Published:Updated:

இனி இல்லை ரியல் எஸ்டேட் ஏமாற்று!

இனி இல்லை ரியல் எஸ்டேட் ஏமாற்று!

இனி இல்லை ரியல் எஸ்டேட் ஏமாற்று!

த்தனை காலமும் பெரிய அளவில் முறைப்படுத்தப்படாமலே இருந்த ரியல் எஸ்டேட் தொழில், இப்போது ஒரு கறாரான சட்டதிட்டத்துக்குள் வரும் சூழ்நிலை உருவாகி இருப்பது மகிழ்ச்சியான விஷயமே. மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி) மசோதாவானது, குளிர்காலக் கூட்டத் தொடரிலோ அல்லது அடுத்துவரும் கூட்டத் தொடரிலோ நாடாளுமன்றத் தில் தாக்கலாக வாய்ப்பிருக்கிறது. இந்த மசோதா மட்டும் சட்டமாகிவிட்டால், வீடு வாங்குவதற்காக கண்கள் நிறையக் கனவுகளுடன் வரும் அப்பாவி மக்கள், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் ஏமாறும் நிலை பெருமளவில் குறைந்துவிடும்.

இந்த மசோதாவின் முக்கிய அம்சமே, 500 ச.மீ பரப்பளவில் செயல்படுத்தப் படும் திட்டங்கள் அனைத்துமே ரியல் எஸ்டேட் கண்காணிப்பு அமைப்பிடம் இனி முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே. 1000 ச.மீட்டர் என்று இருந்ததை  500 ச.மீட்டராகக் குறைத்ததன் மூலம் சாதாரண மக்களுக்கும் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இனி இல்லை ரியல் எஸ்டேட் ஏமாற்று!

இந்த மசோதா சட்டமாகிவிட்டால், வீடு விற்பவர் வீடு வாங்குபவருடன் முறைப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளா மல், வீட்டின் மதிப்பீட்டில் 10 சதவிகித பணத்துக்கு மேல் முன்பணமாகப் பெறமுடியாது. மேலும், ஏதோ ஒரு காரணத்தினால் கட்டடம் கட்டும் வேலை தள்ளிப்போகும்பட்சத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடு வாங்குபவர்களுக்கு  வட்டி தரவேண்டும். ஒரு திட்டத்துக்காக திரட்டப்பட்ட நிதியில் 50 சதவிகிதத்துக்கு மேல் வேறு ஒரு திட்டத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது என இந்த மசோதாவில் இருக்கும் பல நல்ல அம்சங்கள் வீடு வாங்குபவர்களின் நலனைக் காக்கிற வகையில் உள்ளது.

ஊழல் செய்து சம்பாதிக்கும் கறுப்புப் பணத்தின் பலத்தினாலேயே வீடுகள் விற்பனை குறைந்தும், விலை குறையாமல் உள்ளது. ரியல் எஸ்டேட் துறையை நெறிப்படுத்துவதன் மூலமே ஊழல் பணம் இந்தத் துறையில் புழங்குவது குறையும். நல்ல நோக்கத்தில் இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டாலும், நிதிப் பற்றாக்குறையினால் அல்லல்படும் இந்தத் துறைக்கு மேலும் சில சிக்கல்களை ஏற்படுத்தவே செய்யும். இதனால் வீடுகளின் விலை மேலும் குறையும்.

இந்த மசோதாவினால் ஒருசிலருக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், அப்பாவி எளிய மக்களின் நலன் காக்க உதவும் என்பதால், அதற்கு நம் முழு ஆதரவினைத் தரலாம். இந்த மசோதாவினை அனைத்துக் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து, சட்டமாக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

- ஆசிரியர்.