Published:Updated:

இனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்!

இனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்!

இனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்!

குஜராத் தலைநகர் அஹமதாபாத்தில் பேசிய செபியின் தலைவர் யூ.கே.சின்ஹா, “சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை மீது இன்னும் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்டுச் சேமிக்கும் தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். புதிய சிறு முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கலாம்'' என்று சொல்லி இருக்கிறார்.

செபியின் தலைவர் இப்படி சொல்லி இருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. காரணம், சேமிப்பதில் நாம் என்றைக்கும் சளைத்தவர்களாக இல்லை. ஆனால், சரியான முதலீட்டை தேர்வு செய்யாமல் இருப்பதே நம் பெரிய குறை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாதுகாப்பானது என  தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் வங்கி டெபாசிட்டிலும் நம் மொத்த முதலீட்டையும் போடுகிறோம். கடந்த 21 ஆண்டுகளில் தங்கமானது ஆண்டுக் கூட்டு வட்டி வளர்ச்சி விகிதத்தில் 8.11% லாபம் மட்டுமே தந்திருக்கிறது. டெபாசிட்டானது 10% லாபம் மட்டுமே தந்திருக்கிறது. ரியல் எஸ்டேட்டும் சுமார் 10% லாபம் மட்டுமே தந்துள்ளது.

இனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்!

ஆனால், பங்குச் சந்தையானது, 14 சதவிகிதத்துக்கு மேல் லாபம் தந்துள்ளது. இப்படிப்பட்ட முதலீட்டைத் தவிர்த்து விட்டு, சொற்ப லாபம் தரும் பிற முதலீடுகளை நாடுவது  நம் தலையில் நாமே மண்ணை போட்டுக்கொள்வதற்கு சமம்.

இன்றைக்கு பங்குச் சந்தையில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளைக்கூட துல்லியமாகக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறது செபி. இதனால் பங்குச் சந்தையில் பெரும் மோசடிகள் நடப்பதைத் தவிர்க்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால், ரியல் எஸ்டேட்டில் வெளிப்படைத் தன்மை என்பது இன்றும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

மேலும், உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் எல்லாம் வேகமாக ஓடி களைத்துப் போய்க் கிடக்க, நம் முன்னேற்றம் இப்போது தான் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. எனவே, அடுத்துவரும் கால நூற்றாண்டு நமக்கானது. மத்திய அரசாங்கமும் நம் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரித வேகத்தில் எடுத்தால், நம் பங்குச் சந்தையும் உயரும். சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும். மோடி அரசாங்கம்தான் இதற்கு மனதுவைக்க வேண்டும்!

- ஆசிரியர்.