Published:Updated:

இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!

இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!

இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!

இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!

இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!

Published:Updated:
இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!
இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!

ஹலோ வாசகர்களே..!

மிழகத்தில் பல ஆண்டு காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்துவந்த மின் தட்டுப்பாடு பிரச்னைக்கு, இனி நல்லதொரு தீர்வு ஏற்படும் வழி உருவாகி இருக்கிறது. மத்திய அரசின் ‘உதய்’ (UDAY) திட்டத்தில் தமிழகமும் இணைந்துகொள்ள ஒப்புதல் தெரிவித்து, இப்போது கையெழுத்திட்டுள்ளது.

மத்திய அரசாங்கம் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரிலேயே ‘உதய்’ திட்டத்தைக் கொண்டுவந்த போதிலும், தமிழகம் அந்தத் திட்டத்தில் சேருவதற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ‘உதய்’ திட்டத்தில் இணைந்தால், இலவசமாக அளிக்கப்படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டியிருக்கும். தவிர, மின் கட்டணத்தையும் உயர்த்த வேண்டியிருக்கும் என்று தமிழக அரசாங்கம் நினைத்ததால்தான், இந்தத் திட்டத்தில் இணைவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுத்து வந்தார். இப்போது இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தகுந்ததே.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மொத்தக் கடன் சுமார் ரூ.81,000 கோடி. இதில் மின் பகிர்மானம் தொடர்பான கடன் மட்டுமே சுமார் ரூ.36,000 கோடிக்கு மேல். ‘உதய்’ திட்டத்தின்படி, மின் பகிர்மானம் தொடர்பான கடன்களில் 75 சதவிகிதத்தை மாநில மின் பகிர்மானக் கழகமே ஏற்றுக்கொண்டு, அதற்கான நிதியைத் திரட்ட பாண்டுகளை வெளியிட வழி பிறந்திருக்கிறது. தமிழக அரசின் கடனே ஏற்கெனவே ரூ.2.50 லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில், மின் பகிர்மான நிறுவனத்துக்கு மேலும் கடன் தரும் நிலையில் இல்லை. எனவே, ‘உதய்’ திட்டத்தில் சொல்லி இருக்கிறபடி, புதிதாக பாண்டுகளை வெளியிட்டு நிதி திரட்டுவதே சரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனியாவது தமிழகத்தில் வெளிச்சம் பரவட்டும்!

இனியாவது மின் விநியோகம்   தொடர்பான விஷயத்தில் தமிழக அரசாங்கம் கறாரான  நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இலவச மின்சாரமானது யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும். தகுதி உடையவர்களுக்கு மட்டுமே இனி இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும். மின் திருட்டு இல்லவே இல்லை என்று சொல்கிற அளவுக்கு தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட வேண்டும். முக்கியமாக, அரசியல் கட்சிகள் அனுமதி இன்றி மின்சாரத்தைப் பயன்படுத்துவதையும், அதற்குரிய கட்டணத்தைக் கட்ட மறுப்பதையும் ஒழித்துக்கட்ட வேண்டும். காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி மூலம் தயாராகும் மின்சாரத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
தமிழக மக்களுக்கும் தொழில் துறையினருக்கும் மிக அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது மின்சாரம். இந்த மின்சாரத்தை தங்குதடை இல்லாமல் எல்லோருக்கும் கிடைப்பதற்கான வழிவகைகளை தமிழக அரசாங்கம் செய்தால், மக்களின் நன்நம்பிக்கையை நிச்சயம் பெறமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism