கடந்த வாரத்தில், சீன பங்குச் சந்தைகள் திடீர் இறக்கம் கண்டு அனைவரையும் குலைநடுங்க வைத்தது. இந்தச் சரிவிலிருந்து நம்மால் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பணம் நம் தேவைக்குப்போக உள்ள, சொந்தப் பணமாக இருக்க வேண்டும். ஆனால், சீனர்களோ கடன் வாங்கி, சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். முதலில் நிலம் வாங்கி லாபம் பார்த்தார்கள். பிற்பாடு தங்கம் வாங்கி லாபம் கண்டார்கள். பிறகு பங்குச் சந்தையில் ‘மந்தை மனப்பான்மை’யுடன் குதித்தார்கள். விளைவு, பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்பில்லாமல் சந்தை ஏகத்துக்கும் உயர, அந்த லாபத்தை உடனடியாக வெளியே எடுக்க முயற்சித்து, நஷ்டம் கண்டிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

இதற்கு சீன அரசாங்கமே உறுதுணையாக இருந்திருக்கிறது. 2008-ல் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் கடன் தந்ததன் மூலம் பொருளாதாரச் சிக்கலில் மாட்டியது அமெரிக்கா. இப்போது சீன அரசாங்கமும் மக்களுக்குக் கடன் தந்து, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்ததன் மூலம் சிறு முதலீட்டாளர் களுக்குத் தவறான வழி்யைக் காட்டியது டன், பங்குச் சந்தை மீதுள்ள நம்பிக்கையும் குலைத்திருக்கிறது.

இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் எவ்வளவோ மேல். 2008-க்குமுன் ‘மந்தை’ போலச் சந்தைக்கு வந்த நம் முதலீட்டாளர்கள், அதன்பிறகு ஏற்பட்ட சரிவின் காரணமாகச் சந்தை பற்றி நன்கு புரிந்துகொண்டார்கள். விளைவு, 2011-க்குப்பின் சந்தைக்கு வந்த முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை நீண்ட காலத்தில் லாபம் தரக்கூடியது என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு, தொடர்ந்து வாய்ப்புகள் வரும்போதெல்லாம் முதலீட்டை அதிகப்படுத்தி வருகின்றனர். சீன அரசாங்கத்தைப்போல அல்லாமல், நம் அரசாங்கமானது பங்குச் சந்தைகளை நெறிப்படுத்தும் அமைப்புகளைத் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிக்கிறது. இதனால் சிறு முதலீட்டாளர்களின் நலன் காக்கப்படுகிறது.

என்றாலும், சீனாவில் தற்போது நடந்துள்ள குளறுபடிகளைச் சரியாகப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பதன் மூலமே, நம் நாட்டில் பங்குச் சந்தை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். இதன் மூலமே, கவர்ச்சியான வாக்குறுதிகளைத் தரும் மோசடி நிறுவனங்களிடம் சிறு முதலீட்டாளர்கள் சிக்காமல் தடுக்கவும், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வதைவிட நிதி சார்ந்த முதலீடுகள் நீண்ட காலத்தில் அதிக லாபம் தருபவை என்கிற உண்மையையும் உணர வைக்க முடியும்.

-ஆசிரியர்.