Published:Updated:

அடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்!

அடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
அடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்!

ஹலோ வாசகர்களே..!

அடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
அடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
அடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்!
அடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்!

சாதாரண மக்கள் தொடங்கி, பொருளாதார நிபுணர்கள் வரை பலரும் ஆராய்ந்து பார்க்கும்  விஷயமாக மாறி இருக்கிறது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்.
குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றாலும், நீண்ட காலத்தில் வளர்ச்சியைத் தூண்டுகிற மாதிரி இருக்கிறது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. எல்லாத் தரப்பினருக்கும் அள்ளித் தரமுடியவில்லை என்றாலும், எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கிள்ளியாவது தந்திருக்கிறார் நிதி அமைச்சர். வரியைக்

அடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்!

குறைக்கவேண்டியவர்களுக்குக் குறைத்து, உயர்த்தவேண்டியவர்களுக்கு உயர்த்தி இருக்கிறார். எந்தத் துறைக்கு முன்னுரிமை தரவேண்டுமோ, அதற்குத் தந்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  

இந்த பட்ஜெட்டைத் தயாரிப்பதற்குமுன், முக்கியமான சில நிலைமைகளை நிதி அமைச்சர் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த நவம்பரில் எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால், நடப்பு நிதி ஆண்டின் மூன்று மற்றும் நான்காம் காலாண்டில்  நமது ஜிடிபி வளர்ச்சி 1 - 2% வரை  குறைந்திருக்கலாம் என்கிறார்கள் பலர்.  ஆனால், அப்படியொரு விஷயமே நடந்த மாதிரி அவர் காட்டிக் கொள்ளவில்லை. இந்த நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்கிறாரே ஒழிய, அது எப்படிச் சரியாகும் என்றும் சொல்லவில்லை. சரி செய்வதற்கான முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்த மாதிரித் தெரியவில்லை.

அதே போல, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலை உருவானபின், அவரது அதிரடி நடவடிக்கையினால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதகங்களை முன்கூட்டியே கணித்து, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்த பட்ஜெட்டில் எடுக்கவில்லை. ஹெச்1பி விசா தொடங்கி அமெரிக்க அதிபர் எடுக்கப் போகும் பல்வேறு நடவடிக்கை களினால் இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த விளைவுகள் ஏற்படப் போவதை இனி நிதி அமைச்சர் எப்படித்தான் தடுப்பாரோ?

கடந்த நான்கு ஆண்டுகளில் நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே பாஸ் மார்க்குக்கு கொஞ்சம் அதிகமான மதிப்பெண் பெறக்கூடிய பட்ஜெட் இதுதான். அடுத்த ஆண்டிலாவது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க உதவும் பட்ஜெட்டினை அவர் தருவார் என்று எதிர்பார்ப்போம். அப்படியொரு பட்ஜெட்டினை அவர் தரவில்லை எனில், இந்த அரசாங்கத்துக்கு இன்னொரு வாய்ப்பினை மக்கள் தர விரும்ப மாட்டார்கள் என்பது நிச்சயம்!

  - ஆசிரியர்