Published:Updated:

இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்வோமே!

இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்வோமே!
இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்வோமே!

ஹலோ வாசகர்களே..!

இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்வோமே!

ந்தியப் பொருளாதாரத்தில் புற்றுநோய் போல் புரையோடியிருக்கும் கறுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்க ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர உருவாகி இருக்கிறது. இந்த இரு தரப்புவாதங்களிலும் நியாயங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மத்திய அரசின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கைக்குப்பின் சாதாரண மக்கள் அனுபவிக்கும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்த பணத்தைத் திரும்ப எடுக்கவும், செல்லாமல் போன பணத்தை மாற்றுவதற்குமான விதிமுறைகளை தினமும் மாற்றினால், மக்களிடம் அச்சம் ஏற்பட்டு, நம்பிக்கைக் குறையத்தானே செய்யும்!

மொத்த இந்திய ரூபாயில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 86%. இது தெரிந்தபின்பும், 14 சதவிகித மதிப்பிலான 100, 50, 20 ரூபாய் நோட்டுகளையும், புதிதாக அச்சடித்த ரூ.2,000 நோட்டுகளையும் வைத்தே நிலைமையைச் சமாளித்துவிட முடியும் என மத்திய அரசு எப்படி நம்பியது? 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைப்பது எளிதல்ல என்பதை மத்திய அரசு ஏன் முன்கூட்டியே புரிந்து கொள்ளவில்லை? கிராமப்புற ஏழை மற்றும் விவசாயிகள் பெருமளவில் நம்பியிருக்கும் கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற அஞ்சல் நிலையங்களுக்கு இந்த விஷயத்தில் ஏன் இரண்டாம்பட்ச முக்கியத்துவம்கூட தரப்படவில்லை?

மக்கள் தரப்பில் இத்தனை நியாயமான கேள்விகளும் கோபங்களும் இருந்தாலும், இந்த

இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்வோமே!

நடவடிக்கையை எடுத்த மத்திய அரசின் நோக்கமானது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. கறுப்புப் பணம் என்பது ஒழிக்க முடியாத அரக்கன். அதனை இந்த அளவில் காயப்படுத்தி, கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேளையில் சில அசௌகரியங்கள் ஏற்படவே செய்யும். கணக்கில் வராத கறுப்புப் பணத்தை எப்படியாவது வெள்ளையாக்கிவிடத் துடிப்பதைத் தெரிந்துகொண்டபின், அதனைத் தடுக்க விதிமுறைகளை மாற்றுவதைத் தவிர, அரசுக்கு வேறு வழியில்லை. சின்ன ஓட்டையாக இருந்தாலும் அதனை தேடிப் பிடித்து அடைப்பதில் கருணை காட்டினால், அணையே உடைந்து, அத்தனையும் நாசமாகிவிடும்.

ஆனாலும், முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமல் இருந்தது ஏற்புடையதல்ல. மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க, மத்திய அரசாங்கம் இனியாவது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்; நான் தூய்மையான இந்தியாவைத் தருகிறேன்’ என்று அவகாசம் கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. எதிர்காலத்தில் நன்மைகள் பல விளையுமென்ற நம்பிக்கையில் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்வோமே!  ஆனால், பலவித இன்னல்களை அனுபவித்த நேர்மையான இந்தியர்கள் ஒவ்வொருவரின் பொருளாதார நிலையையும், இதற்குப் பிறகும் மேம்பட வழிவகுக்கவில்லை என்றால், இது பூமராங் என்றாகித் திருப்பித் தாக்கும் என்பதையும் மோடி மறந்துவிடக்கூடாது.

 -ஆசிரியர்
 

அடுத்த கட்டுரைக்கு