Published:Updated:

மக்கள் படும் கஷ்டம் தீருமா?

மக்கள் படும் கஷ்டம் தீருமா?
பிரீமியம் ஸ்டோரி
மக்கள் படும் கஷ்டம் தீருமா?

ஹலோ வாசகர்களே..!

மக்கள் படும் கஷ்டம் தீருமா?

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
மக்கள் படும் கஷ்டம் தீருமா?
பிரீமியம் ஸ்டோரி
மக்கள் படும் கஷ்டம் தீருமா?

டந்த வாரம் வீசிய ‘வர்தா’ புயல், சென்னை மக்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்தது. மின்சாரமும் இணையமும் இல்லாமல் போகும்போது கையில் கொஞ்சம் காசிருந்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்பதே அந்தப் பாடம். நிறைய பணத்தை (வங்கியில்) வைத்திருந்தும் கஷ்ட காலத்தில் அரசாங்கம் அதை நமக்கு தரவில்லை எனில், அரசின் நோக்கம்தான் என்ன என்கிற கேள்வியை மக்கள் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

மக்கள் படும் கஷ்டம் தீருமா?

இது மட்டுமா, பண மதிப்பு நீக்கம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் இன்னும் பல கேள்விகளை எழுப்பவே செய்கின்றன. முதலில் கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என்றார் பிரதமர் மோடி. ஆனால், இப்போது கறுப்புப் பணம் ஒழிப்பு என்பதை விட்டுவிட்டு, பணமில்லா பரிவர்த்தனை செய்யுங்கள் என்று சொல்கிறது  மத்திய அரசு. பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்களை கொண்டு செல்வதே மத்திய அரசின் நோக்கம் எனில், மக்களை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்த வேண்டும்?

பணமில்லா பரிவர்த்தனையை முன்வைக்கும் அரசாங்கம் அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்திருக்கிறதா? மின்சாரமும் இணையவசதியும் எப்போதும் இருந்தால்தானே பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாகும். அது பற்றி மத்திய அரசாங்கம் வாயைத் திறக்கவில்லையே! தவிர,  தனியார் வேலட்டுகள் தரும் வசதி அரசிடமே இல்லையே. அப்படி இருந்தாலும் அது மக்களிடம் பிரபலமாகாதது ஏன்?

சரி, கறுப்புப் பணத்தை ஒழிப்பதே அரசின் நோக்கம் எனில், இதுவரை எவ்வளவு கறுப்புப் பணத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்? மொத்தமுள்ள ரூ.500/1000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பான ரூ.15.44 லட்சம் கோடியில் இதுவரை ரூ.12.44 லட்சம் கோடி டெபாசிட் ஆகிவிட்டதாகச் சொல்கிறது ஆர்பிஐ. டிசம்பர் 30-க்குள் இன்னும் ரூ.1 லட்சம் கோடி டெபாசிட் ஆகும் எனில், ரூ.2 லட்சம் கோடி கறுப்புப் பணம்தான் நம் நாட்டில் இருக்கிறதா? இந்த ரூ.2 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை ஒழிக்க, ரூ.1.25 லட்சம் கோடி இழப்பு அவசியமா?

மக்கள் படும் கஷ்டம் தீருமா?



எல்லாவற்றுக்கும் மேலே, இன்றைக்கு உச்சநிலையில் இருக்கும் பணத் தட்டுப்பாடு என்று தீரும்? இரண்டு, மூன்று வாரங்களில் நிலைமை ஓரளவு சரியாகிவிடும் என்கிறார் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ். நிதி அமைச்சரோ, ஜிஎஸ்டி பற்றி மட்டுமே பேசுகிறார். அப்படியானால் மக்கள் படும் கஷ்டம் என்றுதான் தீரும்?

இப்போதுள்ள நிலைமையை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்தடுத்து நடக்கவிருக்கும் வட மாநில சட்டமன்றத் தேர்தல்களிலேயே மோடி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் திரும்பிவிடுவார்கள் என்பது சந்தேகமே இல்லை.

- ஆசிரியர்