வாராக் கடன் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, தொழிலதிபர்களின் பெயரில் இருக்கும் சொத்துக்களைப் பிடுங்கி விற்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால், பலரும் தொழில் செய்யவே முன்வராமல் போய்விடுவார்கள் என்று அச்சம் தெரிவித் திருக்கின்றன வங்கிகள். வாராக் கடன் பிரச்னைக்கான தீர்வுகளைக் கண்டடைவதற்காக நிதி அமைச்சகம் அமைத்திருக்கும் கமிட்டி நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட சில வங்கி அதிகாரிகள் இப்படிக் கருத்து சொல்லி இருக்கின்றனர்.

வாங்கிய கடனைத் திரும்பக் கட்டாதபட்சத்தில் கடன் வாங்கியவர் கொடுத்த கேரண்டி பேரில் சொத்துக்களை விற்று வங்கிகள் தனக்கான பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. வாராக் கடனுக்காக கடும் நடவடிக்கை எடுத்தால், பலரும் தொழில் கடன் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக கடனைத் திரும்பக் கட்டாதவர்களைக் கருணையோடு அணுக முடியாது.

காரணம், வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2013 மார்ச்சில் வெறும் 3.4 சதவிகிதமாக இருந்த மொத்த வாராக் கடன் 2016 மார்ச்சில் 7.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இது 2017 மார்ச்சில் 8.5 சதவிகிதமாக உயர்ந்துவிடும் என்கிறார்கள். ஆக, எந்த மந்திரத்துக்கும் கட்டுப்படாத பேயைப் போல வளர்ந்து வரும் வாராக் கடனை ஒழிக்க இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமே ஒழிய, தயவு தாட்சண்யத்தோடு அணுகுவது வங்கியில் டெபாசிட் செய்த சாதாரண மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

தற்போது வாராக் கடனாக இருப்பதில் ‘குறிப்பிட்ட அளவு’ தவறான முறையில் பெறப்பட்டிருப்பதாக சொல்லி இருக்கிறார் மத்திய கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலான சசி காந்த் சர்மா. சில ‘முக்கிய’ நபர்களின் ஆதரவுடன்தான் அவர்கள் இந்தக் கடனை வாங்கி இருப்பது தெளிவா கிறது. தவிர, சிறிய அளவில் கடன் வாங்கியவர்களைவிட, அதிக அளவில் கடன் வாங்கியவர்களே வாராக் கடன் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்கள். 2015-16-ல் தரப்பட்ட மொத்தக் கடனில் 58% பெரிய அளவில் கடன் வாங்கியவர்களுக்கே தரப்பட்டிருக்கிறது. மொத்த வாராக் கடனில் 86.4% பேர் பெரிய அளவில் கடன் வாங்கியவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆக, வாங்கிய கடன் பணத்தை தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், வேறு வகையில் செலவழித்து, வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்த நினைத்தால், அதை நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. டெபாசிட் செய்த மக்களுக்குப் பணத்தை சரியாகத் திரும்பத் தரவேண்டுமெனில், கொடுத்த கடன் பணத்தைத் திரும்ப வாங்க வேண்டியது வங்கிகள் கடமை. அதற்காக என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

- ஆசிரியர்.