Published:Updated:

ஆடிப்பெருக்கா புல்லட் பெருக்கா?

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

மதுரை ஷோரூமில் ஒரே நாளில் 1,000 புல்லட்கள் விற்பனை!

ஆடிப்பெருக்கா புல்லட் பெருக்கா?

மதுரை ஷோரூமில் ஒரே நாளில் 1,000 புல்லட்கள் விற்பனை!

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan
ஆடிப்பெருக்கா புல்லட் பெருக்கா?

ஆடிப் பெருக்கு அன்று மதுரை கேகே நகரில், சக்தி விகடன் அசைன்மென்ட்டுக்காக ஒரு அம்மன் கோவிலுக்குப் போய்விட்டு, கூழைக் குடித்து முடித்து, வாயைத் துடைத்துவிட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தேன். போகும் வழியில் செம டிராஃபிக். ஏகப்பட்ட நெரிசல். ‘ஸ்பெஷல் கூழு ஊத்துறாங்களோ... சக்தி விகடனுக்கு அடுத்த மெயிலைத் தட்டிட வேண்டியதுதான்' என்று நினைத்து எட்டிப் பார்த்தால்... எனக்குள் இருந்த மோட்டார் விகடன் மனசாட்சி என்னை ஆசையாக வரவேற்றது.

அட, அங்கே வரிசையாக ஏகப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட்டுகள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தன. பல மாடல்கள்; பல வண்ணங்கள் எனப் பார்ப்பதற்கே மாஸாக இருந்தது சீன். வேலை மெனக்கெட்டு எண்ணி வேறு பார்த்தேன். சரியாக 101 புல்லட்கள் நின்றிருந்தன. ‘ஷோரூம்க்கு டெலிவரி வந்திருக்கும்போல’ என்று நினைத்தால்… அது டெலிவரிதான். ஆனால் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி. அதாவது, அன்று ஒரே நாளில் மதுரையில் மட்டும் 100 பேர் புல்லட் வாங்கியிருக்கிறார்களாம். அவர்களுக்கு டெலிவரி கொடுக்கத்தான் புல்லட்கள் ரெடியாகிக் கொண்டிருந்தன.

ஜி.ஏ.ராஜ்குமார்
ஜி.ஏ.ராஜ்குமார்
ஆடிப்பெருக்கா புல்லட் பெருக்கா?

இப்படி தமிழ்நாடு முழுவதும் 1,000 ராயல் என்பீல்டு புல்லட்டுகள் இந்த வருட ஆடிப் பெருக்கன்று விற்பனையாகியுள்ளன. நம் ஊர் மதுரையில்.. அதுவும் அந்த மெட்ராஸ் ஷோரூமில் மட்டும் ஒரே நாளில் 101 பைக்குகள் டெலிவரி என்றால் சும்மாவா?

ஷோரூமுக்குள் நுழைந்து, மெட்ராஸ் மோட்டார்ஸின் நிர்வாகப் பங்குதாரர் ஜி.ஏ.ராஜ்குமார் சந்தோஷமாக இருந்தார்.

‘‘பொதுவாக, ஆடிப்பெருக்கென்றாலே 60 முதல் 70 பைக்குகள் வரை விற்பனை ஆகும். கொரோனாவால் இரண்டு ஆண்டுகள், பெரிதாக விற்பனை கிராஃப் எதுவும் எகிறவில்லை. ஆனால் இந்த ஆடிப்பெருக்கு அன்று 101 பைக்குகள் எங்கள் ஷோரூமில் டெலிவரியாகிருப்பது எங்களுக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு, எங்கள் பகுதி விற்பனை மேலாளர் சார்லஸுக்கும் அவர் டீமுக்கும்தான் நன்றி! இந்த ஆடிப்பெருக்கிற்கு அதிகமான பைக்குகள் புக் ஆனதால், மாஸ் பண்ணலாம் என்று மதுரையில் உள்ள அனைத்து ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களிலும் புக் ஆன 101 பைக்குகளையும் கேகே நகரில் உள்ள எங்கள் ஷோரூமில்தான் டெலிவரி செய்தோம். இதில் க்ளாஸிக் 350 மாடல்தான் அதிகமாக விற்பனையாகின. இன்னும் சிறப்பாக இருக்க, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து இரண்டு பூசாரிகளை நாங்களே வரவழைத்து அனைத்து பைக்குக்கும் நாங்களே பூஜை செய்து, நல்ல நேரத்தில் காலை 9.00 மணியிலிருந்து 10 மணிக்குள் டெலிவரியையும் முடித்தோம். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வந்து மகிழ்ச்சியுடன் தங்களின் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் பெற்றுச் சென்றனர். கஸ்டமர்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சிதான் எங்களின் வெற்றி. இதைவிட சந்தோஷம் வேறென்ன வேண்டும்!’’ என்றார், ராஜ்குமார்.

தட் தட் புல்லட் சத்தம்… தடதடக்கட்டும்!