சில நாட்கள் பெய்த பெருமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு எவ்வளவு என்பது பற்றி இப்போது கணக்கெடுக்கத் தொடங்கி இருக்கிறது தமிழக அரசாங்கம். பாதிப்பை மட்டும் அறிந்துகொண்டால் போதுமா, பாதிப்புக்கான மூலகாரணத்தை அறிந்துகொள்ள என்ன செய்யப்போகிறது?

இப்படியொரு பெருவெள்ளம் ஏற்பட முதல் காரணம், நமது மாநில அரசாங்கம்தான். கடந்த சில பத்தாண்டுகளில் நகர்ப்புறமயமாக்கலை ஊக்கப்படுத்திய நம் மாநில அரசாங்கங்கள், அதை திட்டமிட்டு நிறைவேற்றவில்லை. நகரங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படும்போது கண்ணை மூடிக்கொண்டு அனுமதி அளித்தன. இதனால் அரசியல்வாதிகள் தங்கள் உபதொழிலாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களை தொடங்கி, கிடைத்த இடங்களில் எல்லாம் நிலங்களை கூறுபோட்டு விற்றனர். மழை நீர்கூட செல்லவிடாமல் கட்டடங்களைக் கட்டியதால், இன்று நிலம் முழுக்க மழை நீராக இருக்கிறது.

நகர்ப்புறங்களுக்கு வெளியே அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் சில நாள் மழைக்கே தாங்கவில்லை. ஏரிகளும், குளங்களும் கடந்த பல ஆண்டுகளாகவே தூர் வாராததால், கிடைப்பதற்கரிய பொக்கிஷமான தண்ணீரை கடலில் கலக்கவிட்டு, வீணாக்குகிறோம். கடந்த காலங்களில் ஏரி குளங்களை ஆழப்படுத்தி, புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கி இருந்தால், அடுத்த சில ஆண்டுகளுக்குத் தேவையான தண்ணீரை நாம் தேக்கி வைத்திருக்கலாம்.

இந்த விஷயத்தில் அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்லி, தனிமனிதர்கள் தப்பித்துவிட முடியாது. வாழ்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும், ஏரிக்கு பக்கத்தில் வீடு கட்டுவது தவறு என்கிற எண்ணம் யாருக்கும் வரவில்லை. அப்படியே கட்டினாலும் மழை நீர் வடிவதற்கான வழிகளை அமைக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. மழை நீர் வடிகால்களைக்கூட அரசாங்கம் கட்டாயப்படுத்தினால்தான் செய்வோம் எனில், தனிமனிதர்கள் கஷ்டப்படும்போது அரசாங்கம் எப்படிக் காப்பாற்றும்?

இனியாவது நம் தவறுகளைத் திருத்திக்கொள்வோமா? ஓராண்டுக்குமுன் முகலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்தபின்னும், சதுப்பு நிலங்களில் பல மாடிக் கட்டடங்களைக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். அதுமாதிரி, வெள்ள நீர் வடிந்த சில நாட்களிலேயே அதை மறந்துவிட்டு, மீண்டும் ஏரியை நாம் அபகரித்தோம் எனில், இயற்கையானது இன்னும் கடுமையாக நமக்கு பாடம் புகட்டும்!

- ஆசிரியர்.