Published:Updated:

வேலைவாய்ப்பு குறைவது நாட்டுக்கு நல்லதல்ல!

வேலைவாய்ப்பு குறைவது நாட்டுக்கு நல்லதல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
வேலைவாய்ப்பு குறைவது நாட்டுக்கு நல்லதல்ல!

ஹலோ வாசகர்களே..!

வேலைவாய்ப்பு குறைவது நாட்டுக்கு நல்லதல்ல!

ண மதிப்பு நீக்கத்தினால் தொழில் வளர்ச்சி சுணக்கம் அடைந்திருக்கும் இந்த சமயத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே உருவாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருக்கிறது.

கடந்த 2015-ல் அமைப்பு சார்ந்த துறைகளில் வெறும் 1.35 லட்சம் வேலைகளை மத்திய அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. அந்த ஆண்டில் 1.20 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசாங்கம் திட்டம் தீட்டியது. திட்டமிட்டதில் நூறில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே நிறைவேறி இருப்பது உள்ளபடியே வருந்தத்தக்க விஷயம் என்பது மட்டுமல்ல, கேவலமான விஷயமும்கூட. மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014-ம் ஆண்டில்கூட 4.21 லட்சம் வேலைகள் புதிதாக உருவாக்கப்பட்டன.  

வேலைவாய்ப்பு குறைவது நாட்டுக்கு நல்லதல்ல!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


வேலை ஆட்கள் அதிகம் தேவைப்படுகிற ஜவுளி உற்பத்தி, நெசவுத் தொழில், தோல் தொழில், இரும்பு, ஆட்டோமொபைல், நகை உற்பத்தி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த நிலையை அடைந்திருக்கிறது. அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியும் குறைந்துள்ளது.

வேலைவாய்ப்புகள் குறையக் காரணம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி என பல திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தாலும், அந்தத் திட்டங்கள்  வேகமாகச் செயல்படத் தொடங்காமல் போனதே.

உலக வங்கி அறிவிக்கும் ‘தொழில் செய்வதற்கான சூழல்’ குறித்த பட்டியலில் நம் நாடு கணிசமான அளவில்கூட முன்னேற்றம் காணாமல் இருப்பதே, கடந்த சில ஆண்டுகளில் நாம் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி அடையவில்லை என்பதைக்  காட்டுகிறது. 

இந்த நிலை தொடர்வது நம் நாட்டுக்கு நல்லதல்ல. நம் நாட்டில் ஓர் ஆண்டில் 15 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்தால்தான் தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். இவர்களுக்கு வேலை கிடைக்காமல் போனால், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கி, அரசுக்கு எதிராகச் செயல்படக்கூடியவர்களாக  மாறிவிடும் அபாயமும் உண்டு. இதனால் தனிமனிதர்களுக்கும், நாட்டுக்கும் இழப்பே.

இனியாவது புதிய வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்குவதில் மத்திய அரசாங்கம் முழு கவனத்துடன் செயல்படட்டும்!      
                  
- ஆசிரியர்