Published:Updated:

சந்தையை விட்டு ஒதுங்கி நிற்கத் தேவையில்லை!

சந்தையை விட்டு ஒதுங்கி நிற்கத் தேவையில்லை!

சந்தையை விட்டு ஒதுங்கி நிற்கத் தேவையில்லை!

சந்தையை விட்டு ஒதுங்கி நிற்கத் தேவையில்லை!

Published:Updated:

டந்த இரண்டு மாத காலத்தில் பங்குச் சந்தைகளானது சுமார் 9% வரை இறக்கம் கண்டிருக்கிறது. ஒரு நாளில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைவதும் மறுநாளே  500 புள்ளிகள் உயர்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக மாறிவிட்டன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மாற்று வரி, நரேந்திர மோடியின் ஓராண்டு ஆட்சியின் மீதான அதிருப்தி என  சந்தை இறக்கத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இவையெல்லாம் அடிப்படையில் பலம் வாய்ந்த காரணங்களாக இல்லை என்பதே உண்மை.

உதாரணமாக, குறைந்தபட்ச மாற்று வரியின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது ரூ.40,000 கோடிக்கு வரி விதிக்கப்படும் என  சொல்லப் பட்டாலும், 68 வெளிநாட்டு நிறுவனங்களிடம் வெறும் ரூ.602 கோடிக்கு மட்டுமே நோட்டீஸ் அணுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இதுவரை ரூ.9 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை ரூ.86,000 கோடி  முதலீடு செய்திருக்கிறார்கள். இத்தனை ஆயிரம் கோடிகளை முதலீடு செய்தவர்கள்  602 கோடி ரூபாய்க்கா ஓடப் போகிறார்கள்?

பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துக்கு உட்பட்டவைதான் என்பதை நாம் புரிந்துகொண்டாலே போதும், இப்போது நடக்கும் இறக்கத்தைக் கண்டு நாம் மனம் கலங்க மாட்டோம். சந்தையானது கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது. சென்செக்ஸ் 20,000 புள்ளிகள் இருந்தபோது சந்தைக்குள் நுழைந்தவர்கள், இன்று  நல்ல லாபம் கண்டிருப்பார்கள். இந்த லாபத்தை அவர்கள் வெளியே          எடுத்ததன் விளைவாக, சந்தை இறக்கம் கண்டதே தவிர, சீனப் பொருளாதாரம் போல நம் பொருளாதாரம் தளரத் தொடங்கிவிடவில்லை.

ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, நம் பங்குச் சந்தைகளின் போக்குகளைத் தீர்மானிக்கிறவர்கள் எஃப்ஐஐகள்தான். குறைந்தபட்ச மாற்று வரியைச் சொல்லி இன்று அவர்கள் சிறிது ஒதுங்கினாலும், நாளையே இந்தப் பிரச்னை தீர்ந்துவிட்டது என்று சொல்லி மீண்டும் நம் சந்தைக்குள் நுழையத் தயங்க மாட்டார்கள். அப்போது சந்தையானது மீண்டும் அசூர வேகத்தில் மேலே சென்றுவிடும்.

எனவே, இப்போது வந்திருக்கும் இறக்கத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்பதைவிட, இதை ஒரு வாய்ப்பாக நினைத்து சந்தையுடன் சேர்ந்து நிற்பதே சரி. பங்குச் சந்தை முதலீடானது நீண்ட காலத்துக்கானது என்கிறபோது, இப்போது ஏற்படும் இறக்கங்களால் நாம் மனம் கலங்கத் தேவையில்லை!

- ஆசிரியர்