இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கியிருக்கிறது பனாமா பேப்பர்ஸ். உலகின் எந்தெந்த நாடுகளில் இருந்தெல்லாம் வரி சொர்க்க நாடுகளில் (Tax Haven Countries) கறுப்புப் பணத்தை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி சர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

இந்த ரிப்போர்ட்டின் நம்பகத்தன்மையை சந்தேகப்படுவதற்கில்லை. காரணம், இந்த ரிப்போர்ட்டில் தனது பெயர் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனது தந்தையார் இந்த ஃபண்டில் போட்டு வைத்திருந்த பணத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் கேமரூன். இந்த ரிப்போர்ட்டை உண்மை என்று சொல்ல இது போதுமே!

ஆனால் நடிகர் அமிதாப்பச்சனோ, தனக்கும் இந்த ரிப்போர்ட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நம் நாட்டைச் சேர்ந்த வேறு நபர்கள் மெளனம் காக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மீது நமது மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். காரணம், கடந்த காலங்களில் இதுபோன்ற ஒரு பட்டியலை பெற பல வெளிநாட்டு வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், உருப்படி யான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இப்போது பல முக்கியமான நபர்களின் பெயர்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கத்தை தொடர்புகொண்டு, கூடுதல் தகவல்களை நமது மத்திய அரசாங்கம் கேட்டுப் பெற வேண்டும். உள்ளபடியே வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் தூக்கத்தை இழந்து தவிக்கப்போகிறார்கள். அவர்கள் தாங்களாகவே முன்வந்து வரியை செலுத்தினால் மன்னிப்போம் என்று மத்திய அமைச்சர் சொல்வதெல்லாம் எந்த சாதகமான விளைவையும் ஏற்படுத்தாது. கடந்த பட்ஜெட்டில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்ட பின்பும் சில நூறு கோடிகளே அரசின் கணக்குக்கு வந்திருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிநாடுகளில் இருக்க, இந்த சில நூறு கோடிகள் எம்மாத்திரம்?

கறுப்புப் பணம் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்க பல நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறபோதிலும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களை தீர விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்கெனவே கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் மட்டுமல்ல, இப்போதும் அதே குற்றத்தை செய்து வருகிறவர்களுக்கும் குளிர்விட்டுப் போய்விடும். இந்த விஷயத்தில் மயிலே மயிலே இறகு போடு என்கிற அணுகுமுறையை மத்திய அரசு கைவிட்டுவிட்டு, இரும்புக்கரம் கொண்டு செயல்பட்டால்தான், தீர்வு கிடைக்கும்!

- ஆசிரியர்