Published:Updated:

நிதி அமைச்சரே, வேலைவாய்ப்பைப் பெருக்குங்கள்!

நிதி அமைச்சரே, வேலைவாய்ப்பைப் பெருக்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிதி அமைச்சரே, வேலைவாய்ப்பைப் பெருக்குங்கள்!

ஹலோ வாசகர்களே..!

நிதி அமைச்சரே, வேலைவாய்ப்பைப் பெருக்குங்கள்!

திர்வரும் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வரும் முதல் பட்ஜெட் இது என்பதால், மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

புதிய வேலை வாய்ப்புகளைப் பெரிய அளவில் உருவாக்குவார் என்பதால்தான், பிரதமர் நாற்காலியில் மோடியை உட்கார வைத்தனர் மக்கள். ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது அதிமுக்கியமான தேவையாக இருக்க, மோடி பிரதமர் ஆனபின்பு ஆண்டு தோறும் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்கூட உருவாக்கப்படவில்லை. எனவே, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தேவையான நிதியை ஒதுக்கி, அதற்கான திட்டங்களை இந்த பட்ஜெட் மூலம் மத்திய நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை எனில், இந்த ஆட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். 

நிதி அமைச்சரே, வேலைவாய்ப்பைப் பெருக்குங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz



தவிர, கடந்த பத்து மாதங்களில் இந்தியா முழுக்கவே போதுமான அளவு மழை பெய்யாததினால், வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். கடந்த ஆண்டினைப் போலவே, இந்த ஆண்டும் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்தால் மட்டுமே விவசாயிகள் தொடர்ந்து பயிர் தொழிலில் ஈடுபடுவார்கள்.

பண மதிப்பு  நீக்க நடவடிக்கையி னால் பல தொழில்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளன. இந்தத் தொழில்கள் மீண்டும் சிறப்பாகச் செயல்படத் தேவையான சலுகைகளை யும், கடன் வசதிகளையும் இந்த பட்ஜெட் மூலம் அறிவிப்பது அவசியம்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் ரொக்கமாகப் பணம் எடுத்தால், வரி விதிக்க மத்திய அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இதன் மூலம் கறுப்புப் பணம் உருவாவது தடுக்கப்படும்  என்றாலும், பணமில்லாப் பரிவர்த்த னைக்கான வசதிகளை அதிகப் படுத்தியாக வேண்டும்.

ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருப்பதால், பலரும் சொந்த வீடு வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில், அனைவரும் வாங்கும் விலையில் வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் வாழ்நாள் கனவை நிஜமாக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, எதிர்வரும் பட்ஜெட் மூலம் நிதி அமைச்சர் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்க்கைக்கும் அடிப்படையாக இருக்கும் இந்த எதிர்பார்ப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிறைவேற்றத் தவறினால், அதற்கான பலனை கூடிய விரைவிலேயே பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!

- ஆசிரியர்