கடந்த வாரத்தில் இரண்டு முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கின்றன நமது இரு நீதிமன்றங்கள். இந்த இரண்டு உத்தரவுகளும் உற்றுக் கவனிக்கப்பட வேண்டியவை. மேற்கு வங்க மாநிலத்தில் அப்பாவி மக்களிடம் இருந்து சஹாரா நிறுவனம் கொள்ளையடித்த ரூ.39,000 கோடிக்குப் பதிலாக, புனேவுக்கு அருகில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள ரியல் எஸ்டேட் சொத்தை ஏலத்துக்கு விட்டுப் பணமாக்கிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.6,200 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருந்தார் தொழிலதிபரான விஜய் மல்லையா. இந்தக் கடனை திரும்பச் செலுத்தாமலேயே அவர் லண்டனுக்குத் தப்பியோடிவிட்டார். அவரிடமிருந்து கடனைத் திரும்ப வசூலிக்க முடியாத நிலையில், அவருக்குச் சொந்தமான யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தைக் கலைக்கும்படி கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் இந்த உத்தரவுகள் மிகச் சரியானவை என்பதால், மனமுவந்து வரவேற்கலாம். ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை ஏமாற்றி, பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கும் கொடும் செயலை இன்றைக்கும் பல நிறுவனங்கள் செய்துவருகின்றன. இந்த நிறுவனங்களைக் கண்காணிக்க அரசுத் தரப்பில் போதிய அளவு ஆட்கள் இல்லை. தவறு செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் உள்ளன. இதனால் மோசடித் திட்டங்களை நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை; அவர்களின் சொத்துகளை விற்று, பணமாக்கவும் முடியவில்லை.

சஹாரா மற்றும் புரூவரீஸுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது நீதிமன்றங்கள் இப்போது எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளினால் மோசடிக் காரர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வழிபிறந்திருக்கிறது. நீதிமன்றங்களின் இந்த உத்தரவினால், மோசடித் திட்டங்களை நடத்துபவர்களிடம் பயம் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்பாவி மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தேவையான சட்ட விதிகள், இனியாவது உருவாக்கப்படவேண்டும். எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம்தான் பலரையும் இது போன்ற தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது. தவறு செய்பவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால், இது போன்ற தவறுகள் நடக்காது. இப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்க நீதிமன்றங்களின் இந்த உத்தரவுகள் நிச்சயம் பயன்படும்!

- ஆசிரியர்