்ள LED ஹெட்லைட், க்ராஸ் பார் உடன் கூடிய ஹேண்டில் பார், ஹேண்ட் கார்டுகள், உயரமான மட்கார்டு, 190 மிமீ வீல் டிராவல் கொண்ட 21 இன்ச் முன்பக்க வீல், 170 மிமீ வீல் டிராவல் கொண்ட18 இன்ச் பின்பக்க வீல் என்று பல அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளது. 

Xpulse பைக்கில் 200 சிசி சிங்கில் சிலிண்டர், FI இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 18.4bhp பவர் தரக்கூடியது. 14 லிட்டர் பெட்ரோல் டாங்க் கொண்டுள்ளது இந்த பைக். இந்த பைக் தற்போது கான்சப்ட்டாக மட்டுமே உள்ளது. கூடிய விரைவில் இதை ஹீரோ மோட்டார்ஸ் தயாரித்து விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.