Published:Updated:

மாற வேண்டிய காலகட்டம் இது!

மாற வேண்டிய காலகட்டம் இது!
மாற வேண்டிய காலகட்டம் இது!

ஹலோ வாசகர்களே..!

மாற வேண்டிய காலகட்டம் இது!

த்திய அரசாங்கம் 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாமல் ஆக்கியதைத் தொடர்ந்து, முதலீடு பற்றிய நமது அணுகுமுறையை முழுவதுமாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். முன்பு போல, இனியும் நாம் மிச்சப்படுத்திய பணத்தை பீரோவிலும் பானையிலும் மறைத்து வைக்கக் கூடாது. கால் காசு என்றாலும் அதை பாதுகாப்பான முதலீடுகளில் போட்டு வைப்பதே நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

விலைவாசி உயர்வைப் பற்றிய புரிதலோடு, பாதுகாப்பான முறையில் அதிக வருமானம் தரும் முதலீடுகளை நாம் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். அரசினால் அங்கீகரிக்கப்படாத திட்டங்களை சட்டென இனம் கண்டுகொள்வதுடன், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றை  மட்டுமே முதலீடு என்று நினைக்காமல், எல்லா வகையான முதலீடுகளையும் நாடும் நல்லதொரு புரிதல் நம் எல்லோருக்கும் வர வேண்டும். சேமிப்புக்கும் காப்பீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை

மாற வேண்டிய காலகட்டம் இது!

ஒவ்வொருவரும் கட்டாயம் புரிந்துகொண்டாக வேண்டும்.

இதுநாள் வரை பல்வேறு இடங்களில் முடங்கிக் கிடந்த 6 லட்சம் கோடி ரூபாய் பணம், இப்போது வங்கிகளில் குவிந்துவிட்டது. இதனால் வட்டி விகிதம் குறையப் போகிறது. இந்த நிலையில், பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தருகிற நிதிச் சொத்துக்களில் நாம் முதலீடு  செய்வதன் மூலமே அதிக வருமானத்தை அடைய முடியுமே ஒழிய, பழையபடியே நாம் செய்தால், நமக்கு நஷ்டமே வந்து சேரும்.

மாற்றம் என்பதைத் தவிர அனைத்தும் மாறும் என்பதே நம் வாழ்வின் அடிப்படை. கால மாற்றத்துக்கேற்ப நம்மை நாமே மாற்றிக் கொண்டால் மட்டுமே இனி நமக்கு உயர்வு கிடைக்கும். இந்த மாற்றத்துக்கான வழிமுறைகளை இனிவரும் காலத்திலும் நிச்சயம் எடுத்துச் சொல்வோம் என்பதை 12-ஆம் ஆண்டைத் தொடங்கும் இந்தச் சமயத்தில் உறுதி கூறுகிறது நாணயம் விகடன்.       

-ஆசிரியர்

அடுத்த கட்டுரைக்கு