மீண்டுமொருமுறை தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நம் நாட்டின் வளர்ச்சி பற்றி அமெரிக்காவில் (கேப்பிட்டல் ஹில்லில்) அவர் பேசிய பேச்சு, அவருக்கு பல பாராட்டுகளை வாங்கித் தந்திருக்கிறது. பிரதமரின் இந்தப் பேச்சு, இதுவரை இருந்த இந்தியப் பிரதமர்களில் யாருமே பேசாதது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இதனால் இந்தியாவை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீடு குறிப்பிடத்தக்க அளவில் உயரும்.

ஆனால், நம் வளர்ச்சியைப் பற்றி நாமே அளவுக்கதிகமாக பெருமையாக பேசுகிறோமோ என்கிற சந்தேகமும் நமக்குள் எழாமல் இல்லை. காரணம், நமது ஜி.டி.பி. வளர்ச்சி உலக அளவில் சீனாவைவிட அதிகம் என்றபோதிலும், அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே உலக அளவில் நாம்தான் மிகச் சிறந்த வளர்ச்சி கண்டு வருகிறோம் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது என்பதற்கு பல புள்ளிவிவரங்களைச் சொல்கிறார்கள்.

இன்றைக்கு நமது மொத்த ஜி.டி.பி. யின் மதிப்பு 2.1 டிரில்லியன் டாலர். ஆனால், அமெரிக்க ஜி.டி.பி.யின் மதிப்பு 17.40 டிரில்லியன் டாலர்; சீன ஜி.டி.பி.யின் மதிப்பு 10.40 டிரில்லியன் டாலர் என்கிறபோது, நம்மைவிட குறைந்த வளர்ச்சி கண்டுவரும் அந்த இரு நாடுகளுடன் நம் நாட்டை ஒப்பிடவே முடியாது என்பது புரியும். அது மட்டுமல்ல, அமெரிக்காவின் தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் 54,500 டாலர். இதுவே சீனாவில் 7,500 டாலர். ஆனால், இந்தியா வில் வெறும் 1,582 டாலர் மட்டுமே. தவிர, மோடியின் இந்த இரண்டு வருட ஆட்சியில் வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.34 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.39 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும், நிறைவேறாத திட்டங்களின் மதிப்பு ரூ.9.60 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்க, நம்மை நாமே புகழ்ந்து பேசுவது வெளிநாட்டினருக்கு நம் மீது இருக்கும் சந்தேகத்தை அதிகரிக்கவே செய்யும். நம் பேச்சைக் கேட்டு, அவர்களும் நம் நாட்டில் தொழில் தொடங்க வந்துவிட்டால், இங்கிருக்கும் பிரச்னைகள் பலப்பல. போதிய அளவு மின்சாரம் இல்லை; நிலத்தை ஆர்ஜிதம் செய்வதில் பல பிரச்னை; திறமை வாய்ந்த வேலை ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் என பல பிரச்னைகள் இருக்க, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கே எப்படி லாபகரமாக தொழில் செய்ய முடியும்?

ஆக, வெளிநாடுகளில் நம் நாட்டைப் பற்றி புகழ் பாடும்முன், இங்கு அடிப்படை வசதிகளை பெருக்க முதலில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின் அவர் அயல்நாட்டினரை அழைத்தால், நம்பிக்கையுடன் வந்து முதலீடு செய்வார்கள்!

- ஆசிரியர்.