கடந்த மூன்று வாரங்களாக நடந்துவந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த மாற்றமும் கொண்டு வரப்படாமல் பெரும் குழப்பத்திலேயே முடிந்திருக்கிறது. இதனால் ஜிஎஸ்டி என்று சொல்லப்படுகிற குட்ஸ் அண்ட் சர்வீசஸ் டாக்ஸ் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கியமான மசோதாக்களையும் தாக்கல் செய்ய முடியாமல், அடுத்தக் கூட்டத் தொடருக்கு தள்ளிவிடப்பட்டு இருக்கிறது.

இன்றைக்கு வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது ஜிஎஸ்டி டாக்ஸ் சட்டம். இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால், தற்போது வழக்கத்தில் இருக்கும் பல்வேறு வரிகள் காலாவதியாகிவிடும். இதனால் நாடு முழுக்க ஒரேமாதிரியான வரி விதிப்பு முறை உருவாகி, பொருட்களின் விலை குறைந்து, அவற்றை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

கடந்த டிசம்பர் மாதத்திலேயே இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. தற்போது நடந்து முடிந்த கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதா சட்டமாகி இருந்தால், அடுத்த நிதி ஆண்டின் தொடக்கம் முதல் அதை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்க முடியும். இனி சிறப்புக் கூட்டம் நடத்தி இந்த மசோதாவை சட்ட மாக்கினால்தான் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.

ஜிஎஸ்டி, நிலம் கையகப்படுத்துதல் போன்ற முக்கியமான மசோதாக்களை சட்டமாக்கும் அரசியல் உறுதி ஆளும்கட்சிக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு, ஆதரவு தரும் எண்ணமும் எதிர்கட்சிகளுக்கும் இல்லை. நம் நாடாளுமன்றம் இப்படியே தொடர்ந்து நடக்கும்பட்சத்தில், நாட்டின் எதிர்கால வளர்ச்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கத் தொடங்கிவிடுவார்கள். இப்போதே நம் நாடாளுமன்றம் செயல்படும் விதத்தைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முகம் சுளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால், அவர்கள் நம் நாட்டில் ஏற்கெனவே செய்துள்ள முதலீட்டை திரும்ப எடுக்க முற்படுவதுடன், புதிதாக எந்த முதலீட்டையும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

இன்றைக்கு நம் தேவை, நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் மாற்றங்களே தவிர, அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் அல்ல. நாடாளுமன்றத்தில் நடப்பதை மக்கள் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆளும் கட்சியும் சரி, எதிர்கட்சிகளும் சரி, தங்கள் பொறுப்பை அறிந்து நடந்துகொள்ளவில்லை என்றால், அடுத்த தேர்தலில் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டிவிடுவார்கள்!

- ஆசிரியர்.