ரூ.500 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு, திரும்பத் தராத சில பல தொழில் நிறுவனங்களின் பெயரை எழுதி, அதை மூடப்பட்ட உறையில் இட்டு, உச்ச நீதிமன்றத்திடம் சமர்பித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி காப்பாற்ற முயற்சிப்பது ஏன், சாதாரண மக்கள் மீது ரிசர்வ் வங்கிக்கு அக்கறை இல்லையா என்றெல்லாம் பலரும் பல விதங்களில் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி செய்ததை முழுக்க தவறு என்று சொல்லிவிட முடியாது. தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் வாங்கும்போது அதை திரும்பத் தரக்கூடாது என்கிற நோக்கத்தில் வாங்குவதில்லை. உள்ளூர் மற்றும் சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம், குறிப்பிட்ட பிசினஸில் ஏற்படும் மாற்றங்கள் என பல காரணங்களினால் ஒரு நிறுவனம் வாங்கிய கடனை திரும்பத் தர முடியாமல் போகிறது. பொருளாதார சூழல் மாறும்போது, மீண்டும் இந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து, கடனை திரும்பக் கட்டிவிடும். அதற்குள் இந்த நிறுவனங்களின் பெயர் வெளியே தெரிந்தால், மனரீதியில் உற்சாகம் இழக்குமே என்பது ரிசர்வ் வங்கியின் கவலை. இதில் என்ன குற்றம்?

அதே சமயம், சாதாரண மனிதர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, வங்கியில் டெபாசிட் செய்த தொகை ஒரு ரூபாய்கூட குறையாமல் மீண்டும் அவர்களுக்கு திரும்பக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி இன்னும் கடுமையாக எடுத்துத்தான் ஆகவேண்டும். தொழில் நிறுவனங்கள் வங்கியில் இருந்து வாங்கும் கடனை தொழில் வளர்ச்சிக்குத்தான் செலவு செய்கிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கியதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை எனில், உடனே அந்த நிறுவனங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வங்கிகளுக்கு வழங்கப்பட வேண்டும். லாபத்துக்கு ஆசைப்பட்டு வங்கிகள் கூட்டு சேர்ந்து ஒரே நிறுவனத்துக்குக் கடனை அள்ளித் தருவதைத் தடுக்க வேண்டும். நியாயமான லாபத்துக்கு ஆசைப்படும் சேவை நிறுவனங்களாக வங்கிகள் இருக்கலாமே ஒழிய, லேவாதேவிக் கடைகள் போல செயல்படக் கூடாது.

தெளிவான விதிகள் இருந்தும் அதை சரியாகப் பின்பற்றாததால்தான் வங்கித் துறை இன்றைக்கு மிகப் பெரிய சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இந்தச் சிக்கலில் இருந்து அதை சேதாரம் இல்லாமல் எடுப்பதன் மூலமே எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான முக்கியப் பங்கினை வங்கிகளால் ஆற்ற முடியும். மத்திய அரசு இதை உணர்ந்து தத்தளிக்கும் வங்கித் துறையை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கியுடன் கைகோர்த்து உடனடியாக செயல்பட வேண்டும்.

- ஆசிரியர்