பதினோரு நிறுவனங்களுக்கு பேமென்ட் பேங்கைத் தொடங்குவதற்கான அனுமதியைக் கொள்கை அளவில் அளித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. ‘இந்த பேமென்ட் வங்கிகள் மூலம் சமூகத்தின் சாதாரண மக்களும் எளிமையாக பணப் பரிமாற்றம் செய்யும் நிலை உருவாகும்’ என்று சொல்லி இருக்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன்.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை நாம் வரவேற்கத்தான் வேண்டும். நம் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் சாதாரண மனிதனுக்கு பரிபூரணமான வங்கிச் சேவை கிடைத்தபாடில்லை. நகர்ப்புறங்களில் பணம் அதிகம் புழங்கும் பகுதிகளிலேயே வங்கிகள் கிளைகளைத் திறக்க ஆர்வம் காட்டி வருகிறதே தவிர, சாதாரண மக்கள் தங்கள் வாசல்படிகளை மிதிப்பதை பல வங்கிகள் விரும்புவதில்லை.

கிராமப்புறங்களில் கிளைகளைத் தொடங்கும் வங்கிகள் மிகக் குறைவு. எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்து மக்கள், வங்கியின் சேவையை பயன்படுத்துவது இன்றும் நடைமுறைச் சாத்தியமில்லை. இந்த நிலையில், இனி பேமென்ட் வங்கிகள் மூலம் எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கும் என்று நம்பலாம்.

எனினும், இந்த பேமென்ட் வங்கிகள் தொடர்பாக சில கேள்விகள் எழவே செய்கின்றன. இந்த பேமென்ட் வங்கிகள் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் திரட்ட லாம். இந்த வங்கிகளால் எதிர்பார்த்த அளவில் டெபாசிட்டைத் திரட்ட முடியவில்லை எனில், வட்டியை உயர்த்தவும் செய்யலாம். இதனால் எல்லா வங்கிகளும் டெபாசிட்டு களுக்கான வட்டியை உயர்த்தும் அபாயம் ஏற்படும். இதன் தொடர்ச்சியாக, வங்கிகள் தரும் கடனுக்கான வட்டியும் உயரலாம்.

தவிர, இந்த பேமென்ட் வங்கிகள், குறைந்த நபர்களைக் கொண்டு தொழில்நுட்பத்தின் உதவியால் அதிக மக்களைச் சென்றடைய முயற்சிக்கிறது. ஆனால், சமூகத்தின் எளிய மக்கள் அனைவருமே தொழில்நுட்பத்திலிருந்து தொலை தூரத்தில் இருக்கும்போது, புதிதாக வரப்போகும் பேமென்ட் வங்கிகளால் என்ன நன்மை கிடைத்துவிடும்?

இப்படி சில கேள்விகள் இருந்தாலும், இன்னும் 18 மாதங்களுக்கு பிறகுதான் இந்த வங்கிகள் செயல்படத் தொடங்கும். இடைப்பட்ட காலத்தில் இந்த வங்கிகளுக்கான விதிமுறைகளை ஆர்பிஐ இன்னும் சரியாக வரையறுத்தால், ஏழை எளியவர்களுக்கும் வங்கிச் சேவை என்கிற நோக்கம் நிச்சயம் நிறைவேறும்!

- ஆசிரியர்.