Published:Updated:

போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!

போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!
பிரீமியம் ஸ்டோரி
போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!

போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!

போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!

போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!

Published:Updated:
போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!
பிரீமியம் ஸ்டோரி
போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!
போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!

ஹலோ வாசகர்களே..!

லகில் வேறு எந்த மத்திய வங்கிக்கும் இல்லாத நற்பெயர் நமது இந்திய ரிசர்வ் வங்கிக்கு உண்டு. மற்ற நாட்டு மத்திய வங்கிகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டிய கட்டாயம் உண்டு. நம் ரிசர்வ் வங்கிக்கு அப்படி எந்தக் கட்டாயமும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நமது ரிசர்வ் வங்கி போல அமெரிக்க ஃபெடரல் வங்கி செயல்பட்டிருந்தால், 2008-ல் அமெரிக்காவில் ‘சப் ப்ரைம்’ நெருக்கடியை வராமலே தடுத்திருக்கலாம் என்றுகூட பலர் புகழ்வது உண்டு. அப்படிப்பட்ட நமது ரிசர்வ் வங்கி, இன்றைக்குக் குழம்பிப் போயிருக்கிறது. 

இனி செல்லாது என அறிவித்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் என பிரதமரே அறிவித்த பின், டிசம்பர் 21-ம் தேதிக்குப் பிறகு 5,000 ரூபாய்க்கு மேல் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும் என திடீர் உத்தரவு போட்டது ஏன்? இதற்கு எதிர்ப்பு கிளம்பிய மறுநாளே, இந்த உத்தரவை ஆர்பிஐ மாற்றி அமைத்தது, மறுக்க முடியாத பின்வாங்கல். 

இது மட்டுமா? நவம்பர் 28-ம் தேதி அன்று ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் ரூ.2.16 லட்சம் கோடி மதிப்புக்கு நோட்டுகள் வெளியிட்டு உள்ளதாக சொன்னது. ஆனால், நவம்பர் 29-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பதில் சொன்ன மத்திய துணை நிதி அமைச்சர் ரூ.3.29 லட்சம் கோடி வெளியிடப்பட்டதாகச் சொன்னார். ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வித்தியாசம் எப்படி வந்தது? பணத்தை அச்சடித்து வெளியிடும் வேலையை ஆர்பிஐ மட்டுமே செய்து வருகிற போது, ஆர்பிஐக்கும் அரசுக்கும் இடையே ஏன் இந்தக் குளறுபடிகள்?

போதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பின் உருவாகியுள்ள நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் ஆர்பிஐ திணறக் காரணம், அதன் நிர்வாகத் திறமையின்மை அல்ல. அரசிடமிருந்து அவ்வப்போது மறைமுகமாக வரும் நெருக்குதல்களே காரணம். நல்ல நோக்கத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின்விளைவுகளைச் சமாளிக்க முடியாத மத்திய அரசாங்கம், சில வேலைகளை நேரடியாகச் செய்ய முடியாதபோது ஆர்பிஐ மூலமாக செய்ய முயற்சிக்கிறது. இதற்கு உடன்படும்போது, அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு  ஆர்பிஐ உள்ளாகிறது. 

தனக்கிருக்கும் அதிகாரத்தை விட்டுத்தராமல், தனக்கு சரியென்றுபட்டதைச் செய்தால் மட்டுமே, ஆர்பிஐ தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதையும், ஆர்பிஐ மீது நம் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையும் இனியாவது அது உணரட்டும். மத்திய அரசும் ஆர்பிஐயின் பெயருக்குக் களங்கம் வராமல் நடக்கட்டும்!           
 
- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism