கடந்த பத்து ஆண்டுகளில் பங்குச் சந்தை முதலீடு, மிகக் குறைந்த வருமானத்தையே தந்திருப்பதைப் பார்த்து பலரும் குழம்பிப் போயிருக்கிறார்கள். 2007 மார்ச் முதல் 2017 பிப்ரவரி வரையிலான காலத்தில், பங்குச் சந்தை முதலீடு (நிஃப்டி) வெறும் 9% வருமானமே தந்திருக்கிறது. இதே கணக்கை 2008 ஜனவரி முதல் இன்று வரை எடுத்துப் பார்த்தால், இந்த வருமானம் வெறும் 4 சதவிகிதத்துக்குள் முடங்கிவிடுகிறது. இதே காலகட்டத்தில் தங்கம்கூட 11 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தந்திருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்து, ‘இதற்காகத்தான் பங்குச் சந்தை முதலீடு கூடவே கூடாது’ என்கிறோம் என சிலர் பிதற்றத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த வாதம் பத்தாம் பசலித்தனமானது என்பதைச் சொல்லவே தேவையில்லை. 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகள் பெரும் இறக்கம் கண்டன. ஆனாலும், அடுத்த சில ஆண்டுகளிலேயே பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றமடைந்தன.

அன்றிலிருந்து இன்று வரை, பங்குச் சந்தையானது ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும், மீண்டும் 50% இறக்கம் காணும் நிலை உருவாகவில்லை. மீண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படுமா என்கிற கேள்விக்கான பதில், இல்லையென்றே சொல்லலாம்.

நிஃப்டியானது கடந்த ஓர் ஆண்டில் 17 சதவிகிதமும், மூன்று ஆண்டுகளில் 36 சதவிகிதமும் வருமானம் தந்திருக்கிறது. இந்த வருமானம் நிச்சய மானது இல்லை என்றாலும், நீண்ட கால நோக்கில் சராசரியாகப் பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தருவது பங்குச் சந்தை முதலீடாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனினும், பங்குச் சந்தை முதலீடு ஒன்றையே நாம் மலைபோல நம்பி இருக்கத் தேவையில்லை. நமது முதலீடு களை எப்போதுமே ஒரே இடத்தில் வைத்திருக்காமல், அவரவர் வயதுக்கேற்ப வும், ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்பவும் கொஞ்சம் பங்குச் சந்தையில், கொஞ்சம் கடன் சார்ந்த ஃபண்டுகளில், கொஞ்சம் தங்கத்தில், கொஞ்சம் ரியல் எஸ்டேட்டில் எனப் பல்வேறு முதலீடுகளில் பிரித்து வைத்திருந்தால், பெரிய அளவில் நாம் லாபத்தைப் பார்க்காவிட்டாலும், நஷ்டம் அடைவதைத் தவிர்க்கலாம்.

எனவே, பங்குச் சந்தை முதலீடே வேண்டாம் என்று நினைக்காமல், குறிப்பிட்ட அளவு அதில் முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வேறு முதலீடுகளில் வைத்திருக்கலாம். ஒரே ஒரு முதலீட்டை நம்பி இருக்கிறவர்களைவிட, இரண்டு, மூன்று முதலீடுகளில் முதலீடு செய்கிறவர்களே அதிக லாபம் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து, நமக்கென ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, லாபம் பெறுவோம்!

- ஆசிரியர்