இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதற்கான புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன. நமது ஜி.டி.பி.யானது கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 7.9 சதவிகித வளர்ச்சி கண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 7.3 சதவிகித வளர்ச்சி மட்டுமே நமது ஜி.டி.பி. கண்டது. தவிர, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டைவிட 39.9% அதிகம் லாபம் கண்டிருக்கின்றன. இது கடந்த 11 காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சி.

சர்வதேசப் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிய அளவில் ஆதரவாக இல்லாத நிலையில், நாம் இந்த வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம் என்பதை சொல்லியே ஆகவேண்டும். இதனை நன்கு புரிந்துகொண்டதன் விளைவாகவே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியப் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக உயரும் என்று சொல்லி இருக்கிறார். 2025-க்குள் இது நிஜமாகலாம்.

வேகமான இந்த பொருளாதார வளர்ச்சிக்கு மோடியின் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சி ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. ஊழல் என்கிற பேச்சே இதுவரை எழாமல் இருப்பதே இந்த ஆட்சியின் முக்கியமான சிறப்பம்சம். தவிர, ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட இலக்கு வைத்து முன்னேறுவதும் பாராட்டத்தக்கதே. வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும், அந்த வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உயர்த்தவும் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாகத்தான் நமது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கி இருக்கிறது.

இந்த சமயத்தில், நமது வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் மத்திய அரசாங்கம் ஈடுபடாமல் இருப்பது அவசியம். ஆர்.பி.ஐ. கவர்னர் பதவி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வளர மத்திய அரசாங்கம் அனுமதிக்கும்பட்சத்தில், இந்தியாவில் துறை சார்ந்த நிபுணர்களுக்கு (Professionals) மரியாதை இல்லை என்கிற தவறான செய்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பரவும். அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்துக்கு ஹெச்.டி.எஃப்.சி.யின் தீபக் பரேக், ஹீரோ ஹோண்டாவின் பவன் முஞ்சால், இன்ஃபோசிஸின் சேஷசாயி ஆகியோரின் பெயர்களைப் பரிசீலிக்க மத்திய மனிதவளத் துறை அமைச்சர் மறுத்திருப்பதும் நம் வளர்ச்சிக்கு பங்கம் வகிக்கும் இன்னொரு நிகழ்வாகும்.

கலாசாரம் மற்றும் நிர்வாகத் துறைகளில் அதிரடி நடவடிக்கைகளைத் தவிர்த்து, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான காரியங்களை மோடியின் தலைமையிலான இந்த அரசாங்கம் சிரமேற்கொண்டு செய்தால், நம் நாட்டின் பொருளாதாரமும் உயரும். அதன்மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறவும் முடியும்!

- ஆசிரியர்.