இப்போதைக்கு வட்டி உயர்வு இல்லை என அமெரிக்கா அறிவித்துவிட்ட நிலையில், ஆர்பிஐ கவர்னர் வட்டி விகிதத்தைக் குறைப்பாரா என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசிய ஆர்பிஐ கவர்னர், ‘‘நம் நாடு வேகமான வளர்ச்சி காண்பது சாத்தியம்தான். ஆனால், அதற்கு பணவீக்கம் என்கிற மிகப் பெரிய விலையை தந்தாக வேண்டும்’’ என்று கூறி்யிருப்பது வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதையே சுட்டிக் காட்டுவதுபோல் தெரிகிறது.

கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு, மானியங்கள் போன்ற சலுகைகளை தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்காமல், வளர்ச்சிக்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருப்பதும் சரியான கருத்தே. குறைந்த வட்டியை மட்டுமே எதிர்பார்க்கும் தொழில் நிறுவனங்கள், பிசினஸை வளர்க்குமா என்பது சந்தேகமே.

அளவுக்கு மீறி அரசாங்கம் செய்துதரும் வசதிகளால், தொழில் துறை நீண்ட நாளைக்கு நிலைத்து நிற்க முடியாது என்பதற்கு சீனா ஒரு சிறந்த உதாரணம்.

சில நாட்களுக்குமுன் பிரதமர் மோடியை சந்தித்த இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்கள், கடன்களுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இதற்குப் பதிலாக, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.

பணவீக்கம், கமாடிட்டிகளின் விலை, நிதிப் பற்றாக்குறை என எல்லாமே குறைந்துவிட்டதால், ஆர்பிஐ வட்டியை குறைக்கலாமே என எண்ணும் அரசாங்கம், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை செய்யாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

மத்திய அரசும் சரி, தொழில் துறை நிறுவனங்களும் சரி, வளர்ச்சிக்கான தடைகளை உடைத்தெறியும் வழிகளை தாங்களே கண்டுபிடிக்க வேண்டும். ஏற்றுமதியை மட்டுமே நம்பாமல், உள்நாட்டில் விற்பனையைப் பெருக்கும் வழிகளை செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதன் மூலம் உற்பத்திச் செலவுகளைக் குறைக்க வேண்டும். இப்போதைய தேவை இதுவே தவிர, குறைந்த வட்டியில் கடன் மட்டுமே அல்ல என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளட்டும்!

- ஆசிரியர்.