கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

நாடெங்கும் மின்சார வெளிச்சம் பாயட்டும்!

கோவை
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை

ஸ்பாட் விசிட் / கோவை

இட்லி முதல் இன்டர்நெட் வரை எல்லாவற்றுக்கும் தினம் உருவாகி, கொண்டாடப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இல்லாமல் இருக்குமா?

என் போன்ற எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்களுக்குத் தெரியும். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 9-ம் தேதி உலக மின்சார வாகன தினம் கொண்டாடப் படுகிறது என்று.

அன்றைக்கு, கோவையில் உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு முதல்முறையாக மின்சார வாகனங்கள் ரோடு ஷோ பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இதைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். கோவையின் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களான எக்கோ டைனமிக், இ - எமொட், e - ராய்ஸ், புரோபெல், ரூட்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இதில் பங்கு பெற்றிருந்தார்கள். கோவையில் தயாரிக்கப்பட்ட 55 மின்சார வாகனங்கள் இயக்கப்பட்டன.

ரூட்ஸ் குரூப் நிறுவனத்தின் தலைவர் ராமசாமி, ‘‘இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் நோக்கில் சொசைட்டி ஃபார் ஸ்மார்ட் இ–மொபிலிட்டி ( society for smart e- mobility) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவையில் முதல் முறையாக இப்பேரணி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது!’’ என்றார்.

நாடெங்கும் மின்சார வெளிச்சம் பாயட்டும்!
நாடெங்கும் மின்சார வெளிச்சம் பாயட்டும்!மேலும் EMF இனோவேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்வசங்கரி பேசும்போது, ‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு, புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு மாற்றாக பழைய வாகனங்களை ரெட்ரோபிகேஷன் (Retrofication) மூலம் மீண்டும் மின்சார வாகனங்களாக உருவாக்கலாம். ரெட்ரோஃபிகேஷன் என்பது ஒரு IC இன்ஜின் வாகனத்தை மின்சார வாகனமாக உருவாக்குவது. இதில் சாதகமான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் உருவான வாகனத்தின் பாகங்களைப் புதிதாக மாற்றத் தேவையில்லை. எங்கள் நிறுவனத்தில் இதன் மூலம் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கரப் பேருந்துகள் முதற்கொண்டு பல மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன!’’ என்றார்.

நாடெங்கும் மின்சார வெளிச்சம் பாயட்டும்!