Published:Updated:

அரசும், வங்கிகளும் என்ன செய்யப் போகின்றன?

அரசும், வங்கிகளும் என்ன செய்யப் போகின்றன?

அரசும், வங்கிகளும் என்ன செய்யப் போகின்றன?

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதமாவது குறைக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனோ 0.50% வரை குறைத்து எல்லோரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

வட்டி விகிதத்தைக் குறைத்த கையோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இனி அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வட்டிக் குறைப்பினால் ஏற்படும் பலனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது வங்கிகளின் வேலை என்றும் சொல்லி இருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான நடவடிக்கைகள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. ஊழலில் சிக்கிக் கிடந்த காங்கிரஸ் ஆட்சியால் பொருளாதார வளர்ச்சியைத் தரமுடியவில்லை என்பதால்தான், மோடியிடம் ஆட்சியைத் தந்தார்கள் மக்கள். தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என்றே நம்பினார்கள்.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு நிஜமாகவில்லை. முக்கியமான பல மசோதாக்களை சட்டமாக்க முடியாமல் தவிக்கிறது ஆளும் கட்சி. அதிலிருந்து தப்பிக்க, எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டியதுடன், வட்டியைக் குறைக்க  ஆர்பிஐயை நெருக்கியது. 

அரசும், வங்கிகளும் என்ன செய்யப் போகின்றன?

இப்போது வட்டி விகிதத்தை நன்றாகவே குறைத்துவிட்டார் ஆர்பிஐ கவர்னர். இனி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?  தொழில் சூழலை உயர்த்தும் நடவடிக்கைகளை முதலில் எடுப்பது முக்கியம் என்று அவர் சொன்னதை அரசாங்கத்தினர் கவனிப்பார்களா?

தவிர, பணவீக்கமானது இன்னும்கூட கவலைக்குரிய நிலையிலேயே இருக்கிறது.  கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக மழை பெய்திருக்கும் இந்த ஆண்டில், விலைவாசி மீண்டும் உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்க நிறைய வாய்ப்புண்டு. இது தெரிந்தும் வட்டி விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார் ஆர்பிஐ கவர்னர். ஆனால், அதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியாதபடிக்கு தடுத்து வருகின்றன வங்கிகள்.

ஆர்பிஐ கவர்னரின் இந்த இரு கோரிக்கைகளை இனியாவது முழுமனதுடன் ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால், நாட்டின் வளர்ச்சி பெருகுவதுடன், மக்களும் நன்மை அடைவார்கள். அரசும் வங்கிகளும் அதைச் செய்யுமா?              

 - ஆசிரியர்.