Published:Updated:

அதீத நம்பிக்கையும் செருக்கும் வேண்டாமே!

அதீத நம்பிக்கையும் செருக்கும் வேண்டாமே!
பிரீமியம் ஸ்டோரி
அதீத நம்பிக்கையும் செருக்கும் வேண்டாமே!

ஹலோ வாசகர்களே..!

அதீத நம்பிக்கையும் செருக்கும் வேண்டாமே!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
அதீத நம்பிக்கையும் செருக்கும் வேண்டாமே!
பிரீமியம் ஸ்டோரி
அதீத நம்பிக்கையும் செருக்கும் வேண்டாமே!
அதீத நம்பிக்கையும் செருக்கும் வேண்டாமே!

மீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பஞ்சாப் தவிர, நான்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கண்டதுடன், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ‘ஒரு மாதிரி’யாக சமாளித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

இந்த வெற்றியானது, அடுத்த ஆண்டில் குஜராத், கர்நாடகா உள்பட ஏழு மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைத் துணிவோடு சந்திப்பதற்கான தெம்பை பா.ஜ.க-வுக்கு அளித்திருக்கிறது. இந்த வெற்றியைக்கண்டு, அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது நாம்தான் என்கிற அதீத நம்பிக்கையையோ அல்லது இனி நம்மை வீழ்த்த யாருமில்லை என்கிற செருக்கோ பா.ஜ.க தலைமைக்கு வந்துவிடக் கூடாது.

எதிர்கட்சிகள் பலவாறாகப் பிரிந்ததன் விளைவாகவே பா.ஜ.க-வுக்கு இத்தனை பெரிய வெற்றி

அதீத நம்பிக்கையும் செருக்கும் வேண்டாமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிடைத்திருக்கிறது என்றாலும், இன்றைக்கு இருக்கும் அரசியல் கட்சிகளில் பொருளாதார வளர்ச்சியை முன்வைக்கும் ஒரே கட்சியாக பா.ஜ.க-வை மக்கள் பார்த்ததன் விளைவுதான் இந்த வெற்றி. அதனால்தான் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் எவ்வளவோ கஷ்டப்பட்டபின்பும், நீண்ட காலத்தில் அதனால் நன்மையே கிடைக்கும் என்று நினைத்து, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் மக்கள்.

இப்போது கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்களிப்பில் திளைத்து, பூரித்துப் பெருமிதம் அடைவதற்குப் பதிலாக, நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி அக்கறை காட்ட வேண்டும். முதலில், வேலைவாய்ப்பைப் பெருக்கத் தேவையான திட்டங்களை முழுவீச்சில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவதுடன், அதற்குத் தேவையான நிதியானது தங்குதடை இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும். பினாமி சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் ஊழல் பெருச்சாளிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யாமல், அரசியல் சாணக்கியத்தனத்தினால் எல்லா மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால், மக்கள் நிச்சயம் வெறுப்படைவார்கள். இதனால் உருவாகும் வெறுப்பு இரு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் எதிர்ப்பு வாக்குகளாக மோடியின் தலை மீது வந்து விழும். மக்கள் அளிக்கும் வாக்கு, நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவதற்காகத்தான் என்பதைப் பிரதமர் மோடி புரிந்துகொண்டு செயல்பட்டால், எதிர்கால இந்தியா இனிதாகவே இருக்கும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism