Published:Updated:

`சச்சின், கங்குலியைவிட அனில் கும்ப்ளே பொருத்தமாக இருப்பார்!' - மனம் திறந்து பேசிய சேவாக்

`இந்தமுறை என்னை யாரும் கேட்கவில்லை. அதனால் விண்ணப்பிக்கவில்லை!’

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வதில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளருக்கான தேர்வு நடைபெற்றது. இதில் மீண்டும் ரவிசாஸ்திரியே தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். வரும் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரை ரவிசாஸ்திரி இந்தப் பொறுப்பில் நீடிப்பார்.

Ravi saathiri
Ravi saathiri

இந்த இடைப்பட்ட காலத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், கடந்த முறை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பத்திருந்த இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக், இந்தமுறை விண்ணப்பிக்கவில்லை. இதுதொடர்பாக அவர் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

``2017 -ம் ஆண்டு பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. அப்போது பிசிசிஐ செயலாளராக இருந்த எம்.வி ஸ்ரீதர், `நான் இந்தத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்' என விரும்பி என்னைக் கேட்டார். நானும் விண்ணப்பித்தேன். ஆனால், இந்தமுறை என்னை யாரும் கேட்கவில்லை. அதனால் விண்ணப்பிக்கவில்லை” என்றார் சிரிப்புடன்.

Sachin, ganguly
Sachin, ganguly

`இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக சச்சின், கங்குலி, அனில் கும்ப்ளே ஆகியோரில் யார் தேர்வானால் சிறப்பாக இருக்கும்?' என்ற கேள்வி சேவாக்கிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், ``அனில் இந்திய அணியின் கேப்டனான நேரத்தில், அவர் எனது அறைக்கு வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Anil Kumble
Anil Kumble

அன்றைய போட்டி குறித்துப் பேசிய அவர், `அடுத்த இரு தொடர்களில் நீங்கள் கட்டாயம் இடம்பெறுவீர்கள். நீங்கள் எப்படி விளையாடினாலும் அணியிலிருந்து ஓரங்கட்டப்படமாட்டீர்கள். எப்படி விளையாடுவீர்களோ அப்படி விளையாடுங்கள். உங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்' என்றார். இதுதான் அவர் வீரர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதம். அனில் கும்ப்ளேதான் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவராக இருப்பார் என நினைக்கிறேன்” என்றார் இயல்பாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு