உலக முதலீட்டாளர் மாநாடு மிகப் பெரிய வெற்றி கண்டிருப்பதாக பெருமைப்பட்டுக்

கொண்டிருக்கிறது தமிழக அரசாங்கம். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.2,42,160 கோடி முதலீடு... உற்பத்தித் துறையில் மட்டும் ரூ.1,04,286 கோடி முதலீடு, எரிசக்தி துறையில் ரூ.1,07,136 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அரசாங்கம் சொல்வதைக் கேட்டு, அப்பாவித் தமிழன் அதிர்ந்து போயிருக்கிறான்.

ஆனால், இந்த அறிவிப்புகள் எல்லாம் தமிழகத்தில் உண்மையான தொழில் வளர்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணத்தில் விடுக்கப்பட்டதா அல்லது சட்டமன்ற தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் நாடகமா என்கிற கேள்வி, விஷயம் தெரிந்த முதலீட்டாளரின் மனதில் எழாமல் இல்லை.

தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் நிறுவனங்கள் அனுமதி கேட்டால், 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர். நல்ல அறிவிப்புதான். இந்த அறிவிப்பை ஆட்சியில் அமர்ந்து நான்கரை ஆண்டுகளுக்குப்பிறகா வெளியிடுவது? ஆட்சியின் தொடக்கத்தி லேயே இதை செய்திருந்தால், இன்று எத்தனையோ நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி, உற்பத்தியின் உச்சத்தையே எட்டியிருக்குமே!

தமிழகத்தில் தொழில் தொடங்க 42,000 ஏக்கர் நிலமும் தயார் நிலையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த அறிவிப்பு சில ஆண்டு களுக்கு முன்பே வெளியிட்டிருந்தால், பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி, நம் மாநிலத்தின் ஜி.டி.பி. கணிசமாக வளர்ந்திருக்குமே!

2011-ஆம் ஆண்டுக்குப்பிறகு மின் பற்றாக்குறை அறவே ஒழிந்து, தமிழகம் மின்மிகு மாநிலமாக மாறியிருப்பதாக முதல்வர் சொல்வது எந்த அளவு உண்மை என்பது தொழில் துறை வட்டாரத்தை சேர்ந்த அனைவருக்கும் தெரியுமே!

இப்படி பல சந்தேகங்கள் எழவே செய்கிறது. இனிவரும் காலத்திலாவது இது மாதிரியான சந்தேகங்களுக்கு தமிழக அரசாங்கம் இடம் தராமல் உண்மையான தொழில் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். புரிந்துணர்வு செய்துகொண்ட 98 நிறுவனங்களில் 75 சதவிகித நிறுவனங்களையாவது தமிழகத்தில் தொழில் தொடங்க செய்ய வேண்டும். 2.40 லட்சம் கோடி ரூபாயில் 50 சதவிகிதத்தையாவது அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும்.

அப்படி இல்லாமல் இது வெறும் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகமாக இருந்தால், மக்கள் தங்களின் வாக்குரிமை மூலம் பாடம் புகட்டுவார்கள்!

- ஆசிரியர்.