Published:Updated:

அரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்!

#GoDigital #GoCashLessஹலோ வாசகர்களே..!

அரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்!
அரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்!
அரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்!

டந்த வாரத்தில் ‘மான் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்களே, நம் நாட்டை ரொக்கம் இல்லாத சமூகமாக மாற்றுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து வங்கிகளும், ஆன்லைன் நிறுவனங்களும் இதுபற்றி நிறைய விளம்பரம் செய்து வருகின்றன.
 
பணமில்லா பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தி பயன் அடைவது இன்றைய காலத்தின் கட்டாயம். பணத்தைக் கையில் வைத்திருந்தால், அது திருடு போகவும், கிழிந்துபோகவும் வாய்ப்புண்டு. ஆனால், பணமில்லா பரிவர்த்தனையின் மூலம் ஒருவர்  எவ்வித அச்சமும் இன்றி, பணத்தை இருந்த இடத்தில் இருந்தபடியே அனுப்பலாம்; பெறலாம். ஊழலை ஒழிப்பதும், வரி ஏய்ப்பைத் தடுப்பதும் இதன் மூலம் சாத்தியம் என்பதால், அதை நாம் தாராளமாக வரவேற்கலாம்.

இந்த வசதியை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்த அரசுத் தரப்பு வலியுறுத்தும் அதேவேளையில்,

அரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்!

மத்திய அரசாங்கம் தடையில்லாத மின்சாரத்தையும்  இணைய வசதியையும் தரவேண்டும்.  இந்த இரண்டுமே நம் ஊரில் எப்போது வேண்டுமானாலும் வரும், போகும். இந்த நிலையில், எதை நம்பி பணமில்லா பரிவர்த்தனை செய்வது? முதலில் இந்த வசதிகளை அரசாங்கம் முழுமையாகத் தரவேண்டும்.

படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் நவீன வசதிகளைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யத் தயக்கம் காட்டுவது இயற்கையானதே. அவர் களுக்குரிய பயிற்சியை அளிப்பதோடு, எல்லோரும் பயன்படுத்தும் வகையில் அந்தத் தொழில்நுட்பத்தை எளிமைப் படுத்துவதுடன், மோசடிகள் எதுவும் நடக்க முடியாத அளவுக்கு அவை இருக்க வேண்டும். 

மக்களும் பணமில்லா பரிமாற்ற முறைகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் உள்ள தயக்கத்தைவிட, இவற்றைப் பயன்படுத்தினால் நம் கணக்குவழக்குகள் அனைத்தும் அரசாங்கத்துக்குத் தெரிந்து, வரி கட்ட வேண்டியிருக்குமே என்று பயப்படுகின்றனர். அரசுக்குக் கட்ட வேண்டிய வரியைக் கட்டி, தொழிலை வளர்த்தெடுப்பதை விட்டுவிட்டு, வரி கட்டாமல் இருக்க, தொழில் வளர்ச்சியைத் தவறவிடக் கூடாது.

கறுப்பு மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்க ஒரே வழி, பணமில்லா பரிவர்த்தனைகளை பயன்படுத்துவதே. இந்த விஷயத்தில் அரசும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் ஊழலற்ற இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்!                        

  -ஆசிரியர்