Published:Updated:

யெஸ்டி டீம் கொடுத்த அட்வென்ச்சர் பயிற்சி!

 ஆஃப்ரோடு பயிற்சி: யெஸ்டி
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப்ரோடு பயிற்சி: யெஸ்டி

அதன் பெயர் - `Yezdi Trail Attack'. ஆஃப் ரோடு அட்டகாசம் செய்ய நம்மையும் அழைத்திருந்தது Yezdi.

யெஸ்டி டீம் கொடுத்த அட்வென்ச்சர் பயிற்சி!

அதன் பெயர் - `Yezdi Trail Attack'. ஆஃப் ரோடு அட்டகாசம் செய்ய நம்மையும் அழைத்திருந்தது Yezdi.

Published:Updated:
 ஆஃப்ரோடு பயிற்சி: யெஸ்டி
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப்ரோடு பயிற்சி: யெஸ்டி
யெஸ்டி டீம் கொடுத்த அட்வென்ச்சர் பயிற்சி!

கா சு இருந்தால், அட்வென்ச்சர் பைக்குகளை வாங்கி விடலாம்; ஆனால் அதை சாலையில் ஓட்ட பயிற்சி இல்லாமல் முடியாது. ஆஃப் ரோடு பைக்குகள் வாங்க ஆசையும் பணமும் இருந்தும், பயிற்சி இல்லாமல் யோசிப்பவர்களுக்காகவே, யெஸ்டி தனது வாடிக்கையாளர்களுக்கு ஓஎம்ஆர் ரோட்டில் உள்ள `the farm' என்னும் இடத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம்ஏற்பாடு செய்திருந்தது. அதன் பெயர் - `Yezdi Trail Attack'. ஆஃப் ரோடு அட்டகாசம் செய்ய நம்மையும் அழைத்திருந்தது Yezdi.

கீழே விழுந்த பைக்கைத் தூக்குவது எப்படி?

ஒருவேளை கீழே விழுந்து விட்டால், நம்முடன் வேறு யாரும் இல்லை என்றால் தன்னந்தனியாக பைக்கை நாம் ஒருவர் மட்டுமே தூக்கி நிறுத்த வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல! சரியான திசையில் சரியான கோணத்தில் நின்றபடி பைக்கைத் தூக்கினால் மட்டுமே நம்மால் தனியாக பைக்கைத் தூக்கி நிறுத்த முடியும். வகுப்பிற்கு வந்த 20 பேருக்கும் முதல் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார் ட்ரெயினர்.

யெஸ்டி டீம் கொடுத்த அட்வென்ச்சர் பயிற்சி!

எட்டுப் போடணும்; ஆனால் தள்ளிக்கிட்டே!

லைசென்ஸ் எடுக்கும்போது ஆர்டிஓ வில் பைக்கை ஓட்டிக்கொண்டுதானே எட்டு போடுவோம்; ஆனால் இங்கு பைக்கைத் தள்ளிக் கொண்டே எட்டு போட வேண்டும் அதுவும் ஃபர்ஸ்ட் கியரில்! கிளட்சைப் பயன்படுத்தி பைக்கை நகர்த்த வேண்டும். கிளட்சைச் சரியாகப் பயன்படுத்தினால் ஆஃப் ரோடில் எந்தச் சிக்கலும் இல்லாமல் ஓட்டிவிடலாம் என்பதற்கான இரண்டாவது பயிற்சிதான் இது.

குழியாவது... மேடாவது?

நான்கு அடி இறக்கமுள்ள ஒரு குழிக்குள் பைக்கில் ஃபுட்ஃபெக்கில் நின்றபடி இறங்கி மேலே வர வேண்டும். இதுதான் மூன்றாவது பயிற்சி. பைக் ஓட்டுபவரின் சமநிலையைச் சோதிக்கும் பயிற்சிதான் இது. கிளட்சையும் த்ராட்டிலையும் சரியாகப் பயன்படுத்திக் கீழே விழாமல் வெளியே வந்தால் நீங்கள் சாதித்து விட்டீர்கள்!

யெஸ்டி டீம் கொடுத்த அட்வென்ச்சர் பயிற்சி!

ஈஸியான ஹில் ரைடிங் ட்ரெயினிங்!

நீங்கள் கவனித்திருப்பீர்கள்; உயரமான மேட்டில் ஏறும்போது நடுவில் பைக் ஆஃப் ஆகிவிட்டால் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம். பிரேக் பிடித்தாலும் பைக் சரசரவென பின்பக்கம் கீழே நகர்ந்து வரும். அப்படி நடந்தால் அது மிகவும் ஆபத்து. அச்சூழ்நிலையில் எப்படி பைக்கைக் கையாள வேண்டும் என்று முறையாகச் சொல்லிக் கொடுத்தார் ட்ரெயினர். உண்மையில் நான்காவது பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது இந்தப் பயிற்சி மிகவும் உதவும்.

ஓ... பீச் மணல்ல இப்படித்தான் ஓட்டணுமா?

உங்களால் பீச் மணலில் ஆடாமல் உழட்டாமல் பைக்கை ஓட்டிச் செல்ல முடியுமா? அதற்கும் எளிமையாகப் பயிற்சி கொடுத்தார் பயிற்சியாளர். சரியான பேலன்ஸ், த்ராட்டில், கிளட்ச் மற்றும் வேகம் எல்லா வகையான வித்தையையும் ஒன்றாகப் பயன்படுத்த வேண்டும். நமது சமநிலையைச் சோதிப்பதற்கான பயிற்சி.

லெவல் 1 பயிற்சிகள் முழுமையாக முடிவடைந்தன. பயிற்சியின்போது யாருமே கீழே விழவில்லை. அதுவே இந்த நிகழ்ச்சியில் மாபெரும் வெற்றி. பயிற்சிக்கு முன் இருந்த தைரியத்தைவிட பயிற்சிக்குப் பின் ஓரளவு அட்வென்ச்சர் பைக்கை எப்படி ஓட்ட வேண்டும் என்ற புரிதல் எல்லோருக்கும் அதிகமாகி இருந்தது.

வீட்டுக்கு வந்த பிறகும், `இங்க பீச் எங்க இருக்கு; குண்டு குழிங்க எங்க இருக்கு; இமயமலை எவ்வளவு தூரம் இருக்கு’ என்று கவுண்டமணிபோல் கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால், அதற்கு யெஸ்டி போன்றதொரு அட்வென்ச்சர் பைக் வேண்டுமே! அவ்வ்வ்!